கோவை பைக் ஷோரும் பெண் திவ்யா வீடியோ.. திட்டமிட்டு சிக்க வச்சுட்டாங்க.. முன்னாள் தவெக நிர்வாகி வீடியோ

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டம் வேடபட்டி பேரூராட்சி நகரச் செயலாளராகப் பதவி வகித்து வந்த நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டதாகக் கூறும் முன்னாள் நிர்வாகி, தன்னைத் திட்டமிட்டு ஒரு விவகாரத்தில் சிக்க வைத்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் அருகே ஷோ ரூமில் நுழைந்து, இருசக்கர வாகனத்தை தவெக நிர்வாகி எடுத்துச் செல்ல முயன்றதாக குற்றம்சாட்டி ஒரு பெண் வீடியோ வெளியிட்டார். கணவர் இல்லாத நேரத்தில் ஷோ ரூமில் நுழைந்து அத்துமீறியதாக வீடியோவில் அந்த பெண் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதையடுத்து தவெக கட்சியில் இருந்து வேடபட்டி பேரூராட்சி நகரச் செயலாளராகப் பதவி வகித்து வந்த பிரகாஷ் கட்சியில் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

Former Coimbatore TVK functionary alleges he was framed as part of a calculated plan


சிசிடிவி காட்சிகள் எங்கே

இந்த விவகாரத்தில் தான் சிக்க வைக்கப்பட்டுள்ளதா பிரகாஷ் வீடியோ வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது: "சமூக வலைதளங்களில் இரண்டு நாட்களுக்கு முன்பு, நான் ஒரு கடைக்குச் சென்று ரகளையில் ஈடுபட்டதாக அவதூறு பரப்பப்பட்டுள்ளது. திட்டமிட்டு என்னை அந்தச் சம்பவத்தில் சிக்க வைத்துள்ளார்கள்.

சம்பந்தப்பட்ட ஷோரூமில் உள்ள சிசிடிவி காட்சிகளை இதுவரை வெளியிடாதது ஏன்? காவல்துறையினர் உடனடியாக அந்த சிசிடிவி காட்சிகளைப் பெற்று பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும்.

திவ்யா கூறியது தவறு

மேலும், திவ்யா என்பவர் செய்தியாளர் சந்திப்பில் நான் மதுபோதையில் இருந்ததாகக் கூறியிருப்பது முற்றிலும் தவறான தகவல். சம்பவத்தன்று நான் மதுபோதையில் இல்லை என்பதை நிரூபிக்க ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளத் தயாராக இருக்கிறேன். ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ரத்த தானம் செய்ததற்கான சான்றிதழும் என்னிடம் உள்ளது.

முயற்சிகள் நடந்தன

நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதாலேயே கட்சிப் பொறுப்பில் இருந்து என்னை நீக்குவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. என்னுடன் பணியாற்றும் சில கட்சி நிர்வாகிகள், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் கீழ் எவ்வாறு பணியாற்றுவது எனப் பேசியுள்ளார்கள்.
திவ்யா மற்றும் மகாராஜன் ஆகியோர் மீது பல்வேறு புகார்கள் உள்ளன. என்னை நிற ரீதியாகவும் நிதி ரீதியாகவும் குறிவைத்து செயல்பட்டதற்கான ஆடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன; அவற்றை அடுத்தடுத்து வெளியிட உள்ளேன்.

நிரூபிக்க தயார்

எனது குற்றச்சாட்டுகளை சட்டத்தின் முன்பு நிரூபிக்கத் தயாராக இருக்கிறேன். என் மீது தவறு இருப்பது விசாரணையில் தெரியவந்தால் காவல்துறையும் கட்சியும் எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் கட்டுப்படுகிறேன். தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுக்கிறேன். எனக்கு எந்தக் கட்சிப் பதவியும் வேண்டாம்; கட்சியின் அடிப்படை உறுப்பினராக மட்டும் மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும். கட்சிக்காகத் தொடர்ந்து உழைக்கவும், கொடி பிடித்துப் பிரசாரம் செய்யவும் நான் தயாராக இருக்கிறேன். எனது வாழ்நாளின் இறுதி வரையிலும் கட்சியின் மீது கொண்டுள்ள விசுவாசம் தொடரும்.

கோரிக்கை

என்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் அடுத்தடுத்து வெளியிட உள்ளேன். ஊடக நண்பர்கள் எனது தரப்பு ஆதாரங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். எனது புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிக்கொண்டு வந்து, மீண்டும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பை வழங்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை" இவ்வாறு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+