எகிறும் கிரைம் ரேட்.. 6 மாத ஆட்சியில் 800 கொலை! இருண்ட காலத்துக்கு தள்ளிய தவெக! அதிமுக மாஜி அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: இந்த 6 மாத தவெக ஆட்சியில் 800 படுகொலைகள் நடைபெற்றுள்ளது எனவும், தமிழகத்தை விட்டு பல்வேறு மாநிலங்களுக்கு தொழில் முதலீடுகள் சென்றதால் 30,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்கு பறிபோய் இருக்கிறது என விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார். மேலும், தமிழ்நாட்டை இருண்ட காலத்திற்கு தள்ளியதுதான் தவெக அரசின் ஆறு மாத ஆட்சியின் சாதனையாக உள்ளது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக மதுரையில் பேசியுள்ள அவர்," 6 மாத தவெக ஆட்சியில் சாதித்தது என்ன? சறுக்கியது என்ன என்று பார்த்தால் 2 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரைபேரத்தை நடத்தி, அதன் மூலம் இடைத்தேர்தலை நடத்தி இடமாற்றம் செய்தது தான்.

RB Udhayakumar AIADMK Vijay

இடப்பெயர்ச்சியை சாதனையாக அவர்கள் சொல்லிக் கொண்டாலும், இதில் 6 மாதங்களில் தவெக அரசு சறுக்கியது தான் அதிகம். கடந்த மே 11ஆம் தேதி விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றது.நவம்பர் 11ஆம் தேதியோடு 6 மாத கால தவெக அரசு முடிவடைந்திருக்கிறது.

ஆர்பி உதயகுமார்

இந்த 6 மாத ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல், பலாத்காரம், சிறுமிகள் கடத்தல், லாக்கப் டெத், தவெக பெண்களுக்கு கட்சி நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் பாலியல் தொல்லைகள்,பெண் போலீஸ் பலாத்கார முயற்சி, பெண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பாலியல் மெசேஜ் என தவெக ஆட்சியின் கிரைம் ரேட் கூடிக்கொண்டே செல்கிறது. இதனால் சட்டம் சீர்கெட்டு விழுந்தது தான் நிச்சயம். இதில் தவெக அரசு எவ்வளவு சரிக்கியது என்ற புள்ளி விவரங்கள் மக்களுக்கு நன்றாக தெரியும்.

தவெக ஆட்சி

இது ஒருபுறம் என்றால், மற்றொரு புறம் விலைவாசி உயர்வு, அண்டை மாநிலங்களுக்குச் சென்ற தொழில் முதலீடுகள், நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள் ,மின்வெட்டு மற்றும் மின்கட்டண உயர்வு, மின்சாரம், போக்குவரத்து துறைகளை தனியார் மயமாக்குவது, பத்திரப்பதிவு துறையை தனியார் மயமாக்குவது, ஆவின் பால், பொருட்களுக்கு கட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு, ஜிஎஸ்டி வருவாய் குறைவு, இந்தியாவில் பண வீக்கத்தில் தமிழ்நாட்டிற்கு முதலிடம் என தமிழ்நாட்டை இருண்ட காலத்திற்கு தள்ளியதுதான் தவெக அரசின் சறுக்கலாக இருக்கிறது.

800 படுகொலைகள்

மொத்தத்தில் இந்த 6 மாத தவெக ஆட்சியில் 750 லிருந்து 800 படுகொலைகள் என சராசரியாக மாதத்திற்கு 125 படுகொலைகள், அதில் தீபாவளி ஸ்பெஷல் பம்பர் பரிசாக 17 கொலைகள். அந்த 17 கொலைகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறபோது, அதற்கு நியாயம் கற்பிக்கின்ற வகையில் அமைச்சர்கள் பேசுவது எரிகிற நெருப்பிலே நெய்யை ஊற்றுவதைப் போல இருக்கிறது.

விஜய்

தேர்தலுக்கு முன்பாக விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தில் முந்தைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துத்தான் மக்களின் நம்பிக்கையைப் பெற்றார். தற்போது அதே குற்றச்சாட்டுகள் அவரது தவெக ஆட்சியின் மீது தற்போது மக்கள் முன்வைக்கப்படுவது முதலமைச்சர் விஜயின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார் என்பதிலே துளியும் ஐயம் இல்லை.

6 மாத தவெக ஆட்சி

இதில் தமிழ்நாட்டிற்கு மாபெரும் மாற்றம் வேண்டும் என நினைத்துதான் தவெகவிற்கு வாக்களித்தவர்கள் இன்றைக்கு இந்த 6 மாத தவெக ஆட்சியில் தினம் தினம் , மக்கள் திணறி கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள், தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளும் கானல் நீராகத்தான் தவெக அரசில் இருக்கிறது." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+