பழசை மறந்து வாழ்த்து சொன்ன திரிஷா.‌. நயன்தாரா சில வருஷத்துக்கு முன்பு சொன்ன விஷயம் இப்போ வைரல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் இத்தனை வருடங்களாக முன்னணி நடிகைகளாக இருக்கும் நயன்தாரா, திரிஷா இருவரையும் சுற்றி ஒரு காலத்தில் பல செய்திகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் இப்போது நயன்தாராவின் பிறந்தநாளுக்கு திரிஷா அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து சொல்லி இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதை பார்த்த பலரும் இருவரும் இப்போது நெருக்கமாக இருப்பதை ரசித்து வரும் நிலையில் நயன்தாரா பல வருடங்களுக்கு முன்பு திரிஷா பற்றி பேசிய பழைய பேட்டி ஒன்றையும் நெட்டிசன்கள் மீண்டும் வைரல் ஆக்கி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் திரிஷா, நயன்தாரா, ஸ்ரேயா என பல நடிகைகள் ஒரே நேரத்தில் முன்னணி இடத்தில் இருந்தனர். பெரிய ஹீரோக்களின் படங்கள், அடுத்தடுத்து கிடைக்கும் வாய்ப்புகள், யார் அதிக படங்களில் நடிக்கிறார்கள், யாருக்கு அதிக வரவேற்பு கிடைக்கிறது? என சில நடிகைகளுக்குள் போட்டிகளும் இருந்திருக்கிறது. அதிலும் திரிஷா, நயன்தாரா என்றாலே ஒரு காலகட்டத்தில் அவர்களுக்குள் சண்டை என்ற பேச்சு அதிகமாகவே இருந்தது.

நடிகை நயன்தாரா பேட்டி

அந்த சமயத்தில் தான் நயன்தாரா ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது, அவரிடம், "நீங்கள், திரிஷா, ஸ்ரேயா மூன்று பேரும் ஒரே காலத்தில் ஹீரோயினிகளாக இருக்கிறீர்கள், நீங்க எல்லோரும் பிரண்ட்ஸ் தானே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நயன்தாரா , "பிரண்ட்ஸ் எல்லாம் கிடையாது, பிரண்ட்ஸ் என்பது பெரிய வார்த்தை. அதை எல்லாம் இவங்களுக்கு சொல்ல முடியாது. நாம பிரண்ட்ஸா இருந்தா தானே அந்த வார்த்தையை சொல்ல முடியும்.

பெண்களுக்குள் போட்டி

பொதுவாக பொண்ணுங்களுக்கு பொண்ணுங்கள பிடிக்காது, போட்டி இருக்கும் என்று சொல்லுவாங்க. எனக்கு யாரு மீதும் பொறாமையோ, ப்ராப்ளமோ கிடையாது. ஆனால் மற்றவர்களுக்கு இருக்கு என்ற போது நான் அதை கண்டுக்க மாட்டேன். அத பத்தி பேச மாட்டேன். திரிஷாவுக்கும் எனக்கும் சண்டை என்று செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. எனக்கு திரிஷா மீது எந்த பிரச்சனையும் இல்லை. ஒருவருக்கு நம்மை பிடிக்கவில்லை என்றால் அதற்காக நாம வருத்தப்படவோ அதை மாற்ற முயற்சி செய்யவும் வேண்டிய அவசியமே இல்லை.

Trisha Nayanthara Tamil Cinema

பொறாமை

இப்போ உண்மையான பிரண்ட்ஷிப் இருந்தால் நம்ம மீது தப்பு இருந்தாலோ அல்லது என்ன நடந்தது என்பதையோ அவங்க கிட்ட சொல்ல முயற்சி செய்யலாம். ஆனால் அப்படி எதுவுமே இல்லாத போது, நமக்கு அது தேவையில்லாத விஷயங்கள் தானே? பேப்பரில் கூட எங்க 2 பேருக்குள் ஈகோ பிரச்சனை என்றெல்லாம் எழுதிக் கொண்டு இருந்தாங்க. ஆனா அந்த அளவிற்கு பிரச்சனை இல்லை. ஒருவேளை ரெண்டு பேருக்கும், ரெண்டு பேரையும் பிடிக்காமல் கூட இருக்கலாம், அவ்வளவுதான்" என்று அந்த பேட்டியில் நயன்தாரா பேசியிருக்கிறார்.

த்ரிஷா பேட்டி

இப்படி நயன்தாராவின் பழைய பேட்டி மீண்டும் வைரல் ஆகி வரும் நிலையில் திரிஷாவும் முன்பு தங்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு பற்றி விளக்கம் கொடுத்திருந்தார். "இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்ததாக வெளியான செய்திகள் பெரும்பாலும் மீடியாவால் உருவாக்கப்பட்டவை. சில தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் பொதுவான நண்பர்கள் காரணமாக சின்ன மனக்கசப்பு ஏற்பட்டது. ஆனால் எங்களுக்குள் பெரிய சண்டை எதுவும் நடக்கவில்லை" என்றும் திரிஷா ஒரு பேட்டியில் பேசி இருந்தார்.

இதனால் இருவருக்கும் இடையே ஒரு சின்ன இடைவெளி ஏற்பட்டிருக்கலாம், அதையே பலரும் போட்டி, சண்டை என்று பெருதாக்கி பேசியிருக்கலாம். இப்படிப்பட்ட பழைய பேட்டிகளும் போட்டி பற்றிய செய்திகளும் மீண்டும் பேசப்பட்டு வரும் நேரத்தில் நயன்தாராவின் பிறந்தநாளுக்கு திரிஷா புகைப்படம் பகிர்ந்து வாழ்த்து தெரிவிப்பது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. எது எப்படியோ ஒரு காலத்தில் திரிஷா நயன்தாரா சண்டை என்று பேசப்பட்டு வந்த நிலையில் இப்போது இருவரும் ஒன்றாக புகைப்படம் பகிர்ந்து வாழ்த்து சொல்லும் அளவுக்கு இருப்பது நல்ல விஷயம் தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+