இனி எவ்வளவு பணம் அனுப்பினாலும்.. UPI பண பரிவர்த்தனைக்கு ரூ.5 கட்டணம்? ஆனா ஒரு ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: யுபிஐ மூலம் வணிகர்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கு, அதாவது Merchant-to-Merchant பரிவர்த்தனைகளுக்கு இனி 5 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.300 வரை கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று வணிகர்கள் மத்தியில் அச்சம் நிலவிய சூழலில், இப்போது தான் அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பண பரிவர்த்தனைகள் யுபிஐ மூலமாகவே நடைபெறுகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ரூ.5ல் தொடங்கி லட்ச கணக்கில் வரை அனைத்துமே யுபிஐ மூலமாகவே நடைபெறுகிறது. இதற்கிடையே சமீப காலமாகவே யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் என்பதே பேசுபொருளாக இருந்தது.

UPI Charges UPI UPI Merchant Transactions fees

யுபிஐ கட்டணம்

கடந்த அக்டோபர் 15ம் தேதி முதல் இந்த கட்டணம் அமலுக்கு வரும் என்ற அறிவிப்பு வெளியானது. பின்னர் தீபாவளி பண்டிகை முடியும் வரை இந்த ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் தான் இப்போது மீண்டும் இது பேசுபொருளாகியுள்ளது. அதாவது வணிகர்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும் Merchant-to-Merchant பரிவர்த்தனைகளுக்கு இனி ரூ.5 என்ற நிலையான கட்டணம் விதிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.300 வரை கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று வெளியான தகவலால் வணிகர்கள் அச்சமடைந்திருந்த நிலையில், இந்த தகவல் நிம்மதி தருவதாக இருக்கிறது. அதேநேரம் இந்த கட்டண முறை எப்போது அமலுக்கு வரும் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

யாருக்கு பொருந்தும்

அப்போ நம்ம எவ்வளவு பணம் அனுப்பினாலும் ரூ.5 கட்டணம் பிடிப்பார்களா என்ற கேள்வி பலருக்கும் வரும். சாதாரண பொதுமக்கள் பணம் அனுப்பும்போது இந்த கட்டணம் பொருந்தாது. B2B எனப்படும் வணிகர்களுக்கு இடையே அதாவது மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் இடையிலான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.

இப்போது யுபிஐ மூலம் வணிகர்களுக்கு இடையே நடைபெறும் பரிவர்த்தனைகளின் சராசரி மதிப்பு ரூ.20,000 முதல் ரூ.40,000 வரை இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கு சதவீத அடிப்படையில் கட்டணம் வசூலித்தால் அது மிக பெரிய தொகையாக செல்லும். இதன் காரணமாகவே எவ்வளவு பணம் அனுப்பினாலும் ரூ.5 கட்டணம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

என்ன வித்தியாசம்

செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட கட்டணத்திற்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட கட்டணம் என்பது P2M கட்டணமாகும். அதாவது பொதுமக்கள் வணிகர்களுக்கு அனுப்பும்போது பிடித்தம் செய்யப்படும் கட்டணம். அது 0.4 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இப்போது வெளியாகியுள்ள இந்த கட்டணம் B2B அதாவது வணிகர்களுக்கு இடையேயான கட்டணமாகும். நாம் சாதாரணமாக நண்பர்களுக்கோ அல்லது கடைகளுக்கோ பணம் அனுப்பும் போது இந்த கட்டணம் பொருந்தாது.

கோரிக்கை

இருப்பினும், இந்த கட்டணத்திற்கு வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். யுபிஐக்கு கட்டணம் விதிக்கும் MDR கட்டமைப்பில் இருந்து வணிகர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இப்போது பெரும்பாலான பரிவர்த்தனைகள் யுபிஐ மூலமாகவே நடக்கும் சூழலில், கட்டணம் விதிக்கப்படும்போது, அது சிறு விற்பனையாளர்களை நேரடியாக பாதிக்கும் என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், கட்டணத்துக்கு தனியாக ஜிஎஸ்டி வசூலிப்பது குறித்தும் ஆராய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+