உரிக்காமலேயே கண்ணீர் வருதுங்க! டபுள் செஞ்சுரி போட்ட சின்ன வெங்காயம்! பூண்டு விலை அதுக்கும் மேல!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: சமீபகாலமாக வரத் குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழலில் தஞ்சாவூர் உழவர் சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 130 ரூபாயாக இருக்கிறது. ஒரு கிலோ பூண்டு 240 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே நேரத்தில் முதல் தர சின்ன வெங்காயம் வெளிச்சந்தையில் 180 ரூபாயை தாண்டி உள்ளதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வரும் காலங்களில் இன்னும் விலை உயர்வு இருக்கும் என்கின்றனர் வியாபாரிகள்.

தஞ்சாவூர் உழவர் சந்தையில் 71 கடைகள் மூலம் விவசாயிகள் மற்றும் சுய உதவி குழுவினர் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்து வருகின்றனர். காய்கறிகள் மற்றும் மலை தோட்ட காய்கறிகளை சுய உதவி குழுவினர் மூலம் குறைந்த விலையில் நுகர்வோர் பயன்பெறும் வகையில், உழவர் சந்தையில் தினமும் காலையில் விலை நிர்ணயம் செய்து வழங்கப்பட்டு வருகிறது.

Onion Price Small Onion Big Onion

உழவர் சந்தை சுய உதவி குழுவினர் மொத்தமாக திருச்சி மற்றும் கும்பகோணம் பெரிய சந்தைகளில் இருந்து நேரடி கொள்முதல் செய்வதால், குறைந்த விலையில் தஞ்சாவூர் உழவர் சந்தையில் வழங்க முடிகிறது. இன்றைய தேதியில் (19.11.2026) தஞ்சாவூர் உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தக்காளி கிலோ 34 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு கிலோ 30 ரூபாய்க்கும், பல்லாரி பெரிய வெங்காயம் கிலோ 66 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் கிலோ 130 ரூபாய்க்கும், கேரட் கிலோ 46 ரூபாய்க்கும், பீன்ஸ் கிலோ 80 ரூபாய்க்கும், பீட்ரூட் கிலோ 50 ரூபாய்க்கும், சௌசௌ கிலோ 32 ரூபாய்க்கும், கோஸ் கிலோ 30 ரூபாய்க்கும், சேனைக்கிழங்கு கிலோ 48 ரூபாய்க்கும், சேம்பு கிலோ 56 ரூபாய்க்கும், காலிபிளவர் கிலோ 56 ரூபாய்க்கும், இஞ்சி கிலோ 200 ரூபாய்க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் பச்சை மிளகாய் கிலோ 44 ரூபாய்க்கும், காப்சிகம் கிலோ 86 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர பூண்டு, நூல்கோல், பட்டாணி ஆகியவையும் உழவர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் தற்போது அத்தியாவசிய பொருட்களான காய்கறிகளின் விலைகள் ஏறியுள்ளன. அதில் முக்கியமான சின்ன வெங்காயம் வெளிச்சந்தையில் கிலோ 180 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது.

போதுமான மழை இல்லாத காரணத்தினால் விளைச்சல் மிகவும் குறைந்துள்ளதால் இந்த விலைவாசி உயர்வுக்கு காரணம் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் உழவர் சந்தையில் தீபாவளிக்கு பிறகு வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதாகவும், கும்பகோணம், திருச்சி உள்ளிட்ட பெரிய சந்தைகளில் இருந்து வாங்கி வந்து உழவர் சந்தையில் விற்பதாகவும் கூறினர்.

முன்பு பத்து மூட்டைகள் வெங்காயம் வாங்கிய நிலையில், தற்போது வெங்காயத்தின் தட்டுப்பாட்டால் ஒரு மூட்டை வெங்காயத்தை வாங்கி வந்து அதை விற்பனை செய்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சுய உதவி குழு வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர். தமிழக அரசு மற்ற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து குறைந்த விலையில் வெங்காயத்தை விநியோகம் செய்ய வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+