₹27,000 கோடி பரந்தூர் விமான நிலையம் ரத்து.. விஜய் அரசுக்கு ஐகோர்டில் சிக்கலா? எழும் 4 கேள்விகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டத்தை முதல்வர் விஜய் கைவிட்டுவிட்டதாக அறிவித்துவிட்டார். ஆனால் அவர் அறிவித்து சில மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அதற்கான மாற்றான இடத்தை கண்டுபிடிப்பது பெரும் சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது.இந்த சூழலில் பரந்தூர் விமான நிலையத்தை கைவிட்டது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்றும் முதல்வர் விஜய்யின் அறிவிப்பை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் எடுக்க போகும் முடிவு தான் சென்னையில் விமான நிலையம் பரந்தூரில் அமையுமா இல்லையா என்பது முடிவாகும்.

உயர்நீதிமன்றத்தில் விசாரணை

பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்தை கைவிட தமிழக அரசு எடுத்த முடிவை அரசியலமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ப்பட்டுள்ளது. மேலும், திட்டத்தை கைவிடும் முடிவை மறுபரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கவுதமன் என்பவர் தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

27 000 Crore Parandur Airport Project Cancelled 4 Questions That Could Trouble Vijay Govt in HC

பொதுநல மனு

சென்னையில் மென்பொருள் ஆலோசகர் மற்றும் புத்தக வெளியீட்டாளர் மற்றும் விநியோகஸ்தர் ஆக உள்ள 59 வயதான ஜி. கவுதமன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறுகையில், "₹27,000 கோடி மதிப்பிலான பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டம், தற்போது ஆண்டுக்கு சுமார் 3 கோடி பயணிகளைக் கையாளும் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிலவும் கடுமையான விமானப் போக்குவரத்து திறன் பற்றாக்குறையைச் சமாளிக்கவே திட்டமிடப்பட்டது.

680 கோடி செலவிடப்பட்டுள்ளது

இந்தத் திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில், இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலத் தொகுப்பில் 48 சதவீதமான, 1,700 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை ஒருங்கிணைக்க தமிழக அரசு ஏற்கெனவே ₹680 கோடி பொது நிதியைச் செலவிட்டிருக்கிறது. பன்னூர், திருப்போரூர் மற்றும் படாளம் உள்ளிட்ட பிற இடங்களும் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே, பசுமை விமான நிலையம் அமைப்பதற்கு ஏற்ற இடமாக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.

2,325.44 ஹெக்டேர் நிலம்

2023ஆம் ஆண்டு, 1,527.32 ஹெக்டேர் தனியார் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. மேலும், 2,325.44 ஹெக்டேர் பரப்பளவில் திட்டமிடப்பட்ட விமான நிலையத்திற்காக 798.12 ஹெக்டேர் அரசு நிலத்தை ஒதுக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, புதிய தவெக அரசு திட்டத்தைக் கைவிட முடிவு செய்துள்ளது.

முதல்வர் விஜய் அறிவிப்பு

விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவது, விவசாயிகள் மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது உள்ளிட்ட காரணங்களைக் குறிப்பிட்டு, 2026 ஆகஸ்ட் 24ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்தத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். எனினும், அந்தப் பாதிப்புகளை உரிய நடவடிக்கைகள் மூலம் குறைக்க முடியும் .

எந்த அடிப்படையில் ரத்து

திட்டத்தைக் கைவிடுவதற்கான முடிவை அறிவித்தபோது, அதற்கு ஆதரவான தொழில்நுட்ப தரவுகள், நிபுணர் குழு அறிக்கை அல்லது ஒப்பீட்டு பொருளாதார ஆய்வு எதுவும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவில்லை . திட்டத்தை ரத்து செய்வதற்கு முன் எந்தவொரு மதிப்பீடும் மேற்கொள்ளப்படவில்லை.

சட்டவிரோதமானது

தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அந்த விதியின் கீழ் உடனடியாக விவாதம் நடத்த அனுமதிக்கப்படாது என்பதால், அதைப் பயன்படுத்தி இத்தகைய அறிவிப்பை வெளியிட்டது சட்டவிரோதமானது. வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை, பல்வேறு இடைக்கால நிவாரணங்களை நீதிமன்றம் அறிவிக்க வேண்டும்.

தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஆய்வுகள்

குறிப்பாக பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவதற்கான முடிவின் அடிப்படையாக இருந்த அனைத்து உள்நாட்டு நிர்வாகக் கோப்புகள், அரசுகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றங்கள், நிலத்தடி நீர் தொடர்பான அறிக்கைகள், தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் நிதிக் கணக்குக் குறிப்புகள் ஆகியவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.


சிப்காட்டிற்கு ஒதுக்கக்கூடாது

மேலும், 2026 ஆகஸ்ட் 24ஆம் தேதி சட்டப்பேரவை விதி 100-ஐ பயன்படுத்தி முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின் செயல்பாட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் , கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மறுவகைப்படுத்துதல், விற்பனை செய்தல், மாற்றுதல் அல்லது வேறு திட்டங்களுக்கு ஒதுக்குதல் ஆகியவற்றை சிப்காட் மற்றும் TIDCO மேற்கொள்ளக் கூடாது " இவ்வாறு அந்த பொதுநல மனுவில் கவுதமன் கூறியுள்ளார். இந்த மனுவினை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு விரைவில் விசாரிக்க உள்ளது. விசாரணையின் முடிவில் தான் பரந்தூர் தொடர்பான சிக்கல்களுக்கு விடை கிடைக்கும்.

மத்திய அரசிடம் அனுமதி வரவில்லை

முன்னதாக விஜய் தலைமையிலான தவெக அரசு செய்யூர் மற்றும் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மனலூர் ஆகிய இரண்டு இடங்களை மாற்று விமான நிலையத்திற்காகப் பரிசீலித்து, Airports Authority of India மற்றும் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் முன் சாத்தியக்கூறு ஆய்வு தொடர்பாக பதில் கோரியுள்ளது. ஆனால் இந்த இரண்டு இடங்களுக்கும் மத்திய அரசிடமிருந்து அனுமதி இன்னும் வரவில்லை..

செய்யூர், கும்மிடிப்பூண்டி

குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த பகுதிகளின் அருகில் உள்ளதால் சில கட்டுப்பாடுகள் இருக்கலாம் என்கிறார்கள். அதேபோல் - மனலூர் / கும்மிடிப்பூண்டி சைட்டை பொறுத்தவரை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தின் அருகாமை காரணமாக விமானப் போக்குவரத்து மற்றும் வான்வெளி பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் இருக்கலாம் என்கிறார்கள். இந்தக் காரணங்களால் இரண்டு இடங்களுக்கும் அனுமதி கிடைப்பது கடினமாக இருக்கலாம் என்றே தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன, உயர்நீதிமன்றம் பிறப்பிக்க போகும் உத்தரவு என்ன என்பதை பொறுத்தே பரந்தூரில் வருமா இல்லையா என்பது தெரியவரும்.

கண்டுபிடிக்க முடியுமா என்பது சவால்

தற்போதைய சூழலில் பரந்தூரைத் தவிர்த்து, சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கு அரசால் தேர்வு செய்யக்கூடிய, தொழில்நுட்ப ரீதியாகவும் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ரீதியாகவும் சிக்கல் இல்லாத இடம் உண்மையில் இருக்கிறதா? என்பதுதான். அதேபோல் பரந்தூர் திட்டத்தை கைவிட்ட தவெக அரசு, அதைவிடக் குறைவான பாதிப்புகளுடன் கூடிய இடத்தை உண்மையில் கண்டுபிடிக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+