ஊழியர்களிடம் அன்பாக நடந்தது குத்தமா? பெங்களூரில் IT வேலையை விட்டு கஃபே தொடங்கியவருக்கு நேர்ந்த கதி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ''நான் ஐடி துறையில் இருந்து வந்தவன். 8 ஆண்டுகள் அங்கு பணியாற்றிவிட்டு புதிதாக கஃபேவை திறந்தேன். நான் எனது ஊழியர்களிடம் அன்பு, மரியாதை காட்டினேன். 8 மணிநேர ஷிப்ட் மட்டுமே கொடுத்து அவர்களின் கடன் தவணை, புதிய செல்போன் வாங்கி கொடுத்து அரவணைத்தேன். ஆனால் நான் காட்டிய அன்பும், மரியாதையை அவர்கள் துளியும் நினைக்காமல் அடுத்தடுத்து பணியை விட்டு செல்கின்றனர். நான் செய்த தவறை நீங்கள் செய்யாதீர்கள்'' என்று பெங்களூர் 'மடிகா கஃபே' உரிமையாளர் வெளியிட்டுள்ள வீடியோ இணையதளங்களில் கலங்க வைத்துள்ளது.

former-techie-turned-bengaluru-cafe-owner-now-release-frustration-video-about-his-employees-who-resi

அவரது பெயர் பிரிகேஷ். ஐடி நிறுவனத்தில் நல்ல வேலை. வாரம் 5 நாட்கள் பணி. 2 நாள் விடுமுறை. கைநிறைய சம்பளம். எவ்வளவு நாள் தான் ஐடி துறையிலேயே பணியாற்றுவது. சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்பது பிரிகேஷின் நீண்ட நாள் ஆசை.

இந்த ஆசையை நிறைவேற்றுவதற்கான நேரமும் வந்தது. ஐடி துறையில் 8 ஆண்டுகள் பணியாற்றிய பிரிகேஷ்க்கு சொந்தமாக பெங்களூர் கோரமங்களாவில் கஃபே ஒன்றை தொடங்கினார். அந்த கஃபேவின் பெயர் 'மடீகா சாய்'. இவர் தனது கஃபேவில் பணியாற்றும் ஊழியர்களிடம் மிகவும் கனிவாக நடந்து கொள்வார்.

ஐடி துறையில் பல சமயங்களில் ஒருநாளில் 8 மணிநேரத்தை கடந்தும் பணி செய்த அனுபவம் கொண்ட பிரிகேஷ் தனது ஊழியர்களை எந்த காரணம் கொண்டும் அப்படி நடத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். குறிப்பாக ஹோட்டல், கஃபேவில் பணியாற்றும் ஊழியர்கள் 11 மணிநேரம் முதல் 12 மணிநேரம் தீயில் அதிக நேரம் இருப்பதை அறிந்த பிரிகேஷ் தனது கஃபே ஊழியர்கள் 8 மணிநேர ஷிப்ட்டுக்கு பிறகு உடனடியாக வெளியேறலாம் என்பது தான் அவரது தாரக மந்திரமாகவே இருந்தது.

அதுமட்டுமின்றி ஊழியர்களுக்கு ஊழியர்களுக்கு தேவை என்றால் கேட்கும் நேரத்தில் சம்பள பணத்தில் 'அட்வான்ஸ்' வழங்குவது, புதிய செல்போன்கள் வாங்கி கொடுப்பது, கடன் தவணைகளை அடைப்பது, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பது உள்ளிட்டவற்றையும் செய்துள்ளார். இப்படி ஊழியர்களிடம் அன்பு காட்டிய பிரிகேஷ் ஏமாற்றமடைந்துள்ளார். ஊழியர்கள் அவரை ஏமாற்றிவிட்டு வேலையை விட்டு அடுத்தடுத்து நிற்பதாக அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக பிரிகேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''மன அழுத்தம் இல்லாத பணிச்சூழலை ஊழியர்கள் பாராட்டுவதற்க பதிலாக அவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். நான் 8 ஆண்டுகள் ஐடி துறையில் பணியாற்றினேன். அதன்பிறகு தான் கஃபே தொழிலுக்கு வந்தேன். கஃபேகளில் பணியாற்றும் ஊழியர்கள் படும் கஷ்டத்தை அறிந்து வைத்திருந்திருந்தேன். தினமும் 10 மணிநேரம் முதல் 11 மணிநேரம் வரை அவர்களிடம் வேலை வாங்கப்பட்டது.

இதனை மாற்ற நினைத்தேன். இதனால் ஊழியர்களுக்கு தினமும் 8 மணிநேர ஷிப்ட் மட்டுமே வழங்கினேன்.
அதோடு எனது ஊழியர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்று நினைத்தேன். இதுதான் என்னுடைய விதிமுறையாக இருந்தது.

ஊழியரை நன்றாக புரிந்து கொண்டால் அவர்களுக்கு முன்பணம் கொடுப்பேன். செல்போன் வாங்கி கொடப்பேன். யாருக்காவது கடன் தவணை கட்ட முடியாவிட்டால் அதனையும் கட்டி இருக்கிறேன். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி அவர்களின் வீடுகளுக்கே அனுப்பி வைப்பேன். ஆனால் ஊழியர்கள் அதனை எல்லாம் நினைத்து கூட பார்க்கவில்லை. ஒவ்வொருவரும் என்னை நன்றாக பயன்படுத்தி கொண்டு வேலையை விட்டு செல்கின்றனர்.

ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருவது இல்லை. தினசரி பணிகளையும் சரியாக செய்யாமல் உள்ளனர். நீங்கள் அவர்களை எப்படி நடத்துகிறீர்கள் அல்லது எவ்வளவு ஊதியம் வழங்குகிறீர்கள் என்பதில் அவர்களுக்கு அக்கறை இருப்பதில்லை. நான் எப்போதும் அவர்களுக்கு அதிகமான சம்பளம் தான் வழங்கினேன். ஆனாலும் அவர்கள் அதனை மதிக்கவில்லை.

ஊழியர்களிடம் மிகவும் கனிவாக நடந்து கொண்டதே என்னுடைய இந்த நிலைமைக்கு காரணம். இனி தவறு நடந்தால் நான் அதனை சாதாரணமாக விட்டுவிட்டு செல்லமாட்டேன்.நான் செய்த இந்த தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.'' என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது கவனம் பெற்றுள்ளது. அதோடு ஒவ்வொரு ஓணர்களும் தங்களின் ஊழியர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விவாதத்தை சமூக வலைதளங்களில் தூண்டி உள்ளது.

பலரும் தங்களின் அனுபவத்தை பகிர்ந்து வருகின்றனர். சொந்தமாக தொழில் தொடங்கிய சிலர், ''நானும் இதையெல்லாம் கடந்து வந்திருக்கிறேன்'' என்று கூறினார். இன்னொருவரோ, ''அளவுக்கு அதிகமாக காட்டப்படும் கருணை உங்களுக்கு பலவீனமாக மாறலாம். உங்களுக்கு கீழ் பணியாற்றுபவர்களிடம் அதிக கருணை காட்டாதீர்கள். இது தவறாக தோன்றலாம். ஆனால் அவர்களை ஒருவித பயத்தில் வைத்திருந்தால் தான் தொழிலுக்கு நல்லது. இதனால் எல்லைகளை வகுத்து கொள்ளுங்கள்'' என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+