GTA 6 என்றால் என்ன? ஏன் இத்தனை ரசிகர்கள்? 13 வருட காத்திருப்பு! உலகமே கொண்டாட காரணம் என்ன?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: சமூக வலைதளங்கள், அலுவலகங்கள், டீக்கடைகள் என எங்கு பார்த்தாலும் ஜிடிஏ 6 என்ற வார்த்தைதான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கேம் விளையாடாத சாமானியர்களுக்குக்கூட, அப்படி என்னதான் இருக்கிறது இந்த கேமில்? எதற்காக உலகமே இப்படித் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது? என்ற கேள்வி எழுந்திருக்கும். அது என்ன ஜிடிஏ? ஏன் இதற்கு இவ்வளவு ரசிகர்கள் என்று கேட்கிறீர்களா? வாருங்கள் பார்க்கலாம்..

sports game

முதலில் GTA என்றால் என்ன?

கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ - Grand Theft Auto)என்பதன் சுருக்கமே GTA ஆகும். சுருக்கமாகச் சொன்னால், இது ஒரு கணினி உலகம். அதாவது இந்த கேம் உள்ளே ஒரு நகரமே இருக்கும். அதற்குள் மக்கள் இருப்பார்கள். வழக்கமான கேம்களில் நாம் ஒரு குறிப்பிட்ட பாதையில் மட்டுமே ஓட வேண்டும் அல்லது எதிரிகளைச் சுட வேண்டும். ஆனால் GTA கேமில் அப்படி எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.

ஒரு நிஜமான பெரிய நகரத்தை அப்படியே டிஜிட்டல் வடிவில் உருவாக்கி, அதற்குள் நம்மை விட்டுவிடுவார்கள். உதாரணமாக இப்போது அசோக் நபரை வைத்து ஒரு கேம் உருவாக்கி.. அதில் உதயம் தியேட்டர்.. மெட்ரோ ஸ்டேஷன், அசோக் பில்லர் வழியாக நீங்கள் கார் ஓட்டி கேம் ஆட முடிந்தால் எப்படி இருக்கும். அப்படித்தான் இதுவும்.

இதில் நாம் கார் ஓட்டலாம், ஹெலிகாப்டரில் பறக்கலாம், கடற்கரையில் சுற்றலாம், போலீஸிடம் இருந்து தப்பிக்கலாம் அல்லது வங்கியில் கொள்ளையடிக்கும் சாகசப் பணிகளைச் செய்யலாம். ஒரு ஹாலிவுட் சினிமாவின் ஹீரோவாக நாமே மாறி, கதையை நமக்குப் பிடித்தபடி நகர்த்துவது போன்ற அனுபவத்தை இது தருவதால் தான் இளைஞர்கள் இதற்கு அடிமையாகியுள்ளனர். அமெரிக்காவின் மியாமி நகரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வைஸ் சிட்டி மற்றும் லியோனிடா ஆகிய கற்பனைப் பகுதிகளில் இதன் கதை நடக்கிறது.

GTA 6-ல் அப்படி என்ன சிறப்பு?

1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கேம் சீரிஸ் உலகம் முழுக்க பிரபலம். 2013-ம் ஆண்டு GTA 5 வெளியானது. அதன் பிறகு சுமார் 13 ஆண்டுகள் கழித்து, இன்று வெளியாகியிருக்கும் புதிய பாகம்தான் GTA 6'.

இந்த முறை ஜேசன் மற்றும் லூசியா என்ற காதல் ஜோடி கதாபாத்திரங்களை வைத்து கதை நகர்கிறது. இதில் லூசியா தான் GTA வரலாற்றிலேயே முதன்முறையாகப் லீடிங் கதாநாயகியாக அறிமுகமாகும் பெண் கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. பிளேஸ்டேஷன் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் (X|S) ஆகிய நவீன கேமிங் கருவிகளில் மட்டுமே விளையாடக்கூடிய இந்த கேமின் காட்சிகள், நிஜ சினிமாவை விடத் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளன.

பண விளையாட்டு!

சினிமா உலகையே மிஞ்சும் அளவுக்கு இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் புரள்கிறது. ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் இந்த கேமை உருவாக்கச் சுமார் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவு செய்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ₹8,400 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாகத் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். உலகிலேயே அதிக செலவில் உருவாக்கப்பட்ட பொழுதுபோக்குப் படைப்பு இதுதான்.

செலவு இப்படி என்றால், வருமானம் அதைவிட பிரம்மாண்டமாக உள்ளது. கேம் வெளியாவதற்கு முன்பே, முன்பதிவு மூலமாக மட்டுமே சுமார் 1.7 கோடி பிரதிகள் விற்றுத் தீர்ந்து, சுமார் 1.65 பில்லியன் டாலர் அதாவது சுமார் ₹13,800 கோடி வசூல் செய்து உலக சாதனை படைத்துள்ளது. கேம் வெளியான முதல் வாரத்திலேயே சுமார் 3.25 பில்லியன் முதல் 5.2 பில்லியன் டாலர் வரை அதாவது சுமார் ₹27,000 கோடி முதல் ₹43,000 கோடி வரை வருமானம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் ஏன் இவ்வளவு வெறியாக இருக்கிறார்கள்?

இதற்கு முக்கியக் காரணம் Nostalgia.. 2002-ம் ஆண்டு GTA Vice City வந்தபோது சிறுவர்களாக இருந்தவர்களும், 2013-ல் 'GTA 5' வந்தபோது கல்லூரி மாணவர்களாக இருந்தவர்களும், இன்று 30 வயதைக் கடந்த ஐடி மற்றும் கார்ப்பரேட் ஊழியர்களாக உள்ளனர்.

அன்று நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிய அதே வைஸ் சிட்டி நகரத்திற்குள், 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் செல்லப் போகிறோம் என்ற உணர்ச்சிபூர்வமான ஆர்வமே அவர்களை ஆபீஸுக்கு விடுமுறை எடுக்க வைத்துள்ளது. மேலும், நாம் விளையாடுவதற்கு முன்பே இணையத்தில் யாராவது கதையைச் சொல்லிவிடுவார்களோ என்ற பயத்திலும் முதல் நாளே விளையாடத் துடிக்கிறார்கள்.

GTA 6 பற்றிய சில சுவாரசிய தகவல்கள்

உலகப் புகழ்பெற்ற மெட்டாகிரிட்டிக் விமர்சனத் தளத்தில் 100-க்கு 99 மதிப்பெண்கள் பெற்று, வரலாற்றிலேயே அதிக மதிப்பெண் பெற்ற கேம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

இந்த உலகத்தரம் வாய்ந்த கேமின் சில முக்கியப் பகுதிகள் மற்றும் கடற்கரை காட்சிகளை வடிவமைப்பதில், இந்தியாவில் உள்ள ராக்ஸ்டார் நிறுவனத்தின் கலைஞர்களும் முக்கியப் பங்காற்றியுள்ளனர். GTA 6 வெளியாகும் நேரத்தில் தங்கள் கேம்களை வெளியிட்டால் யாரும் வாங்க மாட்டார்கள் என்பதால், பல பெரிய கேம் நிறுவனங்கள் தங்கள் வெளியீட்டுத் தேதிகளைத் தள்ளி வைத்துவிட்டன.

மொத்தத்தில், GTA 6 என்பது வெறும் வீடியோ கேம் மட்டுமல்ல.. அது ஒரு தலைமுறையின் கொண்டாட்டமாகவும், உலகப் பொருளாதாரத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு பிரம்மாண்ட பொழுதுபோக்கு திருவிழாவாகவும் மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+