ஆடையின்றி புதுச்சேரி நபர் தினமும் வீடியோ கால்.. ஆதார் நம்பர் எதுக்கு தெரியுமா? அலறும் அரியாங்குப்பம்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: தெரியாத நபர் போன் செய்தால் பேசுவதிலும், சோஷியல் மீடியாவில் அறிமுகமாகும் நபர்களிடம் பழகுவதிலும் இனிமேல் கூடுதல் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது.. ஏனென்றால், ஒரு சின்ன கவனக்குறைவு இருந்தாலே, நம்முடைய ஆதார் விவரங்கள் முதல் தனிப்பட்ட வீடியோக்கள் வரை மொத்தமும் மோசடி கும்பலின் கைகளில் சிக்கிவிடலாம்.. இதோ நேற்று புதுச்சேரியில் அடுத்தடுத்து நடந்த 3 சைபர் மோசடி சம்பவங்களை பாருங்கள்.

புதுச்சேரியைச் சேர்ந்த 55 வயது பெண்ணுக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்துள்ளார்.. தன்னை தொலைத்தொடர்புத் துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்திய அவர், அந்த பெண்ணின் பிஎஸ்என்எல் இணைப்பில் டெக்னிக்கல் கோளாறு இருப்பதாக கூறியுள்ளார். ரிப்பேர் வேண்டும் என்று சொல்லி அவருடைய ஆதார் நம்பரையும் வாங்கியுள்ளார்.

Puducherry Police Cyber Crime Cases Instagram Blackmail

புதுச்சேரி ஆதார் நம்பர்

ஆதார் நம்பரை பெற்ற பிறகு அந்த பெண்ணை மிரட்ட ஆரம்பித்து விட்டார்.. "உங்களுடைய ஆதார் எண்ணுடன் வேறு ஒரு மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளது. அந்த எண்ணை பயன்படுத்தி சிலர் சட்டவிரோத செயல்களிலும், பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.. இந்த விவகாரம் டெல்லி வரை சென்றுவிட்டது, உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம்" என்றும் பயமுறுத்தியுள்ளார்.

இதைக்கேட்டு அந்த பெண் அதிர்ச்சியடைந்தார்.. ஆனால் பயப்படவில்லை... உடனே அந்த நபரிடம், "என்னிடம் இருப்பது ஒரே ஒரு செல்போன் நம்பர்தான், நான் ஒரு தப்பும் செய்யவில்லை, நானே இதுகுறித்து நேரடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் தரப்போகிறேன்" என்றார்.

போலீஸ் அதிகாரி உடை

உடனே அந்த நபர் தனது பேச்சை மாற்றியுள்ளார். "உங்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. இந்தப் பிரச்னையில் இருந்து உங்களை நானே காப்பாற்றுகிறேன். உயர் அதிகாரிகளிடம் பேச சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டு அழைப்பை உடனே துண்டித்துள்ளார்.

ஆனாலும் அந்த பெண் அவருடைய பேச்சை நம்பவில்லை. உடனடியாக கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளித்துள்ளார்... அப்போது மீண்டும் அந்த பெண்ணுக்கு வீடியோ கால் வந்துள்ளது. இந்த முறை போலீஸ் ஆபீசர் போல உடையணிந்த ஒருவர் பேசினார். அதிகாரி போல மிரட்டவும் முயன்றார்.

துணிச்சல் பெண்

ஆனால், அந்த நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனிலேயே அப்பெண் இருந்ததால், சைபர் கிரைம் போலீசாருக்கு மோசடி நடப்பது உடனடியாக தெரிந்துவிட்டது. போலீஸ் நிலையத்தில் அந்த பெண் இருப்பதை அறிந்ததுமே, மறுமுனையில் இருந்த நபர் அழைப்பை துண்டித்துள்ளார்.

இதையடுத்து அவருடைய செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அழைப்பு விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து, இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நிர்வாண வீடியோவால் மிரட்டல்

இதே புதுச்சேரியில் மற்றொரு மிரட்டல் சம்பவம் நடந்துள்ளது.. அரியாங்குப்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.

அந்தப் பெண் ஆரம்பத்தில் இளைஞரை புகழ்ந்து பேசியுள்ளார். "நீங்க ரொம்ப ஹேன்ட்ஸம்மா இருக்கீங்க... வெரி நைஸ்" என்று பேச்சை வளர்த்துள்ளார்.. இதைக்கேட்டு உச்சிக்குளிர்ந்து போன இளைஞரும் அவருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

2 பேருமே செல்போனிலும், வீடியோ காலிலும் பேசிப் பழகியுள்ளனர். ஒருநாள் அந்த பெண், வீடியோ காலில் ஆடையின்றி பேசுமாறு கேட்டுள்ளார்.. அவருடைய பேச்சை நம்பிய இளைஞரும் வாட்ஸ்அப் வீடியோ காலில் ஆடையின்றி பேசியுள்ளார். ஆனால், இதையெல்லாம் அந்த பெண், இளைஞருக்கே தெரியால் தனது செல்போனில் ரகசியமாக ரிக்கார்டு செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த வீடியோவை இளைஞருக்கே அனுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் கொடுக்காவிட்டால் வீடியோவை உங்களுடைய செல்போனில் இருக்கும் உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பிவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ரூ.2,000 கேட்டு மிரட்டிய இன்னொரு பெண்

இதேபோன்ற இன்னொரு சம்பவமும் இதே அரியாங்குப்பத்தில் நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த இன்னொரு இளைஞருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.

இருவரும் பழகிய நிலையில், அந்தப் பெண்ணின் பேச்சை நம்பி இளைஞரும் வாட்ஸ்-அப் வீடியோ காலில் ஆடையின்றி பேசியுள்ளார். இதையும் அந்தப் பெண் ரகசியமாகப் பதிவு செய்துள்ளார். பிறகு அந்த வீடியோவை வைத்து இளைஞரிடம் ரூ.2,000 கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அலற விட்ட அரியாங்குப்பம்

ஒரே பகுதியில் அடுத்தடுத்து நடந்துள்ள இந்தச் சம்பவங்கள் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, அதிகாரிகள் போலப் பேசி ஆதார் விவரங்களைப் பெறுவது, சோஷியல் மீடியாவில் நட்பாகப் பழகி தனிப்பட்ட வீடியோக்களைப் பதிவு செய்வது என மோசடி கும்பல் வெவ்வேறு வழிகளில் மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது.

தெரியாத நபர்கள் கேட்பதற்காக ஆதார் எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை ஷேர் செய்யக்கூடாது என்று நம்முடைய போலீசார் தொடர்ந்து அலர்ட் செய்து வருகிறார்கள்.. ஆனாலும், விதவிதமான மோசடிகள் தொடர்ந்தபடியே உள்ளன.. எனவே, வீடியோ காலில் பேசும்போது தனிப்பட்ட காட்சிகளை பதிவு செய்ய முடியாது என்று நினைத்து கவனக்குறைவாக இருக்கவும் கூடாது. யாராவது வீடியோவை வைத்து மிரட்டினால் பணம் கொடுத்து பிரச்னையைத தீர்க்க முயற்சிக்காமல் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிப்பது அவசியம்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+