கேட்கவே ஷாக்கவே இருக்கே.. டெல்லி காற்று மாசுபாடு சுவாசத்தை தாண்டி.. இப்போது மூளையையும் பாதிக்கிறதாம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமான நிலையிலேயே நீடித்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI) 242 ஆகப் பதிவாகியுள்ளது. வழக்கமாக காற்று மாசுபாடு என்றாலே கண் எரிச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் மட்டுமே ஏற்படும் என்று நாம் நினைக்கிறோம்.

ஆனால், வெளியில் இருக்கும் இந்த நச்சுக் காற்று நம் மூளையின் செயல்பாட்டையும் கடுமையாகப் பாதிக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

Delhi

சமீபகாலமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பிரெய்ன் ஃபாக் - Brain Fog எனப்படும் மூளைச் சோர்வால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அலுவலகத்தில் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போவது, சாதாரண விஷயங்களைக் கூட உடனுக்குடன் மறந்துவிடுவது, படித்த வரியையே மீண்டும் மீண்டும் படிப்பது மற்றும் எந்த வேலையும் செய்யாமலேயே மூளை மிகவும் களைப்பாக உணர்வது ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

மூளையைப் பாதிக்கும் காற்று மாசுபாடு

இது குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கையில், "நம் மூளை சீராகச் செயல்படத் தேவையான அளவு ஆக்சிஜனும் ஊட்டச்சத்துக்களும் தொடர்ந்து கிடைக்க வேண்டும். ஆனால், மாசுபட்ட காற்றை நாம் சுவாசிக்கும்போது, அது உடலின் இயல்பான செயல்பாட்டைப் பல வழிகளில் தடுக்கிறது.

நம் மூளைக்குள் நச்சுப் பொருட்கள் நுழையாமல் தடுக்க ரத்த-மூளைத் தடை என்ற ஒரு பாதுகாப்பு அடுக்கு உள்ளது. காற்று மாசுபாடு மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தி, இந்த பகுதியை சேதப்படுத்துகிறது. இதனால் நச்சுப் பொருட்கள் எளிதில் மூளையைப் பாதிக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதன் விளைவாக நினைவாற்றல் குறைதல், வேகமாக முடிவெடுக்க முடியாமல் தடுமாறுதல் மற்றும் எப்போதும் மந்தமாக உணர்தல் போன்ற பிரச்சனைகள் உருவாகின்றன, என்றுள்ளனர்.

தூக்கமின்மையும் ஒரு முக்கியக் காரணம்

காற்று மாசுபாட்டுடன் சேர்ந்து, போதிய தூக்கமின்மையும் மூளைச் சோர்வைப் பல மடங்கு அதிகரிக்கிறது. இரவில் தாமதமாகத் தூங்குவது, அடிக்கடி விழித்துக்கொள்வது போன்ற பழக்கங்களால் மூளைக்குத் தேவையான ஓய்வு கிடைப்பதில்லை.

தூக்கம் என்பது உடலுக்கு மட்டுமான ஓய்வு அல்ல. பகலில் நாம் சேகரித்த தகவல்களை மூளை ஒழுங்குபடுத்தவும், மூளையில் சேரும் கழிவுகளை வெளியேற்றி தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளவும் ஆழ்ந்த தூக்கம் மிகவும் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தினமும் 7 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குபவர்களுக்கு மறுநாள் காலையில் அதிக எரிச்சல், மறதி மற்றும் அன்றாட வேலைகளைச் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.

காற்று மாசுபாடும், தூக்கமின்மையும் ஒரே நேரத்தில் ஏற்படும்போது அது மூளைக்கு இரட்டை பக்க அட்டாக் போல அமைகிறது. இவற்றுடன் அதிகப்படியான மன அழுத்தம், நீண்ட நேரம் செல்போன் மற்றும் கணினித் திரைகளைப் பார்ப்பது, உடற்பயிற்சியின்மை, போதிய அளவு தண்ணீர் குடிக்காதது மற்றும் நேரத்திற்குச் சாப்பிடாதது போன்ற பழக்கங்களும் இந்தப் பிரச்சனையை மேலும் தீவிரப்படுத்துகின்றன.

காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதையும், குறிப்பாக வெளியில் கடுமையான உடற்பயிற்சிகள் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

அவசியம் வெளியில் செல்ல நேர்ந்தால், தரமான N95 முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். வீட்டிற்குள் காற்று சுத்திகரிப்பான்களை பயன்படுத்துவது நல்லது. தினமும் 7 முதல் 9 மணி நேரம் வரை ஆழ்ந்து தூங்க வேண்டும். தினமும் ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எழுந்திருக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே செல்போன் பார்ப்பதை நிறுத்துங்கள். உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க நிறைய தண்ணீர் குடியுங்கள்.

மூளைச் சோர்வை வெறும் வேலைப்பளு சார்ந்த பிரச்சனையாக நினைத்து அலட்சியப்படுத்தக் கூடாது என்றும், சுற்றுச்சூழல் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்களைச் செய்வதன் மூலம் மூளை ஆரோக்கியத்தைக் காக்கலாம் என்றும் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+