முதலமைச்சர் விஜய்யிடம் அப்பாயிண்ட்மென்ட் கிடைக்கல! போட்டுடைத்த விக்கிரமராஜா.. தி.நகரில் கட்டாய வசூலா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக ஆட்சி அமைந்து 6 மாதங்களாகியும் வணிகர்களின் கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் விஜய்யை சந்திக்க இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். 400க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களை மீண்டும் திறப்பது, வணிகர்களின் உரிமங்களை ஆயுள் கால உரிமங்களாக மாற்றுவது, போதைப்பொருள் விற்பனையைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் அவர் முன்வைத்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு அறிமுக கூட்டம் அரியலூரில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்..

Vikramaraja CM Vijay Tamil Nadu Traders Association T Nagar

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு

விக்கிரமராஜா பேசும்போது, "தொழில் தொடங்குவதற்கு 21 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வரவேற்கிறது. அதேநேரத்தில், தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. அந்த நிறுவனங்களை விரைவில் மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருகில் வசிப்பவர்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் நிறுவனங்களை உடனடியாக மூடாமல், உரிய விசாரணை நடத்தி, தவறுகளைச் சுட்டிக்காட்டி திருத்துவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

சென்னை தி.நகர் - கட்டாய வசூல்

சாதாரண வணிகர்களுக்கு உரிமம் என்பது அவர்களின் அடையாளம். அதனால் வணிக உரிமங்களை ஆயுள் கால உரிமங்களாக மாற்றி வழங்க வேண்டும். அரசியல் கட்சிகள் வணிகர்களிடம் கட்டாய வசூல் செய்வதாக வெளியாகும் செய்திகள் தவறானவை. சென்னை தி.நகர் உள்ளிட்ட எந்தப் பகுதியிலும் இதுபோன்ற கட்டாய வசூல் நடைபெறவில்லை. அப்படி நடந்தால் பேரமைப்பு, கட்டாயம் நடவடிக்கை எடுக்கும்.

தவெக ஆட்சி அமைந்து 6 மாதங்களாகியும் முதலமைச்சரை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. வணிகர்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்து குறைகளை எடுத்துரைக்கவே சந்திப்புக்கு அனுமதி கேட்டுள்ளோம்.

போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வரவேற்கிறோம். ஆனால், போதைப்பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிவிப்பவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்படுகிறது.

குற்றவாளிகளை கண்டறிய வணிகர்கள் சிசிடிவி காட்சிகளை காவல்துறைக்கு வழங்கினாலும், அவர்களே தாக்கப்படுகின்றனர். இதனால் தகவல் தெரிவிக்கவே பலரும் அஞ்சுகின்றனர். 450, 500 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் வருகின்றன. ஆனால், கைது நடவடிக்கையுடன் நின்றுவிடாமல் குற்றவாளிகள் மீது கடுமையான தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் போதைப்பொருள் விற்பனையையும் ரவுடித்தனத்தையும் ஒழிக்க முடியும்.

முதலமைச்சர் விஜய்

அரசு வெங்காயம், மளிகைப் பொருட்களை நேரடியாக வாங்கி விற்பனை செய்வதைத் தவிர்க்க வேண்டும். அரசு குறைந்த விலையில் பொருட்களைக் கொள்முதல் செய்து வணிகர்களிடம் வழங்கினால், அவர்கள் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யத் தயாராக உள்ளனர். விலைவாசியைக் கட்டுப்படுத்த வணிகர்கள், விவசாயிகள், அரசு அலுவலர்கள் அடங்கிய குழுவையும் அமைக்க வேண்டும்.

பான் மசாலா வைத்திருக்கும் கடைகளை மாதக்கணக்கில் மூடுவதும், ரூ.25,000 வரை அபராதம் விதிப்பதும் சாதாரண வணிகர்களைப் பாதிக்கிறது. கடைக்காரர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல், பான் மசாலா, குட்கா விற்பனை மற்றும் விநியோகத்தின் பின்னணியில் இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகளை விற்பனை செய்யும் கடைகளில் மட்டும் சோதனை நடத்தாமல், அவற்றை தயாரிக்கும் தொழிற்சாலைகளை கண்டறிந்து உற்பத்தியை தடுக்க வேண்டும். தவறு செய்யாத சாதாரண வணிகர்களை குற்றவாளிகளாக கருதி சிறையில் அடைப்பதையும் அபராதம் விதிப்பதையும் தவிர்க்க வேண்டும்" என்று விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+