GTA V vs GTA VI.. இந்தியாவின் பணவீக்கம் எப்படி எகிறியிருக்குனு பாருங்க! வெளியான ஷாக் ரிப்போர்ட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 13 ஆண்டுகளுக்கு பிறகு GTA VI வீடியோ கேம் வெளியாகியிருக்கும் நிலையில், அப்போது இருக்கும் நிலையையும்.. இப்போதைய நிலையும் ஒப்பிட்டு பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், GTA V(2013) vs GTA VI என ஒப்பிடப்பட்டு தற்போது பணவீக்கம் அதிகரித்திருப்பதை நெட்டிசன்கள் விமர்சனங்களாக வைத்திருக்கின்றனர்.

இந்தியாவில் கடந்த 10 மாதங்களில் ஒரு சாதாரண சைவ சாப்பாட்டின் விலை 16% அளவுக்கு அதிகரித்திருக்கிறது. உணவு பணவீக்கத்தால் சமானிய குடும்பங்களின் வருமானத்தில் பெரும் பகுதி உணவுக்கே செலவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

Inflation india

கடந்த மாதம் இந்தியாவின் உணவு பணவீக்கம் 8.9% ஆக உயர்ந்திருக்கிறது. இது கடந்த 22 மாதங்களில் இல்லாத உச்சமாகும். கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து.. சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரித்தது. அதன் வெளிப்பாடுதான் இந்தியாவில் எதிரொலித்துள்ளது.

குறிப்பாக இந்தியாவுக்கான எரிபொருள் மற்றும் உரங்கள் வரும் முக்கிய கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டிருக்கும் இடையூறுகள், கச்சா எண்ணெய் மற்றும் உரங்களின் விலையை உயர்த்தி.. உணவு பொருட்களின் விலையையும் ஏற்றியிருக்கின்றன.

இதன் காரணமாக, சராசரி இந்திய குடும்பத்தின் தினசரி ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்ய.. ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு என்பதன் அடிப்படையில், விலைவாசி எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பது குறித்து.. 'தி இந்து' ஆங்கில நாளிதழில் இன்று செய்தி வெளியாகியிருக்கிறது.

அதன்படி, மசாலா பொருட்கள் மற்றும் நெய் சேர்க்காத சாப்பாட்டின் விலை ரூ.41.9 ஆகவும், ஒரு நாளைக்கு இரண்டு சாப்பாடு என்று வைத்துக்கொண்டால் ரூ.83.8 ஆகவும், ஒரு மாதத்திற்கு ரூ.2,514.6 ஆகவும் கணக்கிடப்பட்டிருக்கிறது. அதேபோல சராசரி ஊதியம் ரூ.26,310 ஆகவும், ஊதியத்தில் உணவு செலவின் பங்கு 9.6% ஆக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உணவு பொருட்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் வெங்காயம் விலை உயர்வுதான். இந்த ஆண்டில் மட்டும் வெங்காயம் 100%க்கு மேல் அதிகரித்துள்ளது. பூண்டு மற்றும் அரிசி இதே காலகட்டத்தில் 22% மற்றும் 11% என விலை உயர்ந்திருக்கிறது. இது தவிர துவரம் பருப்பு ரூ.16.78 வரையிலும், சமையல் எண்ணெய் ரூ.6.91 அளவுக்கும் உயர்ந்திருக்கிறது. கடந்த ஓராண்டில் சராசரியாக மாத ஊதியம் 12.7% அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்றாலும்.. உணவு செலவு 13.4% அதிகரித்துள்ளது. இதனால் ஊதிய உயர்வின் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை.

இந்த தகவல்களை அப்படியே GTA V (2013) வந்தபோது, விலைவாசி எப்படி இருந்தது என்பதை நெட்டிசன்கள் ஒப்பிட்டு விமர்சித்து வருகிறார்கள். அப்போது உணவு பணவீக்கம் 11-15% வரை இருந்தது. அப்போதும் பருவமழை பாதிப்பு மற்றும் ரூபாயின் வீழ்ச்சி காரணமாக உணவின் விலை அதிகமாவே இருந்தது. குறிப்பாக வெங்காயத்தின் விலை ரூ.80-100 வரை உயர்ந்து நெருக்கடி கொடுத்தது.

2012 உடன் ஒப்பிடும்போது 2013ம் ஆண்டு உணவு பொருட்களின் விலை 12-15% வரை அதிகரித்ததால்.. மக்கள் தங்கள் வருமானத்தில் 40-48% வரை உணவுக்காக மட்டுமே செலவிட வேண்டிய நெருக்கடியில் இருந்தார்கள்.

2013ல் GTA V வெளியான போதும் சரி, 2026ல் GTA VI வெளியான இந்த நேரத்திலும் சரி, உணவு பணவீக்கத்தால் மக்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+