போதை தலைநகராகிறது தமிழகம்? சென்னையில் 70 கிலோ ஹெராயின் பறிமுதல்! மதிப்பு மட்டும் இத்தனைக் கோடியா?
சென்னை: சென்னை அருகே மாதவரத்தில் சுமார் 140 கோடி ரூபாய் மதிப்பிலான 70 கிலோ ஹெராயின் போதை பொருளை பறிமுதல் செய்திருக்கின்றனர் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள். இரண்டு பேரை கைது செய்திருக்கும் நிலையில், இந்த சம்பவம் தலைநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டால் அப்பகுதியில் இருக்கும் காவல் அதிகாரிகள் தண்டனைக்குள்ளாவார்கள் என டிஜிபி எச்சரித்து இருந்த நிலையில் தற்போது இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
சென்னை மாதவரம் பகுதியில் வாகன சோதனையின்போது, சுமார் ரூ.140 கோடி மதிப்பிலான 70 கிலோ ஹெராயின் போதைப்பொருளை வருவாய் புலனாய்வுத் துறை (DRI) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாதவரம் பகுதியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், டி.ஆர்.ஐ. அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 70 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, போதைப்பொருளைக் கடத்தி வந்ததாகக் கூறப்படும் இரண்டு பேரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் போதைப்பொருள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, யாரிடம் கொண்டு செல்லப்பட இருந்தது, இதன் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மாதவரம் பகுதியில் சுமார் 70 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாகை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தவெக நிர்வாகி பூபாலன் உள்ளிட்டோரை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்திருந்தனர். மேலும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தமிழ்நாடு டிஜிபி அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் போதை பொருட்களை பறிமுதல் செய்தால் அப்பகுதியில் இருக்கும் காவல் அதிகாரிகள் தண்டனைக்கு உள்ளவர்கள். போதைப்பொருள் மரணங்கள் ஏற்பட்டால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார். அந்த அறிவிப்பு வெளியாகி ஒரு வாரத்திற்குள் சென்னையில் சுமார் 140 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
