திருமண கோலத்தில் பிக் பாஸ் முத்துக்குமரன்.. பொண்ணு யாரு தெரியுதா? கடுப்பான இன்ஸ்டா பிரபலம் வாஹதா பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் கல்யாண கோலத்தில் இருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரலகி ஆகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு பெண்ணுக்கு அவர் தாலி கட்டி இருக்கிறார். அதற்கு முத்துக்குமரன் மீது பல குற்றச்சாட்டுகளை சொல்லிக் கொண்டிருக்கும் இன்ஸ்டா பிரபலம் வாஹதா கொடுத்த கமென்ட் இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது.

முத்துக்குமரன் பற்றி சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே சோசியல் மீடியாவில் இவருக்கு பிரபலம் இருக்கு. தனியார் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டாலும் சோசியல் மீடியாவில் பெண்களுக்கு சப்போர்ட் ஆகவும் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமான முத்துக்குமரன் மீது இன்ஸ்டா பிரபலம் வாஹதா என்ற பெண் குற்றச்சாட்டு வைத்திருந்தார். அதில் முத்துக்குமரன் என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி ஆசை வார்த்தை காட்டி என்னுடன் உடலுறவு வைத்துவிட்டு, என்னை ஏமாற்றி விட்டார் என்று சொல்லி இருந்தார். அதோடு தற்கொலை முயற்சியும் செய்திருந்தார். அதற்கு காரணம் முத்துக்குமரன் என்று ஒரு வீடியோவை வெளியிட்டு பிறகு அந்த வீடியோவை டெலிட் செய்திருந்தார்.

Bigg Boss Muthukumaran

முத்துக்குமரன் சர்ச்சை

இப்படி முத்துக்குமரன் பற்றி அவர் சொன்ன விஷயம் பெரிதாக பேசப்பட்டது. மருத்துவமனையில் இருந்து வந்த பிறகு கூட விடாமல் முத்துக்குமரன் பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார். அதிலும் சில நாட்களுக்கு முன்பு முத்துக்குமரன் மீது புகார் கொடுப்பதற்காக நான் காவல் நிலையத்திற்கு வந்திருக்கிறேன் ஆனால் அவருடைய பெற்றோருடன் பேசிப் பார்த்தேன் அவர்களும் என்னுடைய பெற்றோரைப் போலவே அப்ராணியாக இருக்கிறார்கள். நான் முத்துக்குமரன் மீது புகார் கொடுத்தால் பெற்றோர்களும் பாதிக்கப்படுவார்கள் அதனால் என்ன முடிவெடுக்க என்று தெரியாமல் இருக்கிறேன், நீங்க என்ன சொல்லுறீங்க? என்று ரசிகர்களிடம் கருத்து கேட்டு ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். இதுவும் பேசப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் முத்துக்குமரன் திருமணம்

இப்படி சூழல் முத்துக்குமரனுக்கு எதிராக சுற்றிக் கொண்டிருக்கும் சமயத்தில் முத்துக்குமரன் மணக்கோலத்தில் ஒரு பெண்ணுக்கு தாலி கட்டும் வீடியோ வெளியாகி இருக்கிறது. அதை பார்த்து பலருக்கும் அதிர்ச்சி. ஆனால் முத்துக்குமரன் திருமணம் செய்தது நிஜ கல்யாணம் அல்ல, அது வீட்டில மாப்பிள்ளை என்ற ஷார்ட் பிலிம்க்கான சூட்டிங். முத்துக்குமரன் தாலி கட்டி இருக்கும் பெண் கூட நடிகை தான். அவரும் ஏற்கனவே சில ஷார்ட் பிலிமில் நடித்தவர்.

Bigg Boss Muthukumaran

ஆனால் முத்துகுமரனின் திருமண வீடியோவுக்கு கீழே வாஹதாவும் ஒரு எமோஜி பகிர்ந்து இருக்கிறார். அதில் அடிக்க துடைப்பத்தை எடுத்துக் கொண்டு வருவது போல இருக்கிறது. அந்த வீடியோ முழுக்க பலர் வாஹதாவே டேக் செய்து வைத்திருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் கூட ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் துடப்பத்தை எடுத்து அடிப்பதுபோல ரீல் போட்டு இருக்கிறார். இது கூட முத்துக்குமரனுக்கு தானா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இரட்டை நிலைப்பாடு

மொத்தத்தில் நடக்கும் விஷயங்களை பார்த்தால் முத்துக்குமாரனுக்கு இது போதாத காலம் என்றுதான் தெரிகிறது. அவர் தன்னை பற்றி சுற்றிக் கொண்டிருக்கும் சர்ச்சைகளுக்கு மத்தியில் தனது வேலையில் கவனத்தை செலுத்தி வருகிறார். ஆனால் வாஹதா இரட்டை நிலைப்பாட்டிலேயே வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு நேரம் நான் முத்துக்குமரனை மன்னித்து விட்டு விட்டேன், இனி அவரைப் பற்றி நான் பேசப் போவதில்லை, என்னுடைய பார்க்கப் போகிறேன் என்று சொல்கிறார். ஆனால் அடுத்த சில மணி நேரத்தில் இன்னொரு வீடியோ வெளியிட்டு நான் முத்துக்குமரனை சும்மா விட மாட்டேன் அவரை பழி வாங்குவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இதையெல்லாம் பார்க்கும் நமக்கு இதற்கு இல்லையா சார் எண்ட் என்று தோன்றுகிறது. ஏற்கனவே முத்துக்குமரன் தான் வாஹதா மீது கமிஷனர் ஆபீசில் புகார் கொடுத்திருந்தார். அதற்கு காவல்துறையினர், நீங்கள் கொடுத்த புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை. அதனால் நீதிமன்றத்தை நாடி கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். அதனால் இவர்களுடைய பிரச்சனை நீதிமன்றம் மூலம் தீர்க்கப்படுமா? அல்லது தொடர்ந்து இது போல தான் சோசியல் மீடியாவில் வீடியோக்கள் குவிந்து கொண்டிருக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+