கொடைக்கானல் போறீங்களா? அதிகாலை வாக்கிங் வேண்டாவே வேண்டாம்! டாக்டர்கள் சீரியஸ் அட்வைஸ்! என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: கொடைக்கானல் மலை பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குளிர், அதிகாலை வேளையில் ஏரிச் சாலையில் நடைப் பயிற்சி மேற்கொள்ள தவிர்க்க வேண்டும், காற்று புகாத இடங்களில் தீ மூட்டி குளிர் காய வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், இருதய நோயாளிகள் , ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் அதிகாலை வேளையில் நடைப் பயிற்சி செய்வதை தவிர்த்து, வெயில் வந்தவுடன் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது என்றும் தெரிவித்துள்ளனர்.

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் இந்த ஆண்டு பனிக் காலம் துவங்கியுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலை கிராமங்கள் முழுவதும் நீர் பனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிக அளவில் இருந்து வருகிறது.

Kodaikanal Cold health

மேலும் நேற்று இரவு முதல் கடுமையான பனி நிலவி வந்த நிலையில் இன்று காலை கொடைக்கானல் நட்சத்திர ஏரி, கீழ் பூமி, மற்றும் ஜிம்கானா போன்ற பகுதிகளில் 9 டிகிரி செல்சியஸை தொட்டுள்ளது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள புல்வெளிகள்,செடி கொடிகள் மீது நீர் பனி துளிகள் முத்து முத்தாக காட்சியளிக்கிறது.

கொடைக்கானல் குளிர்

மேலும் காலை நேரத்தில் நட்சத்திர ஏரியில் சூரிய ஒளி பட்டதும் நீர் ஆவியாகி மேலே பறந்துச் சென்ற காட்சி கண்களுக்கு விருந்தாக அமைந்தது. அதே நேரத்தில் கொடைக்கானலில் நாளுக்கு நாள் குளிர் அதிகரித்து வரும் நிலையில் தற்பொழுது காலை நேரத்தில் ஏரியை சுற்றி சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் அவர்களுக்கு மருத்துவர்கள் சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

அதிகாலை நடைப்பயிற்சி

இதில் இருதய நோயாளிகள், ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் அதிகாலை வேளையில் நடைபயிற்சி செய்வதை தவிர்த்து , வெயில் வந்தவுடன் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது என்று தெரிவித்துள்ளனர், குறிப்பாக சிலர் குளிருக்கு காற்று புகாத இடம் மற்றும் தங்கள் அறைக்குள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர், அவ்வாறு செய்தால் சில நேரத்தில் தீயில் இருந்து ஒரு சில நச்சு தன்மை வெளியேறி உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்றும், குளிருக்கு ஏற்ற ஆடைகளை பயன்படுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சுற்றுலா பயணிகள்

தொடர்ந்து கொடைக்கானல் மலை பகுதிகளில் நாளைக்கு நாள் குளிர் அதிகரித்து வரும் நிலையில் இனி வரும் நாட்களில் குறைவான செல்சியஸ் வரக்கூடிய நிலை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கார்பன் மோனாக்சைடு ஆபத்து

கடந்த காலங்களில் இது போன்ற உறை பனிக் காலத்தில் மரணங்கள் நடந்துள்ளதையும் மருத்துவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அதாவது கடந்தாண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்திருந்த இளைஞர்கள் சிலர் தங்கள் அறையிலேயே பார்பிக்யூ சிக்கன் செய்து சாப்பிட்டுள்ளனர். குளிருக்கு இதமாக இருந்ததால் அறையிலேயே அந்த நெருப்பினை அவர்கள் அணைக்காமலேயே விட்டுவிட்டனர்.

மூச்சு திணறல்

பனிக்காலத்தில் வீடுகளுக்குள் நெருப்பை மூட்டும்போது கார்பன் டை ஆக்சைடு உடன் கார்பன் மோனாக்சைடும் வெளியாகும். இது பூட்டிய அறைகளுக்குள் இருப்பவர்களுக்கு மூச்சு திணறலை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக வயதானவர்கள், இருதய நோய் உள்ளவர்கள், சுவாச கோளாறு உள்ளவர்கள் இந்த காற்றை சுவாசிக்கும் போது மரணம் நிகழ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மருத்துவர்கள் எச்சரிக்கை

மேலும் உறை பனிக் காலத்தின் போது அதிகாலை நேரங்களில் காற்றின் அளவு மிக அதிகமாக இருக்கும் வயதானவர்கள் நடைபயிற்சி செல்லும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டால் ஆக்சிஜனோடு பனியும் சேர்ந்து நுரையீரல் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பனி அதிகம் உள்ள நேரங்களில் நடைபயிற்சி செல்வதை தவிர்த்து வெயில் வந்த பிறகு அதனை செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+