செம்மஞ்சேரி 9வது மாடிக்கு ஸ்டூலுடன் போன பெண்! ஐஏஎஸ் மகன் சொன்ன வார்த்தையால் திருப்பம்! திகைத்த சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: "நீ வேறு மதம், நான் வேறு மதம்.. உன்னை எங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.. நாம் திருமணம் செய்வது கஷ்டம்" என்று காதலன் சொன்னாராம்.. இதனால் காதலர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஏமாற்றத்தை தாங்க முடியாமல், சென்னையில் 9-வது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரையும் விட்டுவிட்டார் 24 வயது பரிதாபப்பெண்.. சென்னையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது...!!!

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பர்வீன் (24). பி.இ. பட்டதாரியான இவர், வேலை தேடி சென்னை வந்துள்ளார். கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் உள்ள தனியார் அப்பார்ட்மென்ட் ஒன்றில் தங்கி வந்தார்.

Semmancheri Chennai Sholinganallur IAS Officer Son

சோழிங்கநல்லூர் - திண்டுக்கல் ஜோடி

அதே திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வருண் பாலாஜி (33). ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி முத்துக்குமாரின் மகன். இவர் சோழிங்கநல்லூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பர்வீனுக்கும் வருண் பாலாஜிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

காதலனிடம் இருந்து வந்த திடீர் மாற்றம்

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே வருண் பாலாஜி, பர்வீனிடம் சரியாக பேசவில்லை என்று கூறப்படுகிறது. பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் அவர் பேசுவதை தவிர்த்து வந்தாராம்.. இதனால் குழப்பமும், மனவேதனையும் அடைந்த பர்வீன், இதுகுறித்து பேசுவதற்காக சோழிங்கநல்லூரில் உள்ள வருண் பாலாஜியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

பர்வீன் எடுத்த முடிவு

அங்கு இருவருக்குடையே இது தொடர்பாக பேச்சு நடந்துள்ளது. அப்போது, "என்னிடம் ஏன் சரியாகப் பேசுவதில்லை? எனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். நீ வீட்டுக்கு வந்து பேசு" என்று பர்வீன் சொன்னதாக தெரிகிறது.

அதற்கு வருண் பாலாஜி, "நீ வேறு மதம், நான் வேறு மதம், இந்த திருமணத்தை எங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.. நாம் திருமணம் செய்து கொள்வது கஷ்டம்" என்றாராம்.

இதையடுத்து, திருமணம் தொடர்பான பேச்சு, மத வேறுபாடு பிரச்சனையாக வெடித்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில், பர்வீன் வீட்டிலிருந்த நாற்காலியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். அதன் மீது ஏறி 9-வது மாடியிலிருந்து கீழே குதித்து விட்டார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் பர்வீனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக சொல்லிவிட்டார்கள்..

கதறும் பர்வீன் குடும்பத்தினர்

இதுகுறித்து உடனடியாக செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற போலீசார் பர்வீனின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு, பர்வீனை தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் வருண் பாலாஜியை கைது செய்து, விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

திருமணம் என்று வந்தபோது மதம் பிரச்சனையாக மாறி, "உன்னை எங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்று காதலன் கூறியதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, 24 வயதே ஆன பர்வீனின் உயிரிழப்பு அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது."

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+