TTF வாசன் நிஜ கேரக்டர் இதுதான்! தெரியாம அப்படி பேசிட்டேன்.. பிக் பாஸ் ரகசியத்தை பற்றி பேசிய அஸ்மிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் எவிக்ஷன் ஆன அஸ்மிதா வெளியே வந்த பிறகு பிக் பாஸ்க்குள் நடந்த பல விஷயங்களை பற்றி பேசி இருக்கிறார். அதில் தான் டிடிஎஃப் வாசன் பற்றி தவறாக புரிந்து கொண்டேன், அவர் உண்மையில் ஒரு குழந்தை மாதிரி தான் என்று பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் அஸ்மிதா பேட்டி

ஒருவரை பார்த்த உடனே நமக்கு நினைக்கும் பல விஷயங்கள், பழகி பார்க்கும்போது நமக்கே மாற்றத்தை கொடுத்து விடும். அது போல தான் பிக் பாஸ் வீட்டில் டிடிஎஃப் வாசன் சென்ற முதல் வாரத்தில் அனைவருமே இவருக்கு எதுவுமே புரியாது, எதுவுமே தெரியாது என்று சொல்லிக் கொண்டிருந்தனர். அதில் அஸ்மிதாவும் ஒருவர். வாசன் பிக் பாஸ் வீட்டிற்குள் பைக்கில் சென்று உர்... உர்... என்று உறுமிக்கொண்டு வந்து நின்ற அந்த காட்சியை பார்த்து உள்ளிருந்த போட்டியாளர்களுக்கு ஒரு பயம் இருந்தது.

TTF Vasan

பிக் பாஸ் அப்டேட்

இவருக்கு ஏற்கனவே வெளியே அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்களே இவர் உள்ளே வந்தால் இவருக்குத்தான் டைட்டில் கிடைக்குமா? என்று பலரும் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் சில நாட்களில் அவரை அனைவருமே டார்கெட் செய்ய தொடங்கி விட்டார்கள். இவரிடம் என்ன பேசினாலும் புரியாது, நிகழ்ச்சியை பற்றி எதுவுமே தெரியவில்லை என்று சொல்லிக் கொண்டு இருந்தனர். ஆனால் அடுத்த வாரமே அவர் டைமண்ட் டாஸ்கில் விளையாடிய விதம் இதுவரைக்கும் அந்த நிகழ்ச்சியை பார்க்காதவர்களையும் பார்க்க வைத்துவிட்டார்.

தவறான புரிதல்

அதுபோல போனவாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அஸ்மிதா வாசன் பற்றி பேசியிருக்கிறார். அதில் அவர் பேசும்போது, வாசன் வந்த முதல் வாரத்தில் நானும் அவரை தவறாகத்தான் நினைத்து விட்டேன். அவர் முதல் வாரம் நடந்து கொண்டதை வைத்து இவருக்கு எதுவும் தெரியாது என்று நினைத்தேன். ஆனால் அவருடன் பழகி பார்த்த பிறகுதான் அவர் ஒரு குழந்தை மாதிரி என்று தெரிந்து கொண்டேன். உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் அவர் இன்னசென்ட் தான்.

அஸ்மிதா மனமாற்றம்

வாசனுக்கு எதுவுமே தெரியவில்லை என நான் முதல் வாரத்தில் ஒர்ஸ்ட் பெர்பார்மன்ஸ் என்று நானும் சொன்னேன். ஆனால் அதற்கு பிறகு தான் நான் நினைத்து பார்த்தேன், நானே அந்த நிகழ்ச்சியில் ஒரு வாரம் எதுவும் செய்யவில்லை அப்படி இருக்கும் போது அவரை மட்டும் எப்படி இதுபோல சொல்லலாம் என்று யோசித்தேன். அதனால் அவரைப் பற்றி நான் சொன்னது தவறு என்பதை புரிந்து கொண்டேன் என அந்த பேட்டியில் அஸ்மிதா பேசி இருக்கிறார். உடனே வாசன் ரசிகர்கள், இப்பவாவது வாசனை புரிஞ்சுக்கிட்டிங்களே என்று சோசியல் மீடியாவில் வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே டைமண்ட் டாஸ்க் வாசன் டைமண்டை திருடி மறைத்து வைத்த சமயத்தில் அஸ்மிதா வந்த காட்சிகள், அவரை மாட்டி விட அஸ்மிதா செய்த முயற்சிகள் எல்லாம் அந்த நேரத்தில் பெரிதாக பேசப்பட்டது. அப்போ கூட ரசிகர்கள் அஸ்மிதாவை திட்டி வந்தனர். ஆனால் வெளியே வந்த பிறகு அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தையும், சப்போட்டாவும் பார்த்து மனம் மாறிவிட்டாரா? அல்லது நிஜத்திலேயே வாசனை புரிந்து கொண்டாரா என்று கேள்வியும் எழுந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+