முத்துக்குமரன் சர்ச்சை வாஹதா மீது இப்போ புகார்.. ஹிஜாப் விவாகரத்தில் கட்சி எடுத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் முத்துக்குமரன் மீது புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய இன்ஸ்டா பிரபலம் வாஹிதா, இப்போது மற்றொரு புகாரில் சிக்கி இருக்கிறார். இஸ்லாமிய பெண்களின் மத அடையாளமான ஹிஜாபை தனிப்பட்ட சர்ச்சைகளுக்காக தவறான நோக்கத்தில் பயன்படுத்துவதாக கூறி வாஹிதா மீது இந்திய தேசிய லீக் கட்சி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறது. ஏற்கனவே முத்துக்குமரன் வாஹிதா விவகாரம் சோசியல் மீடியாவில் விவாதம் ஆகி வந்த நிலையில் இப்போது ஹிஜாப் தொடர்பாக கட்சி அளித்திருக்கும் இந்த புகார் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான முத்துக்குமரன் மீது வாஹிதா கொடுத்த புகார் ஏற்கனவே சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. அதிலும், "முத்துக்குமரன் என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என வாக்கு கொடுத்து, என்னுடன் உடல் ரீதியாக தொடர்பு வைத்துவிட்டு என்னை திருமணம் செய்ய மறுக்கிறார்" என்று வாஹதா வீடியோக்கள் வெளியிட்டது, தற்கொலை முயற்சி செய்தது, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தது என தொடர்ந்து சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இன்ஸ்டா பிரபலம் வாஹதா

இப்படி ஒரு சர்ச்சை ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இப்போது இந்திய தேசிய லீக் கட்சி கொடுத்திருக்கும் புகார் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. இஸ்லாமிய பெண்களின் மத மற்றும் கலாச்சார அடையாளமாக இருக்கும் ஹிஜாபை தனிப்பட்ட சர்ச்சைக்காக தவறான நோக்கத்தில் பயன்படுத்தி அதன் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக வாஹதா மீது இந்திய தேசிய லீக் கட்சி குற்றச்சாட்டு முன் வைத்திருக்கிறது.

Wahidha Muthukumaran Bigg Boss

வாஹதா மீது புகார்

இது தொடர்பாக வாஹதா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இந்திய தேசிய லீக் கட்சி தென் சென்னை மகளிர் அணியின் மாவட்ட தலைவியும் வழக்கறிஞருமான சுமையா பேகம் தலைமையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அளித்த போது கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பல்லாவரம் ரஹமதுல்லா, மாநில வழக்கறிஞர் அணி தலைவர் இர்ஃபான் பாஷா, தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில தலைவர் பைராஸ் முஷாஹித் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

புகார் மனு

இந்த புகார் அளிக்கும் நிகழ்வில் தென்சென்னை மாவட்ட மாணவர் அணி தலைவர் அப்பாஸ் மற்றும் மாலிக், நைனா, சல்மான், வழக்கறிஞர் ராம் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தனிப்பட்ட நபர்களுக்கு இடையே ஏற்பட்ட சர்ச்சை இப்போது ஹிஜாபின் மத மற்றும் கலாச்சார கண்ணியம் குறித்த புகாராக மாறி இருப்பதால் இந்த விவாகரம் மீண்டும் சோசியல் மீடியாவில் பேச தொடங்கியுள்ளது. முத்துக்குமரன் மீது வாஹிதா புகார் கொடுத்த விவாகரத்தை தொடர்பு இப்போது வாஹிதா மீது கட்சி புகார் அளித்திருப்பது இந்த சர்ச்சையில் அடுத்த கட்டமாக பார்க்கப்படுகிறது.

Wahidha Muthukumaran Bigg Boss

ஏற்கனவே இருந்த பஞ்சாயத்து

இருந்தாலும் இந்திய தேசிய லீக் கட்சி அளித்திருப்பது புகார் மனு மட்டுமே. அதில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக காவல்துறை விசாரணை அல்லது நடவடிக்கை எடுத்து இருப்பதாக தகவல்கள் கிடைக்கவில்லை. புகார் அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த விவகாரத்தில் அடுத்ததாக என்ன நடக்கிறது என்பது தான் இப்போது கவனிக்கப்படுகிறது. ஏற்கனவே வாஹதா சோசியல் மீடியாவில் ஹிஜாப் அணிந்தபடி டான்ஸ் ஆடி, காமெடி வீடியோக்கள் போடுவது ஆரம்பத்திலேயே சர்ச்சையானது. அப்போது அவருடைய சொந்த ஊர்காரர்கள் சிலர் இவரை விமர்சித்ததால், தனது சொந்த ஊரான கடையநல்லூர் காரர்களை திட்டி இவர் வெளியிட்ட வீடியோ சில மாதங்களுக்கு முன்பு வைரல் ஆனது.

திருமண கோலத்தில் பிக் பாஸ் முத்துக்குமரன்.. பொண்ணு யாரு தெரியுதா? கடுப்பான இன்ஸ்டா பிரபலம் வாஹதா பதிவு
அந்த கடையநல்லூர் சர்ச்சை வீடியோ வெளியிட்ட பிறகுதான் அவருக்கு சப்போர்ட்டாக முத்துக்குமரன் மெசேஜ் அனுப்பி அவருடன் பழகினார் என வாஹதா சொல்லி இருக்கிறார். இப்போது மீண்டும் வாஹதாவுக்கு எதிராக பிரச்சனை தொடங்கி இருக்கிறது. இது குறித்து நாம் அவரிடம் விளக்கம் கேட்க முயற்சி செய்தோம், அதற்கு அவர் இன்னும் பதில் கொடுக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+