சபரிமலைக்கு போறீங்களா? உங்களுக்காக சிறப்பு ரயில்.. திருவண்ணாமலைக்கும் ஸ்பெஷல் வண்டி! முழு விவரம்!
சென்னை: கேரளா சபரிமலையில் மண்டல-மகரவிளக்கு சீசன் மற்றும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற உள்ள நிலையில், தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த ரயில்கள் எங்கிருந்து? எந்த நேரத்தில் கிளம்பும்? எப்போது போய் சேரும்? டிக்கெட்களை எப்படி புக் செய்வது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
சபரிமலைக்கு மொத்தம் 4 ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. முதல் ரயில் நவ.16ம் தேதியிலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.

ரயில் எண்: 06083 - சென்னை சென்ட்ரல் டூ கொல்லம் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் திங்கட்கிழமை தோறும் இயக்கப்படும். ஜன.25ம் தேதி இரவு 11.50 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் மாலை 4.30க்கு கொல்லம் சென்றடையும்.
ரயில் எண்: 06084 - கொல்லம் டூ சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் செவ்வாய்க்கிழமை தோறும் இயக்கப்படும். ஜன.26ம் தேதி மாலை 6.30 மணிக்கு கொல்லத்திலிருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 11.30க்கு சென்ட்ரல் வந்தடையும்.
ரயில் எண்: 06119 - சென்னை சென்ட்ரல் டூ கொல்லம் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் புதன்கிழமை தோறும் இயக்கப்படும். ஜன.20ம் தேதி மதியம் 3.10 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.20க்கு கொல்லம் சென்றடையும்.
ரயில் எண்: 06120 - கொல்லம் டூ சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் வியாழக்கிழமை தோறும் இயக்கப்படும். நவ.19 மற்றும் ஜன.21ம் தேதி காலை 10.40 மணிக்கு கொல்லத்திலிருந்து புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 3.30க்கு சென்ட்ரல் வந்தடையும்.
ரயில் எண்: 06117 - சென்னை எழும்பூர் டூ கொல்லம் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படும். நவ.20 ஜன.22ம் தேதி இரவு 11.40 மணிக்கு எழும்பூரிலிருந்து இருந்து புறப்பட்டு அடுத்த நாள் மாலை 4.20க்கு கொல்லம் சென்றடையும்.
ரயில் எண்: 06118 - கொல்லம் டூ சென்னை எழும்பூர் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் சனிக்கிழமை தோறும் இயக்கப்படும். நவ.21 மற்றும் ஜன.23ம் தேதிகளில் மாலை 6.30 மணிக்கு கொல்லத்திலிருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 11.30க்கு எழும்பூர் வந்தடையும்.
ரயில் எண்: 06121 - சென்னை எழும்பூர் டூ கொல்லம் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயிலும் சனிக்கிழமை தோறும் இயக்கப்படும். நவ.21 ஜன.23ம் தேதிகளில் இரவு 11.40 மணிக்கு எழும்பூரிலிருந்து இருந்து புறப்பட்டு அடுத்த நாள் மாலை 4.30க்கு கொல்லம் சென்றடையும்.
ரயில் எண்: 06122 - கொல்லம் டூ சென்னை எழும்பூர் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கப்படும். நவ.22 மற்றும் ஜன.24ம் தேதிகளில் மாலை 6.45 மணிக்கு கொல்லத்திலிருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 11.40க்கு எழும்பூர் வந்தடையும்.
இந்த ரயில்களில் IRCTC அல்லது RailOne செயலி மூலம் டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியும். புறப்படும் இடத்தில் MAS (சென்னை சென்ட்ரல்) அல்லது MS (சென்னை எழும்பூர்) என்று தேட வேண்டும். போய் சேரும் இடத்தில் QLN (கொல்லம்) அல்லது CNGR (செங்கன்னூர்) என்று தேட வேண்டும்.
திருவண்ணாமலைக்கான சிறப்பு ரயில்கள்
சபரிமலைக்கு இயக்கப்படுவதை போலவே, திருவண்ணாமலைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நவ.23, 24 மற்றும் 25 ஆகிய 3 நாட்களுக்கு முன்பதிவில்லைா 'மெமு' சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை கடற்கரை - திருவண்ணாமலை (06143/06144) ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, வேலூர் கன்டோன்மென்ட், ஆரணி ரோடு, போளூர் வழியாக இரு மார்க்கத்திலும் தலா 3 மெமு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தாம்பரம் - திருவண்ணாமலை (06039/06094) ரயில் செங்கல்பட்டு, மேல்மருத்துவத்தூர், திண்டிவனம், விழுப்புரம் வழியாக இரு மார்க்கத்திலும் தலா 3 மெமு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
விழுப்புரம் - திருவண்ணாமலை (06129/06130)தென் மாவட்டங்களிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில்களில் விழுப்புரம் வரை வந்து, அங்கிருந்து திருவண்ணாமலைக்கு செல்ல.. இரு மார்க்கத்திலும் 3 சிறப்பு மெமு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இது போக.. திருவண்ணாமலை-காட்பாடிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
