மாடி வீட்டில் பதுங்கிய கொள்ளையன்.. அரைகுறை ஆடையுடன் அட்ராசிட்டி! மறக்க முடியாத பாடம்! என்னா அடி?

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம் லட்சுமி நகரில் தனியாக இருந்த பெண்ணின் வீட்டின் மொட்டை மாடியில் டவுசர் மட்டும் அணிந்து பதுங்கியிருந்த மர்ம நபரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரைகுறை ஆடையுடன் பதுங்கியிருந்த கொள்ளையன் கற்களை வீசி வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது .

தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவது பொது மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது, சமீபத்தில் நடந்த மதுரை கொள்ளை சம்பவமும் அப்படித்தான் அது மட்டுமல்லாமல் வீடுகளில் தனியாக இருக்கும் முதியவர்களை குறி வைத்தும் பெண்களை குறி வைத்தும் கொள்ளை சம்பவம் நடந்து வருகிறது.

Villupuram Robbery crime

போலீசார் எவ்வளவோ கண்காணிப்பு பணியில் ஈடுபட்டாலும் கொள்ளையர்கள் அவர்கள் கண்ணில் மண்ணை தூவி விட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படித்தான் விழுப்புரத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

டவுசர் கொள்ளையன்

அரைகுறை ஆடையுடன் வீட்டில் பதுங்கி இருந்த கொள்ளையன் வீட்டிலிருந்து உங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியிருக்கிறார். அவனை சுற்றி வளைத்து பிடித்து தரும் அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்து இருக்கின்றனர் பொதுமக்கள். விழுப்புரம் லட்சுமி நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் முருகன். ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் இவர், நேற்று இரவு வேலைக்குச் சென்றிருந்ததால் அவரது மனைவி கோமதி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

மாடியில் பதுங்கல்

அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் சரோஜா என்பவர் தனது 12 வயது மகனை வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியைப் பார்க்க அனுப்பியுள்ளார். சிறுவன் மொட்டை மாடிக்குச் சென்று தண்ணீர் தொட்டியைப் பார்த்துவிட்டு அருகில் உள்ள வீட்டின் மாடியைப் பார்த்தபோது, அங்கு டவுசர் மட்டும் அணிந்து, மேலே துண்டைப் போர்த்தியபடி மர்ம நபர் ஒருவர் பதுங்கி நின்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளான்.

கற்களை வீசித் தாக்குதல்

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் சிறுவன் மீது கற்களை வீசித் தாக்கியுள்ளார். இதுகுறித்து சிறுவன் தனது தாயிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, சரோஜா மாடிக்குச் சென்று அந்த நபரிடம் யார் எனக் கேட்டபோதும் அவர் கற்களை வீசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக விழுப்புரம் நகர காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மொட்டை மாடியில் பதுங்கியிருந்த நபரைச் சுற்றிவளைத்துப் பிடித்தனர். அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நகை, பணம் கொள்ளை

இதற்கிடையே, அந்த நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சுமி நகருக்கு அருகே உள்ள ஆசிரியர் நகர் பகுதியில் நான்கு டவுசர் கொள்ளையர்கள் வீடு புகுந்து கத்தி முனையில் நகை, பணம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மக்கள் அச்சம்

இந்த நிலையில், தற்போது லட்சுமி நகர் பகுதியில் மேலும் ஒரு டவுசர் கொள்ளையன் பிடிபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பிடிபட்ட நபருக்கும் ஏற்கனவே நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+