"இடுப்பையே பார்க்குறான், ஒரு பொண்ணைகூட விடாம" தவெக பெண் நிர்வாகிகள் பேசுவதாக வெளியான ஆம்பூர் ஆடியோ

Subscribe to Oneindia Tamil

வேலூர்: தவெகவில் அடுத்தடுத்து எழும் புகார்கள் கட்சிக்குள் புதிய சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. நிர்வாகிகள் மீதான பாலியல் புகார்கள், பணம் பெற்றதாக எழும் குற்றச்சாட்டுகள் என சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு பெண் நிர்வாகிகள் பேசிக்கொண்டதாக வெளியாகியுள்ள ஆடியோ புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ உண்மையா?

சமீபத்தில், கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜாவுக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டை அருள் விக்னேஷ் மறுத்துள்ளார். இருந்தாலும் அதிமுக மற்றும் திமுக தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி கொண்டிருக்கிறார்கள்.

Ambur TVK TVK Audio TVK Controversy

சர்ச்சைகளில் தவெக நிர்வாகிகள்

4 நாட்களுக்கு முன்புகூட திருவண்ணாமலையில் மாவட்ட செயலாளர் சத்யா மீது பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு புகார்களை முன்வைத்த பெண்கள், கட்சி அலுவலகத்தை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2 நாட்களுக்கு முன்புகூட, கோவை வேடப்பட்டி நிர்வாகி பிரகாஷ் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். கட்சிப் பதவி வாங்கி தருவதாக கூறி பணம் பெற்ற விவகாரத்தில், கோவை ஷோரூம் உரிமையாளர் மகாராஜனுக்கும் பிரகாஷுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் ஏற்பட்ட தகராறில், மகாராஜனின் மனைவி திவ்யாவுடன் பிரகாஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியானது. இதையடுத்து, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி பிரகாஷை கட்சியில் இருந்து நீக்கி தவெக நடவடிக்கை எடுத்தது.

ஆம்பூர் பெண் நிர்வாகிகள் ஆடியோ

இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்ட கிழக்கு தவெகவை சேர்ந்த ஆம்பூரில் வசிக்கும் 2 பெண் நிர்வாகிகள் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று இப்போது சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.

அந்த செல்போன் உரையாடல் பின்வருமாறு:

பெண் 1 : பேசுற மாதிரியா இங்க நடந்து கிட்டு இருக்கு

பெண் 2 : ஏன்?

பெண் 1 : அந்த நகர செயலாளர் இருக்காருல்லே, அவங்க வைப் போயி முதலமைச்சருக்கே கம்ப்ளைன்ட் பண்ணுச்சுக்கா. ஆனா, மாவட்டம் வந்து நாங்க பாத்துக்கறோம்ன்னு சொல்லி காப்பாத்தி இருக்காரு.

பெண் 2 : இல்லக்கா. தளபதி போஸ்டிங்கல இருந்து எடுத்துருவாரு பாரு.

பெண் 1 : எவ்வளோ கம்ப்ளைண்ட் எம்மேல வந்தாலும் என்ன எடுக்க மாட்டாங்கோ. பொதுசெயலாளரை நான் எப்படி மேட்ச் பண்ணனுமோ பண்ணியாச்சு. ரூ.30 லட்சம், நகர செயலாளர் போஸ்டிங்க் வாங்கி இருக்கேன். உன்ன காப்பத்தறது என் கடமைன்னு சொல்லிட்டாருக்கா.

பெண் 2 : வாணியம்பாடி ஒன்றியத்துல, அவரோட 19 வீடியோ வெச்சின்னு காட்டி இருக்கான்

பெண் 1 : அந்த செயலாளர் குடிக்கற வீடியோ வெளியே வந்து ஆம்பூர், வாணியம்பாடியில அசிங்கமா பேசுறாங்க. தப்புபண்றவங்களை கூப்பிட்டு திட்டுவாங்கனு பாத்தா, இப்படி காப்பாத்தி விட்டா எப்படிக்கா.

பெண் 2 : தளபதியை அவன், இவன்னு அசிங்கமா பேசிய ஆடியோ கேட்டியா?

பெண் 1 : ஆங்... குருப்புல பாத்தேன்.

பெண் 2 : லேடீஸுங்க கிட்ட கூட காசு வாங்கிட்டு அசிங்கமா நடக்குறாங்க.

பெண் 1 : அம்மா, இவரு, டிவிகே மீட்டிங்க் வெச்சாவே, பொம்பளைங்க, ஒரு வயசானவங்கள கூட பாக்க மாட்டறான் கா. ஒரு பொண்ண கூட விடமா, இடுப்புக்கு கீழயே பாக்குறான்கா. குறுகுறுன்னு பாக்கறான். பார்வையே சரி இல்ல. என் வீட்டுகாரரு, எம்மா இதெல்லாம் பாத்துட்டு, மீட்டிங்க், டிவிகே மீட்டிங்க்கே போகாதன்னு சொல்லிட்டாருக்கா. இதுக்கு மேல என்னை எங்கயும் கூப்பிடாத நான் வரமாட்டேன்.

பெண் 2 : நானே போக கூடாதுன்னுதான் முடிவு பண்ணிருக்கேன். கட்சியும் வேணாம்.....

இவ்வாறு அந்த உரையாடல் அமைந்துள்ளது.

ஆடியோவின் உண்மைத்தன்மை என்ன?

இந்த ஆடியோவில் தவெக நிர்வாகிகள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, ரூ.30 லட்சம் கொடுத்து நகர செயலாளர் பதவி வாங்கியதாகவும், பெண்களிடம் தவறாக நடந்துகொள்வதாகவும் உரையாடலில் கூறப்படுகிறது. மேலும், கட்சி கூட்டங்களுக்கு செல்வதையே தவிர்க்க முடிவு செய்துள்ளதாகவும் பெண் நிர்வாகிகள் பேசிக்கொள்கிறார்கள்.

ஆனால், இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இதில் பேசுவது யார், அவர்கள் குறிப்பிடும் நபர்கள் யார், உரையாடலில் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதா என்பது தெரியவில்லை.

அதேசமயம், தவெக நிர்வாகிகளை சிக்க வைப்பதற்காகவே, அல்லது தவெகவுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்காகவே, இப்படி வேண்டுமென்றே சித்தரிக்கப்பட்ட ஆடியோ கசிய விடப்படுகிறதா என்றும் தெரியவில்லை. இது நம்முடைய காவல்துறை விசாரணை மூலமாகவே உறுதிப்படுத்த முடியும்.

இருந்தாலும், தவெக பெண் நிர்வாகிகள் பேசிக்கொண்டதாகக் கூறப்படும் இந்த ஆடியோ திருப்பத்தூர் மாவட்டத்தில் பரவி வருவது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+