தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதி! 2 நாட்கள் தங்கி சிகிச்சை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் எதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற விவரங்களை ஆளுநர் மாளிகை வெளியிடவில்லை. அந்த மருத்துவமனையில் 2 நாட்கள் தங்கி சிகிச்சை பெறுவார் என சொல்லப்படுகிறது.

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகவும் கேரளாவின் முழு நேர ஆளுநராகவும் இருந்தவர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர். தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும், தற்காலிக சபாநாயகர் உள்ளிட்டோருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்திருந்தார்.

tamil nadu Rajendra arlekar

தவெக அரசுடன் அர்லேகர் இணக்கமாகவே செயல்பட்டதாக சொல்லப்படுகிறது. தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் அவரை சந்தித்து புகார் அளித்திருந்தன. அண்மையில் அர்லேகர், தமிழகத்தின் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

அண்மையில்தான் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச டெல்லி சென்றிருந்தார். அங்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்தும் அருள் விக்னேஷ் எம்எல்ஏவின் ஆபாச மெசேஜ் குறித்தும் அவர் புகார் அளித்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அர்லேகர் நேற்று மாலை சென்னை காவேரி மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அங்கு 2 நாட்கள் தங்கி சிகிச்சை பெறுவார் என சொல்லப்படுகிறது. அவர் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற விவரத்தை ஆளுநர் மாளிகை தெரிவிக்கவில்லை.

அர்லேகர் கோவாவை சேர்ந்தவர். இவர் வணிகவியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார். இவரது மனைவி பெயர் அனகா அர்லேகர். இவர்களுக்கு ஒரு மகனும் , மகளும் உள்ளனர். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்து பணியாற்றி எமர்ஜென்சி காலத்தில் சிறை சென்றவர். 1989 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

கோவா மாநில பாஜக தலைவர், பொதுச் செயலாலர் உள்ளிட்ட பதவிகளை வகித்திருந்தார். கோவா சட்டசபைக்கு வாஸ்கோடகாமா தொகுதி, பெர்னெம் தொகுதிகளுக்கு இரு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவா சட்டசபை சபாநாயகராக பணியாற்றிய போது இந்தியாவிலேயே காகிதம் இல்லா டிஜிட்டல் சட்டசபையாக கோவா சட்டசபையை மாற்றினார். பின்னர் கோவாவின் வனத்துறை அமைச்சராக பணியாற்றியிருந்தார்.

இதையடுத்து ஜூலை 2021 ஆம் ஆண்டு முதல் அவருக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டது. அதன்படி இமாச்சல் பிரதேசம், பீகார், கேரளாவின் ஆளுநராக இருந்தார். தமிழகத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டதால் கேரள ஆளுநராக இருந்த அர்லேகருக்கு தமிழகத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராக கடந்த மார்ச் 12 ஆம் தேதி பதவியேற்றார்.

கடந்த சட்டசபை தேர்தலின் போது தமிழகத்தில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய்க்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் கேரள மாநில ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர், தமிழகத்தின் முழு நேர ஆளுநராக செயல்பட்டு வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+