உங்க டிவி முதல் UPI வரை.. AI சூப்பர் இன்டெலிஜென்ஸ் ஹேக் செய்தால் என்ன நடக்கும்? அமெரிக்கா வார்னிங்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: AI தொழில்நுட்பம் இப்போது அடுத்த கட்டமான சூப்பர் இன்டெலிஜென்ஸ் என்ற அபாயகரமான நிலையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. சாதாரண மனித மூளையை விடப் பல ஆயிரம் மடங்கு வேகமாக சிந்தித்து, தானாகவே முடிவுகளை எடுக்கும் திறன் கொண்ட இந்த AI, சைபர் குற்றவாளிகளின் கையில் சிக்கினால் நம் அன்றாட வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும்.

அதாவது மனிதர்கள் தானாக ஹேக் செய்யாமல்.. சூப்பர் ஏஐக்கு கட்டளையிட்டு ஹேக் செய்ய சொன்னால் என்ன ஆகும்? அதைத்தான் அமெரிக்கா எச்சரித்துள்ளது. இது குறித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் விடுத்துள்ள லேட்டஸ்ட் எச்சரிக்கையையும், இதனால் சாமானிய மக்களுக்கு ஏற்படக்கூடிய நேரடி ஆபத்துகளையும் இங்கே பார்க்கலாம்.

usa new york america

சூப்பர் இன்டெலிஜென்ஸ் AI என்றால் என்ன? அது எப்படி ஹேக் செய்யும்?

இப்போது நாம் பயன்படுத்தும் சாதாரண AI, நாம் என்ன கட்டளை கொடுக்கிறோமோ அதை மட்டுமே செய்யும். ஆனால், சூப்பர் இன்டெலிஜென்ஸ் என்பது மனிதர்களின் எந்த உதவியும் இல்லாமல் தானாகவே சிந்தித்து, திட்டமிட்டுச் செயல்படும் ஒரு சூப்பர் மூளை.

ஒரு சாதாரண ஹேக்கர் ஒரு சிஸ்டத்தை உடைக்கப் பல வாரங்கள் எடுத்துக்கொள்வார். ஆனால் இந்த AI, நொடிக்கு லட்சக்கணக்கான வழிகளில் முயற்சி செய்து, எந்த ஒரு சாஃப்ட்வேரில் இருக்கும் சிறிய ஓட்டையையும் தானாகவே கண்டுபிடித்து உள்ளே நுழையும்.

மனிதர்கள் தூங்குவார்கள், சோர்வடைவார்கள்.. ஆனால் AI 24 மணி நேரமும் மின்னல் வேகத்தில் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான போன்களையும் கணினிகளையும் ஹேக் செய்யும் திறன் கொண்டது.

அமெரிக்கா விடுத்துள்ள லேட்டஸ்ட் எச்சரிக்கை என்ன?

கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், விமானப் போக்குவரத்து மற்றும் வங்கி சேவைகளில் அடுத்தடுத்து தொழில்நுட்ப முடக்கங்கள் ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்து, அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் வெள்ளை மாளிகையின் White House Super Intelligence Task Force குழுவிற்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளனர்.

AI மூலம் நடக்கும் சைபர் தாக்குதல்கள் நமது பாதுகாப்பு அமைப்புகளை விட மிக வேகமாக வளர்ந்துவிட்டன. பழைய பாதுகாப்பு முறைகளை வைத்து இதனைத் தடுக்க முடியாது, என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். இதேபோல FBI மற்றும் கூகுள் நிறுவனமும் ARTEX, PentAGI போன்ற தானியங்கி AI கருவிகள் மூலம் ஹேக்கர்கள் வங்கிகள் மற்றும் அரசு நிறுவனங்களை ஹேக் செய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளன.

நம் அன்றாட வாழ்க்கையில் என்னென்ன ஹேக்கிங் நடக்கலாம்?

இந்தத் தொழில்நுட்பம் தவறானவர்களின் கையில் சிக்கினால், சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் கீழ்க்கண்ட அதிர்ச்சிகரமான விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளது..

நீங்கள் உங்கள் போனில் வைத்திருக்கும் UPI ஆப் அல்லது நெட் பேங்கிங் பாஸ்வேர்டுகளை உங்களுக்குத் தெரியாமலேயே AI கணித்துவிடும். நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போதே, வங்கிக்கு எந்தச் சந்தேகமும் வராத வகையில் சிறிய சிறிய தொகையாக உங்கள் கணக்கில் இருந்து பணத்தை மொத்தமாகக் காலி செய்துவிடும்.

உங்கள் வீட்டு வைஃபை வழியாக இணையத்தில் இணைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் டிவியை AI ஹேக் செய்ய முடியும். டிவியில் உள்ள கேமரா மற்றும் மைக் வழியாக உங்கள் வீட்டுக்குள் நடப்பதை ஒட்டுக்கேட்கவும், டிவி திரையை முடக்கிப் பணம் கேட்டு மிரட்டவும் முடியும். வீட்டு பாதுகாப்புக்காக வைத்த சிசிடிவி கேமராவையே உங்களுக்கு எதிராகத் திருப்ப முடியும்.

வாட்ஸ் ஆப்பில் நீங்கள் அனுப்பும் ஆடியோவை வைத்து, அதை மாதிரி எடுத்து.. அச்சு அசலாக உங்கள் குரலிலேயே AI பேசும். உங்கள் அப்பா, அம்மா அல்லது நண்பர்களுக்குப் போன் செய்து, "எனக்கு விபத்து ஆகிவிட்டது, உடனே பணம் அனுப்பு" என்று உங்கள் குரலிலேயே பேசி ஏமாற்றும்.

இணையத்துடன் இணைக்கப்பட்ட டெஸ்லா, மஹிந்திரா போன்ற ADAS வசதி கொண்ட நவீன கார்களின் பிரேக் அல்லது ஸ்டீயரிங் கட்டுப்பாட்டை தூரத்தில் இருந்தபடியே AIஆல் முடக்க முடியும். அதேபோல நகரங்களில் உள்ள டிராஃபிக் சிக்னல்களை ஒரே நேரத்தில் மாற்றிப் பெரும் போக்குவரத்து நெரிசலையோ விபத்துகளையோ ஏற்படுத்த முடியும்.

ஒரு நகரத்தின் மின்சார விநியோக சிஸ்டத்தை ஹேக் செய்து மொத்த ஊரையும் இருளில் தள்ளுவது, மருத்துவமனைகளில் நோயாளிகளின் உயிர்காக்கும் ஆக்சிஜன் சப்ளை கருவி போன்ற கருவிகளின் செயல்பாட்டை முடக்குவது போன்ற அபாயங்களும் இதில் உள்ளன.

தப்பிப்பது எப்படி?

தொழில்நுட்பம் வளர வளர ஆபத்தும் வளர்கிறது. எனவே, ஒவ்வொரு கணக்கிற்கும் தனித்தனி கடினமான பாஸ்வேர்டு வைப்பது, Two-Factor Authentication (2FA) ஆன் செய்வது, தேவையில்லாத நேரங்களில் ஸ்மார்ட் டிவி மற்றும் போன் ஆப்களின் கேமரா, மைக் அனுமதிகளை ஆஃப் செய்து வைப்பது மற்றும் சாஃப்ட்வேர்களை உடனுக்குடன் அப்டேட் செய்வது மட்டுமே நம்மைப் பாதுகாக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+