ஒரே நாளில் ரூ.10.03 லட்சம் கோடி.. தமிழக ஜிடிபியில் கிட்டத்தட்ட 4ல் ஒரு பங்கை திரட்டிய ஆந்த்ரோபிக்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரபல ஏஐ நிறுவனமான ஆந்த்ரோபிக், இன்று ஒரே நாளில் ஐபிஓ மற்றும் தனியார் முதலீடுகள் மூலம் மொத்தம் ரூ.10.03 லட்சம் கோடி நிதியை திரட்டியுள்ளது. இது கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் மொத்த ஆண்டு ஜிடிபியில் நான்கில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது. உலகப் பங்குச்சந்தை வரலாற்றிலேயே மிக பெரிய ஐபிஓவாக இது கருதப்படுகிறது.

இப்போது திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இப்போது ஏஐ நிறுவனங்களுக்கே மிக பெரிய முதலீடுகள் வந்து குவிந்து வருகிறது. இதற்கிடையே பிரபல ஆந்த்ரோபிக் ஏஐ நிறுவனம் பங்குச்சந்தையில் இப்போது வரலாறு காணாத சாதனையை படைத்துள்ளது.

Anthropic IPO Anthropic AI

ரூ.10.03 லட்சம் கோடி

ஆந்த்ரோபிக் நிறுவனம் தனது பங்குகளை தலா 83 டாலர் என்ற விலையில் நிர்ணயம் செய்திருந்தது. இன்று நவம்பர் 19ஆம் தேதி வியாழக்கிழமை அது அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. இந்த ஐபிஓ மூலம் மட்டும் சுமார் 81.3 பில்லியன் டாலர் திரட்டப்படுகிறது. இதனுடன் 26 பில்லியன் டாலர் தனியார் முதலீடும் ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கு கிடைத்தது. இரண்டையும் சேர்த்தால் 107.31 பில்லியன் நிதி கிடைத்துள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் இது கிட்டத்தட்ட ரூ.10.03 லட்சம் கோடியாகும்.

எவ்வளவு கிடைத்தது!

இதில் ஐபிஓ மூலம் மட்டுமே ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கு $79.38 பில்லியன் அதாவது ரூ.7.42 லட்சம் கோடி கிடைத்துள்ளது. இது தவிர தனியார் முதலீடு மூலம் $26 பில்லியன், அதாவது ரூ.2.43 லட்சம் கோடி, ஏற்கெனவே உள்ள பங்குகள் மூலம் $1.96 பில்லியன் (ரூ.0.18 லட்சம் கோடி ) என மொத்தம் $107.31 பில்லியன், அதாவது ரூ.10.03 லட்சம் கோடி கிடைத்துள்ளது.

இது கிட்டத்தட்ட தமிழ்நாடு ஜிடிபியில் 4ல் ஒரு பங்கு ஆகும். தமிழ்நாட்டின் 2026-27 நிதியாண்டுக்கான மாநில ஜிடிபி ரூ.40,67,312 கோடி, அதாவது ரூ.40.67 லட்சம் கோடி. ஆந்திரோபிக் திரட்டிய ரூ.10.03 லட்சம் கோடியை இதனுடன் ஒப்பிட்டால், அது தமிழ்நாட்டின் ஓராண்டு பொருளாதார உற்பத்தியில் சுமார் 24.6 சதவீதமாகும். அதாவது கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு.

முந்தைய சாதனைகள்

இதற்கு முன்பு 2026 ஜூன் மாதத்தில் ஸ்பெஸ்எக்ஸ் நிறுவனம் 75 பில்லியன் டாலர் திரட்டியதே மிக பெரிய ஐபிஓவாக இருந்தது. அதற்கு முன்பு 2019ஆம் ஆண்டு சவுதி அராம்கோ 25.6 பில்லியன் டாலர் திரட்டியதே சாதனையாக இருந்தது. இப்போது அந்த இரண்டு சாதனைகளையும் காலி செய்யும் வகையில் 81.3 பில்லியன் டாலர் திரிட்டி ஆந்திரோபிக் வரலாறு படைத்துள்ளது. இதில் விஷயம் என்னவென்றால் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட், ஏஎம்டி, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களும் கூட தனியார் முதலீடு மூலம் ஆந்திரோபிக் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

அடுத்து என்ன

யூசர்கள் அடிப்படையில் க்ளாட் ஏஐக்கு பெரிய பலம் இல்லை என்றாலும் கூட உலகின் சக்திவாய்ந்த ஏஐ டூல்களில் ஒன்றாக க்ளாட் பார்க்கப்படுகிறது. இதன் நேரடி போட்டியாளராக இருக்கும் சாட்ஜிபிடி இப்போது வரை தனியார் நிறுவனமாகவே இருக்கிறது. அதன் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ அடுத்தாண்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது ஓபன் ஏஐ வரலாற்று சாதனையை படைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+