மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு அதிர்ச்சி.. ஜனவரி 1 முதல் விசா கட்டாயம்! விதிகளில் திடீர் மாற்றம்
கோலாலம்பூர்: மலேசியாவுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அனுமதி விரைவில் ரத்து செய்யப்பட உள்ளது. 2027 ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மலேசியா செல்வதற்கு முன்பே விசா பெறுவது கட்டாயமாகிறது. திடீரென விசா விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது ஏன்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்!
இந்தியர்கள் விரும்பி சுற்றுலா செல்லும் நாடுகளில் ஒன்றாக மலேசியா இருக்கிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியா, சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன் ஒரு பகுதியாகவே இந்தியர்கள் விசா இல்லாமல் மலேசியாவை சுற்றி பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இனி விசா கட்டாயம்
அதன்படி இந்தியர்கள் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் விசா இல்லாமல் மலேசியாவுக்கு செல்லும் வசதியை பயன்படுத்தி வந்தனர். ஆனால், இப்போது அந்த இலவசா விசா காலம் முடிவுக்கு வந்துள்ளது. புதிய அறிவிப்பின்படி அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் இந்த விசா இல்லாமல் மலேசியா செல்ல முடியாது. ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு மலேசியாவுக்குள் நுழையும் இந்தியர்கள், பயணத்திற்கு முன்பாகவே செல்லுபடியாகும் விசாவை பெற்றிருக்க வேண்டும்.
இந்த விதி அமலுக்கு வர 1.5 மாதங்கள் உள்ள நிலையில், அதற்குள் இந்தியர்கள் விசாவுக்கு விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 1ஆம் தேதி முதல் மலேசியாவின் MyVISA இணையதள வழியாக விசா விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். எனவே, 2027 ஜனவரி மாதம் அல்லது அதற்கு பிறகு மலேசியா செல்ல திட்டமிடுபவர்கள் முன்கூட்டியே விசா கோரி விண்ணப்பிக்க வேண்டியது அவசியமாகிறது.
ஒரு வாரம் தான் டைம்
விசா விண்ணப்பங்கள் தொடர்பாக மலேசிய அரசு ஏற்கெனவே மற்றொரு புதிய விதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது நீங்கள் விசா விண்ணப்பத்தை ஓபன் செய்தால் ஒரு வாரத்திற்குள் அப்ளை செய்ய வேண்டும். விசா விண்ணப்பம் பெண்டிங் என்ற நிலையில் இருந்தால் அது 7 வேலை நாட்களுக்குள் தானாகவே காலாவதியாகிவிடும். இந்த விதிமுறை 2026 அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இப்படி காலாவதியாகும் விண்ணப்பதாரர்கள், விசா விண்ணப்ப படிவத்தை பயன்படுத்தி மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.
கட்டணம் திரும்ப கிடைக்காது
விசா விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால் விண்ணப்ப கட்டணம் யாருக்கும் திரும்ப வழங்கப்படாது என்பதாகும். விசா விண்ணப்பம் ஏற்று கொள்ளப்பட்டாலும் நிராகரிக்கப்பட்டாலும் கட்டணம் திரும்ப கிடைக்காது. உங்கள் பயண திட்டத்தை மாற்றினாலும் கூட கட்டணம் திரும்ப கிடைக்காது. மேலும், மலேசிய அரசின் உத்தரவுகளுக்கு ஏற்ப விதிமுறைகளை எந்த நேரத்திலும் மாற்றியமைக்கும் உரிமை இருப்பதாகவும் மலேசியா வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி Multiple Entry Visa - MEV வழங்குவதிலும் மலேசியா கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி 31 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த விசா வசதி கிடைக்கும் என விதிகள் மாற்றி அமைக்கப்பட்டது. அதுவும் பிஸ்னஸ், மருத்துவ சிகிச்சை, திருமண சுற்றுலா போன்ற குறிப்பிட்ட பயண நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது.
மருத்துவ காப்பீடு
இதற்கிடையே மலேசியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் தங்கியிருக்கும் முழு காலத்திற்கும் பொருந்தும் மருத்துவ காப்பீட்டை எடுத்து கொள்ளுமாறும் அந்நாடு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்த அறிவிப்பை கடந்த நவம்பர் 16ஆம் தேதி வெளியிட்டிருந்தது. அதில் வெளிநாட்டினர் மலேசியாவில் இருக்கும்போது மருத்துவ சிகிச்சை பெற வேண்டி இருந்தால் அதன் மொத்த செலவுகளையும் அவர்களே ஏற்க வேண்டும் என்று குடியேற்ற துறை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
