தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்.. நாளை நமதே! தூதுப் புறக்காளை பறக்க விட்ட எடப்பாடி? நல்லது நடக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிருப்தியாளர்களை சமாளிக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு வருகிறார் என்கின்றனர். 5 தொகுதிக்கான இடைத் தேர்தலில் கௌரவமான தொகுதிகளில் வெற்றி பெற அனைவரின் ஆதரவும் தேவை என்பதால் வேலுமணி தரப்பிடம் பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது என்கின்றனர்.

அடுத்தடுத்து பல தோல்விகளை சந்தித்து வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு மீண்டும் ஒரு அக்னி பரிட்சை காத்திருக்கிறது. 2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற நிலையில், சில மாதங்களிலேயே அவர் உயிரிழக்க நேரிட்டது.

ஓபிஎஸ் முதல்வரான நிலையில், கட்சியும் ஆட்சியும் ஒருவரிடம் இருக்க வேண்டும் என சசிகலா முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்பட்டார். நீதிமன்ற தீர்ப்பால் அவர் சிறை செல்ல நேரிட்ட நிலையில் முதல்வர் நாற்காலியில் 'அமர' வைக்கப்பட்டவர் தான் எடப்பாடி பழனிச்சாமி.

Edappadi Palaniswami

எடப்பாடி பழனிசாமி

அதற்குப் பிறகு ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள ஓபிஎஸ் உடன் கைகோர்த்து, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை வெளியேற்றினார். தொடர்ந்து பல சட்டப் போராட்டங்கள் நடத்தியும் இன்றுவரை சசிகலாவால் அதிமுகவுக்குள் வர முடியவில்லை. இதற்கிடையே அடுத்தடுத்து பல படுதோல்விகளை சந்தித்தது அதிமுக. 2019 - 2024 மக்களவைத் தேர்தல், 2021 - 2026 சட்டமன்றத் தேர்தல், இடையில் இடைத்தேர்தல்கள், நகர்ப்புற - ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் என பத்துக்கும் மேற்பட்ட தேர்தல்களில் மண்ணை கவியது அதிமுக.

அதிமுக ஒருங்கிணைப்பு

இதை அடுத்து அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோஷம் எழுந்து வருகிறது. இதற்கு இடையே 2026 தேர்தலில் தோற்ற எடப்பாடி பழனிச்சாமி திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயன்றார் எனக் கூறி அதிமுக எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். 47 எம்எல்ஏக்களில் கிட்டத்தட்ட 25 எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு எதிராக போர் க்கொடி தூக்கிய நிலையில், அதில் 6 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

தமிழக வெற்றி கழகம்

குறிப்பாக எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகியோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிலையில் அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பல முன்னாள் அமைச்சர்களும் தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்துள்ளனர்.

இடைத்தேர்தல்

அதே நேரத்தில் எஸ் பி வேலுமணி, சி வி சண்முகம் தலைமையில் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் எடப்பாடி எதிர்ப்பு மனநிலையில் தான் இருக்கின்றனர். இடையே தாராபுரம் மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற சபை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் கேபி முனுசாமி உள்ளிட்ட தனது ஆதரவாளர்களை தேர்தல் பொறுப்பாளராக நியமித்தார் எடப்பாடி. ஆனால் கடந்த தேர்தலில் வென்ற அதிமுக இந்த தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

முன்னாள் எம்எல்ஏக்கள்

இது எடப்பாடி பழனிச்சாமிக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் போட்டியிடுவது உறுதியாக இருக்கிறது.

திமுகவுக்கு ஆதரவு

சீமான் அம்பாசமுத்திரத்தில் களமிறங்கும் நிலையில் மற்ற தொகுதிகளில் தனது ஆதரவாளர்களின் நிறுத்த இருக்கிறார். திமுக போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில் என்ன செய்வது என தெரியாமல் குழம்பி வருகிறார் எடப்பாடி. தேர்தலில் போட்டியிடாவிட்டால் திமுகவுக்கு ஆதரவு என்ற தோற்றம் ஏற்படும் என்பதால் இந்த தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்கின்றனர் அதிமுகவினர்.

பேச்சுவார்த்தை

அதே நேரத்தில் கரூர், விராலிமலை உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக முன்னாள் அமைச்சர்களே தவெக சார்பில் போட்டியிடும் நிலையில் அவர்களை எதிர்த்து களம் இறங்க வலுவான வேட்பாளர்களை தேடி வருகிறார். இதற்கிடையே கொங்கு மண்டலம் உள்ளிட்டவற்றில் அதிருப்தியை சமாளிக்க அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்காக சீசிவி சண்முகம் எஸ்பி வேலுமணி தரப்பிடம் பேச்சுவார்த்தை துவங்கி இருக்கிறது என்கின்றனர். ஆனால் ஒன்றிணைந்த அதிமுக என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கும் நிலையில், இது சுமூகமாக முடியுமா என தெரியவில்லை என்றும் சொல்கின்றனர் ர.ர.க்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+