2035-ல் மாறப்போகும் உலக மக்கள்தொகை கணக்கு! எந்த மதம் முதலிடம் பிடிக்கும்? வெளியான முக்கிய ஆய்வு!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: 2035ம் ஆண்டுக்குள் உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மதமாக இஸ்லாம் இருக்கும். உலகளவில் கிறிஸ்தவ மக்கள்தொகை தான் தற்போது அதிகமாக உள்ள நிலையில் இந்த மாற்றம் நடக்கும். அதேபோல் வரும் ஆண்டுகளில் இந்துக்களின் மக்கள்தொகை கணிசமாக உயர்ந்தாலும் கூட உலகளவில் மொத்த மக்கள்தொகையில் இந்துக்களின் பங்களிப்பு குறையும் என்று ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:

world-population-islam-will-surpass-chrisitanity-as-the-words-largets-religion-by-2025-says-pew

'பியூ ரிசர்ஜ் சென்டர் ' என்பது அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு அமைப்பாகும். சுருக்கமாக 'பியூ' என்பார்கள். இது பல்வேறு உலக பிரச்சனைகள், மக்கள்தொகை பெருக்கம் உள்ளிட்டவற்றை கண்காணித்து அவ்வப்போது ஆய்வறிக்கை வெளியிட்டு வருகிறது.

'பியூ ரிசர்ஜ் சென்டர்' சார்பில் உலக மக்கள்தொகை வளர்ச்சி தொடர்பான புதிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. 2020 ம் ஆண்டு முதல் 2070ம் ஆண்டுக்குள் உலகளவில் மக்கள்தொகை பெருக்கம் எப்படி இருக்கும்? குழந்தை பெற்றெடுக்கும் விகிதம் எப்படி இருக்கும்? இடம்பெயருதல், மதம் மாறுதல் உள்ளிட்டவற்றால் ஏற்படும் மாற்றம் தொடர்பான அம்சங்களை ஆராய்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

2035ம் ஆண்டுக்குள் அதிக மக்கள்தொகை கொண்ட மதமாக கிறிஸ்தவத்துக்கு பதில் இஸ்லாம் மாறும். கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதம் இரண்டும் கணிசமான அளவில் மக்கள்தொகை வளர்ச்சியை கண்டு வருகிறது. இருப்பினும் கிறிஸ்தவத்தை விட இஸ்லாமில் மக்கள்தொகை உயர்வு சற்று அதிகமாக உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் பெண்கள் குழந்தை பெற்றெடுக்கும் விகிதம் அதிகமாக இருப்பது தான் என்று 'பியூ' அமைப்பின் மூத்த மக்கள்தொகை ஆய்வாளர் கான்ராட் ஹேக்கெட் தெரிவித்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் முஸ்லிம் பெண் ஒருவரின் சராசரி குழந்தை பெற்றெடுக்கும் விகிதம் 3.1 என உள்ளது. கிறிஸ்தவ பெண்களிடம் இது 2.5 என்ற அளவில் மட்டுமே உள்ளது.

மற்ற அனைத்து பெண்களை பொறுத்தவரை சராசரி குழந்தை பெற்றெடுக்கும் விகிதம் 1.6 ஆக உள்ளது. ஒரு தலைமுறை தனக்கு நிகரான மக்கள்தொகையை ஈடுசெய்து கொள்வதற்கு குழந்தை பெற்றெடுக்கும் விகிதம் 2.1 என்று இருக்க வேண்டும் என்ற நிலையில் மற்றவர்களிடம் குறைந்துள்ளது.

இதனால் தான் 2035ம் ஆண்டுக்குள் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களை விட இஸ்லாம் மதத்தை சேர்ந்த மக்கள்தொகை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் நிலவரப்படி உலகளவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 227 கோடியாக இருந்தது. முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 202 கோடியாக இருந்தது.

தற்போதைய குழந்தை பிறப்பு விகித அடிப்படையில் பார்த்தால் 2035ம் ஆண்டுக்குள் முஸ்லிம் மக்கள்தொகை 257 கோடியாக உயரும். கிறிஸ்தவ மக்கள்தொகை உயர்ந்தாலும் கூட 252 கோடியாக மட்டுமே இருக்கும். அதேபோல் 2070ம் ஆண்டிலும் இதே நிலை தொடர்ந்தால் முஸ்லிம் மக்கள்தொகை உலகளவில் 360 கோடியாகவும், கிறிஸ்தவ மக்கள்தொகை 300 கோடிக்கு கீழும் குறையும்.

அதேவேளையில் வரும் ஆண்டுகளில் இந்துக்கள் மற்றும் யூதர்களின் மக்கள்தொகை உயர்ந்தாலும் கூட உலகளவில் இஸ்லாம், கிறிஸ்தவ மக்கள்தொகை பெருக்கத்தை ஒப்பிடும்போது குறைவாக இருக்கும். அதாவது உலக மக்கள்தொகையில் இந்து, யூதர்களின் பங்களிப்பு குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+