இந்திய ஐடி ஊழியர்களின் கனவில் விழுந்த மண்.. அமெரிக்கா 'கிரீன் கார்டு' விதிகளில் கடுமையான மாற்றம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் வேலை செய்து செட்டில் ஆக வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. ஆனால் அந்த கனவில் கொஞ்சம் கொஞ்சமாக மண் விழுந்து வந்தது.இனி அந்த எண்ணத்தையே மறந்துவிடுங்கள் என்பது போல் அமெரிக்கா அதிபர் டிரம்ப் முடிவெடுத்துள்ளார். சொந்த நாட்டினருக்கே வேலை அதிகம் கிடைக்க வேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார். அதற்காக அமெரிக்காவில் வேலைவாய்ப்பு சார்ந்த 'கிரீன் கார்டு' விதிகளில் கடுமையான மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.இந்த மாற்றம் இந்தியர்களுக்கு கவலை தருவதாக இருக்கிறது.

அமெரிக்காவில் கிரீன் கார்டு வாங்கி நிரந்தரமாக குடியேற விரும்பும் இந்தியர்களுக்கு மிகப்பெரிய அறிவிப்பு வந்துள்ளது. , மிக உயர்ந்த பதவிகளில் மற்றும் அதிபுத்திசாலி வேலைகளுக்கு சென்றால் தான் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற முடியும். அதாவது சிறப்பு தகுதி அடிப்படையில், இவர் அமெரிக்காவில் செட்டில் ஆனால் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய நன்மை என்று அமெரிக்கா நினைத்தால் தான் கிரீன்கார்டு கிடைக்கும். இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினருக்கு வேலைவாய்ப்பு அடிப்படையிலான நிரந்தரக் குடியுரிமை வழங்குவதற்கான விதிகளில் கடுமையான மாற்றங்களை அமெரிக்க அரசு தற்போது முன்மொழிந்திருக்கிறது.

US green card Indian

நர்சுகள், பிசியோதெரபிஸ்டுகள் மற்றும் உயர் திறன் கொண்ட பணியிடங்களில் அமெரிக்க குடிமக்களுக்கே முதல் முன்னுரிமை கிடைப்பதை உறுதி செய்ய அமெரிக்கா விரும்புகிறது. இதற்காகவே த 20 ஆண்டுகளில் முதல்முறையாக 'பெர்ம்' எனப்படும் நிரந்தரத் தொழிலாளர் சான்றிதழ் நடைமுறையில் அமெரிக்க தொழிலாளர் துறை அதிரடியான பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வருகிறது.

அமெரிக்க அரசு கொண்டு வந்துள்ள புது விதிமுறைகளின்படி, குறிப்பிட்ட வெளிநாட்டு ஊழியர்களின் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு நிபந்தனைகளை இனி நிறுவனங்கள் வடிவமைக்க முடியாது. அதற்கு அமெரிக்கா அரசு தடை விதித்துள்ளது. உள்ளூர் மக்கள் வேலை பெறவேண்டும் என்பதற்காகவே வழக்கமான ஆட்சேர்ப்பு நடைமுறைகள் என்பது இனி அமெரிக்காவில் கடுமையாகி உள்ளது., செய்தித்தாள் விளம்பரங்களுக்குப் பதிலாக நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள், வேலைவாய்ப்புத் தளங்கள், சமூக ஊடகங்கள், வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் கல்லூரி வளாக நேர்காணல்கள் மூலமே ஆட்சேர்ப்பு நடத்த வேண்டும்.

குறிப்பாக, பணியிடங்களுக்கான விளம்பரக் காலம் தற்போதைய 30 நாட்களில் இருந்து 90 நாட்களாக (3 மடங்கு) நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அந்த விளம்பரங்களில் ஊதிய விவரத்தையும் வெளிப்படையாக அறிவிகக வேண்டும். தகுதியான அமெரிக்கர்களைப் பணியமர்த்த உண்மையான முயற்சிகளை மேற்கொண்டதை நிறுவனங்கள் உரிய ஆவணங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்றும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து அமெரிக்க தொழிலாளர் துறை அமைச்சர் கீத் சோண்டர்லிங் கூறுகையில், "அமெரிக்கத் தொழிலாளர்கள் உலகிலேயே சிறந்தவர்கள்; உயர் திறன் கொண்ட வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கே முதல் முன்னுரிமை தரப்பட வேண்டும். இப்போது விதிகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி நிறுவனங்கள் அமெரிக்கர்களை முழுமையாகப் பரிசீலிக்காமல் வெளிநாட்டினருக்கு விசா ஸ்பான்சர் செய்வதை இந்தப் புதிய விதி தடுக்கும்" என்றார்.

அமெரிக்கா அரசு, நர்சுகள் மற்றும் பிசியோதெரபிஸ்டுகள் உள்ளிட்ட சில பிரிவினருக்கு முதல் அட்டவணையின் (ஷெட்யூல் ஏ) கீழ் வழங்கப்பட்டிருந்த நிர்வாக விலக்குகளை நீக்குவதாக முன்மொழிந்துள்ளது. இதன் மூலம் இனி அவர்களைப் பணியமர்த்துவதற்கும் முழுமையான ஆட்சேர்ப்பு சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க ஊழியர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில், கடந்த 2 ஆண்டுகளில் (முன்பு 6 மாதங்களாக இருந்தது) அமெரிக்க ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிறுவனங்கள், அதே போன்ற பணிகளுக்கு வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்த விண்ணப்பிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், விண்ணப்பச் செயல்முறை முழுவதும் தகுதியான பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க ஊழியர்களுக்கு முன்னுரிமை அளித்துப் பரிசீலிக்க வேண்டும் என்றும் புதிய விதிகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. புதிய வரைவு விதிகள் வருகிற ஜனவரி 19-ந்தேதி வரை (60 நாட்கள்) பொதுமக்கள் கருத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கருத்துக்களுக்கு பிறகு இறுதி விதிகள் அமலுக்கு வரும். இது இந்திய ஐ.டி. ஊழியர்கள் மற்றும் நர்சுகளுக்கு சிக்கலாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+