சொன்னதை செய்த சந்திரபாபு நாயுடு! ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.15000.. இலவச பஸ் பயணத்தால் ஆந்திர அரசு உதவி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் வழங்குவதால் ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.15,000 வழங்கும் திட்டத்தை ஆந்திர அரசு செயல்படுத்தியுள்ளது. இந்த உதவி யாருக்கெல்லாம் தெரியுமா? இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

ஆந்திராவில் பெண்களுக்காக "ஸ்திரீ சக்தி" என்ற பெயரில் இலவச பேருந்து பயண திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள்.

Chandrababu Naidu Auto Driver Financial Assistance

இந்த திட்டம் தொடங்கிய பிறகு ஆட்டோ, டாக்சி டிரைவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதாக புகார்களும், புலம்பல்களும் எழுந்தன. முன்பு ஆட்டோவில் பயணம் செய்த பெண்களில் பலர் இலவச பேருந்து வசதியை பயன்படுத்த தொடங்கியதால் தங்களுடைய வருமானம் குறைந்துவிட்டதாக டிரைவர்கள் கவலைகளை வெளிப்படுத்தினார்கள். இதனால் குடும்ப செலவுகளை சமாளிப்பதிலும் சிரமம் ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்து வந்தனர்.

சந்திரபாபு நாயுடு நம்பிக்கை

இந்தப் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு ஆந்திர அரசு "ஆட்டோ டிரைவர்லா சேவலோ" (Auto Driverla Sevalo) என்ற பெயரில் நிதியுதவி திட்டத்தை அறிமுகப்படுத்தியது.. இந்தத் திட்டத்தை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 2025 அக்டோபர் 4-ம் தேதி விஜயவாடாவில் தொடங்கி வைத்தார்.

திட்டத்தை தொடங்கிய நாளில், சந்திரபாபுநாயுடு பேசும்போது, "மாநிலம் முழுவதிலும் ஆட்டோ, டாக்ஸி, மேக்ஸி கேப் போன்ற வாடகை வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். இத்தொகை அவரவர் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும். இதற்காக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.436 கோடி செலவாகும். இதன் மூலம் 2.64 லட்சம் ஆட்டோ ஓட்டுநர்கள், 20,072 டாக்ஸி ஓட்டுநர்கள், 6,400 மேக்ஸி கேப் ஓட்டுநர்கள் என மொத்தம் 2.90 லட்சம் பேர் பயன் அடைவார்கள்" என்று பெருமிதத்துடன் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

ஆட்டோ டிரைவர்களுக்கு 15000 ரூபாய்

அதன்படியே சொந்தமாக ஆட்டோ ரிக்‌ஷா, மோட்டார் கேப் மற்றும் மேக்ஸி கேப் வைத்திருந்து ஓட்டுநர் தொழில் செய்து வருபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் 2.9 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் பயனடையும் வகையில் அரசு ஏற்பாடு செய்தது. மொத்தம் 2,90,669 ஓட்டுநர்களுக்கு உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதற்காக 2025-26 நிதியாண்டில் ரூ.436 கோடியை ஆந்திர அரசு ஒதுக்கியது. திட்டம் தொடங்கப்பட்டபோது தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.15,000 நேரடியாகச் செலுத்தப்பட்டது. இதன் மூலம் ஆட்டோ, கேப் மற்றும் மேக்ஸி கேப் ஓட்டுநர்களுக்கு அரசு நிதியுதவி வழங்கியது.

மீண்டும் ரூ.231.13 கோடி நிதி ஒப்புதல்

இந்நிலையில், 2026-27 நிதியாண்டிலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பயனாளிகளுக்கான ரூ.231.13 கோடி நிதியை பயன்படுத்த நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணையை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை 2026 நவம்பர் 17-ம் தேதி வெளியிட்டுள்ளது. G.O.Rt.No.142 என்ற இந்த உத்தரவு, நிதித்துறை வெளியிட்ட நிதி ஒதுக்கீட்டு உத்தரவின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.231.13 கோடி என்பது 2025-26 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.436 கோடியிலிருந்து வேறுபட்டது. இது 2026-27 நிதியாண்டுக்கான பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை நிதி ஒப்புதல் ஆகும்.

தகுதியுள்ள டிரைவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.15,000 நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இலவச பஸ் பயண வசதியால் வருமானம் பாதிக்கப்பட்டதாக சொல்லும், தனியார் வாகன டிரைவர்களுக்கு நிதியுதவி வழங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சொந்தமாக ஆட்டோ அல்லது வாடகை வாகனம் வைத்திருக்கும் தகுதியான டிரைவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 கிடைப்பது இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாகும்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+