Gold Rate Today: வரலாறு காணாத சரிவில் தங்கம் விலை.. 2 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட ரூ.4000 குறைந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. சர்வதேச சந்தையில் நடக்கும் மாற்றங்களால் தங்கம் விலை இப்படி தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்றைய தினம் சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1880 குறைந்து, ரூ.95,840க்கு விற்பனையாகிறது.

அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் 3 சதவீதத்துக்கும் மேல் சரிந்தது. இதன் மூலம் தங்கம் விலை கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு மிக குறைந்த விலைக்கு சரிந்துள்ளது.

gold gold rate today silver silver rate today

சர்வதேச சந்தை

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3.2 சதவீதம் சரிந்து 3,714 ஆக உள்ளது. கடந்த செப்டம்பர் 2025க்கு பிறகு தங்கம் விலை இந்தளவுக்கு சரிவது இதுவே முதல்முறையாகும். கோல்ட் ப்யூச்சரஸும் கூட 3.2 சதவீதம் குறைந்து, ஒரு அவுன்ஸ் 3,711 டாலராக நிறைவடைந்தது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் அக்டோபர் மாத கூட்டத்தில் என்னவெல்லாம் ஆலோசிக்கப்பட்டன என்பது குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளன. அதில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என மத்திய வங்கி அதிகாரிகள் கருதுவது தெரியவந்துள்ளது.

காரணங்கள்

ஆனால் பணவீக்கம் எதிர்பார்த்த அளவுக்குக் குறையாவிட்டால் டிசம்பர் மாதத்தில் வட்டியை 0.50% உயர்த்துவது அல்லது 2027ல் வட்டி விகிதத்தை வேகமாக உயர்த்துவது குறித்து பெடரல் ரிசர்வ் பரிசீலிக்க வேண்டும் என்று கிறிஸ்டோபர் வாலர் தெரிவித்துள்ளார். இதேபோல் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை மேலும் உயர்த்த வேண்டி இருக்கும் என மத்திய வங்கி அதிகாரிகள் ஜான் வில்லியம்ஸ் மற்றும் ஆல்பர்டோ முசலேமும் தெரிவித்தனர்.

அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெறுவதும், அந்நாட்டு அரசு பத்திரங்களின் வருவாய் அதிகரிப்பதும், வட்டி விகிதம் மேலும் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் தங்கம் விலை சரிய காரணமாக இருக்கிறது. நேற்று புதன்கிழமை அமெரிக்க டாலரின் மதிப்பு கடந்த 19 மாதங்களில் இல்லாத புதிய உச்சத்தை எட்டியது. அமெரிக்க மத்திய வங்கி நடவடிக்கை, பொருளாதாரம் குறித்த டேட்டா ஆகியவையே டாலரை உச்சத்திற்கு எடுத்து சென்றுள்ளது.

முதலீடுகள்

தங்கம் எந்தவொரு வட்டியையும் வழங்காத முதலீடு என்பதால், வட்டி விகிதங்கள் உயரும்போது அதை வைத்திருப்பது எந்தவொரு பலனையும் தராது. இதனால் வட்டி விகிதம் உயரும் போது, முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்றுவிட்டு, வட்டி வருவாய் தரும் முதலீடுகளுக்கு மாறுவார்கள். இதுவே தங்கம் விலை சரிய பிரதான காரணமாகும். இப்போதைக்கு இதே நிலைமை தான் தொடரும் என்பதால் சர்வதேச மார்கெட்டில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,350 வரை போகலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்!

தங்கம் விலை

சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தங்கம் விலை சரிந்தே வந்தது. நேற்றைய தினம் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.2,040 குறைந்து ரூ.97,720க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது, ஒரு கிராம் தங்கம் ரூ.12,215ஆக இருந்தது. வெள்ளி விலை ரூ.185க்கு விற்பனையானது.

இன்றைய தினம் தங்கம் விலை மேலும் சரிந்தே இருக்கிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1880 குறைந்து, ரூ.95,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.235 குறைந்து, ரூ.11,980க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.180க்கு விற்கப்படுகிறது. கடந்த இரு இரு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு கிட்டத்தட்ட ரூ.4000 சரிந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை

19-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் -ரூ.95,840

18-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் -ரூ.97,720

17-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் -ரூ.99,760

16-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் -ரூ.1,00,320

15-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் -ரூ.1,00,920

14-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் -ரூ.1,00,920

13-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,01,560

12-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,02,520

11-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,120

10-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,680

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+