மூத்த மகள் ஐஸ்வர்யா விவாகரத்து பற்றிய வதந்திகளுக்கு.. நடிகர் அர்ஜுன் கோபமான பதிவு! பலருக்கு பதிலடி
சென்னை: நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் வெளியான போது அதில் பலரும் மூத்த மகள் ஐஸ்வர்யா தனியாக இருக்கிறாரே? அவருடைய கணவரை பிரிந்து விட்டாரா? என்று கேள்வி எழுப்பி வந்தனர். இதைப்பற்றி பல விவாதங்களும் போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து நடிகர் அர்ஜுன் தனது மகளுக்கு சப்போட்டாக கோபமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
நடிகர் அர்ஜுன் பதிவு
அந்த பதிவில், "முதலில் அஞ்சனாவின் திருமணத்தை முன்னிட்டு அவருக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் தங்களது அன்பையும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்பும், வாழ்த்துக்களுக்கும் எங்களுக்கு எப்போதும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. எங்களை நினைத்து வாழ்த்திய அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றி." என்று கூறியிருக்கிறார்.
மேலும் அதே பதிவில், "ஆனால் இது போன்ற ஒரு விஷயத்தை பொதுவெளியில் பேச வேண்டிய சூழல் ஏற்படும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. எனது இளைய மகளின் திருமணத்தின் போது எனது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு யூகங்களும், விவாதங்களும் எழுந்தன. அவரது தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் அவர் தனியுரிமையை மதித்து அது குறித்து கருத்து தெரிவிப்பதை நான் திட்டமிட்டு தவிர்த்து வந்தேன்.

பெண்ணின் உரிமை
ஒவ்வொரு பொண்ணுக்கும் தனது வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் உரிமையும் தனக்கு பிடித்தபடி வாழும் சுதந்திரமும் உள்ளது. அவர் விரும்பினால் சரியான நேரத்தில் தனது தரப்பிலான விளக்கத்தை அவரே தெரிவிப்பார். ஆனால் ஒரு தந்தையாக எனது மகளையும் அவரது குணத்தையும் தனிப்பட்ட வாழ்க்கையும் குறிவைத்து ஆதாரமற்ற மற்றும் மிகவும் இழிவான குற்றசாட்டுகள் முன்வைக்கப்படுவதை பார்த்துக்கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியாது.
அப்பாவாக சப்போர்ட்
நடிகர்களாகிய நாங்கள் பொது வாழ்க்கையில் இருக்கும் போது யூகங்களும், விமர்சனங்களும் தவிர்க்க முடியாதவை என்பதை புரிந்து கொண்டுள்ளோம். ஆனால் யூகங்களுக்கும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை திட்டமிட்டு பரப்புவதற்கு இடையே தெளிவான வேறுபாடு உள்ளது. பொதுவெளியில் இருப்பது என்பது யார் வேண்டுமென்றாலும் கதைகளை புனைந்து பரப்புவதற்கு, ஒருவரின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிப்பதற்கோ உரிமம் அளிப்பதல்ல. எந்தவித ஆதாரமும் இன்றி ஒரு பெண்ணை மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று முத்திரை குத்துவது உள்ளிட்ட ஆதாரம் அற்ற மற்றும் இழிவான கருத்துக்களை தெரிவிப்பது மிகவும் பொறுப்பற்றதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும்.
அமைதி காப்பதே பல நேரங்களில் கண்ணியமான அணுகுமுறை என்று நாங்கள் எப்போது நம்பி வந்திருக்கிறோம். ஆனால் எங்களது மௌனத்தை இதுபோன்ற செயல்களால் ஏற்றுக் கொள்வதாக ஏற்றுக் கருதக்கூடாது. அது போல் தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்படுவதற்கு, பெரிதாக்கப்படுவதற்கும் எங்களது அமைதி இடம் அளிக்காது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான புகார் அளித்து உரிய நடவடிக்கைகளை எடுத்து உளளோம்.
சிலரின் மோசமான செயல்
பத்திரிக்கை துறையும் செய்தி வெளியிடும் பணியையும் நான் மிகவும் மரியாதையுடன் மதிக்கிறேன். இருப்பினும் உண்மை மற்றும் நம்பகத் தன்மையை பற்றி சிறிதும் கவலைப்படாமல் தங்களது செய்திகளை பிரபலப்படுத்துவதற்கு ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகளையும் தனிப்பட்ட தாக்குதல்களையும் பரப்புவதற்கு சில ஊடக பிரிவுகள் தங்களது பொறுப்பை தவறாக பயன்படுத்துவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஒரு தந்தையாக எனது மகளுக்கும், கண்ணியத்துடனும், சுதந்திரத்துடனும், சுயமரியாதையுடனும் தனது வாழ்க்கையை வாழ்வதற்கு அவரது உரிமைக்கும் நான் எப்போதும் துணையாக நிற்பேன்.
சட்ட நடவடிக்கை தொடரும்
இனிவரும் காலங்களில் சம்பந்தப்பட்டவர்கள் உரிய கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். இது போன்ற ஆதாரமற்ற, அவதூறான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து பரப்பப்படும் அல்லது மேலும் பெரிதாக்கப்பட்டாலும் அதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மரியாதையும் கண்ணியமும் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளக் கூடியவை அல்ல. இது எனது மகளைப் பற்றிய விஷயம் மட்டுமல்ல. ஒவ்வொரு பெண்ணின் கண்ணியமும், கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தேர்வுகள் பொதுவெளியில் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவது குறித்த விஷயமாகும்.
குறிப்பாக குடும்பத்தின் ஆதரவு இல்லாத பெண்களுக்கு இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்த கூடும். எனவே கடினமான சூழ்நிலையில் இருக்கும் அவர்களது வாழ்க்கை பயணத்தில் இது மேலும் சிக்கலாக்குகிறது. எந்த பெண்ணும் இதுபோன்ற சூழலை தனியாக எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படக்கூடாது. தனது வாழ்க்கையை தனக்கு பிடித்தபடி வாழ்வதற்கு எந்த பெண்ணுக்கும் தன்னை நியாயப்படுத்த வேண்டிய அவசியமும் இருக்கக் கூடாது" என்று அந்த பதிவில் அர்ஜுன் குறிப்பிட்டிருக்கிறார்.
போட்டோவால் விவாதம்
அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமா பதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்த இவர்களுடைய திருமண வாழ்க்கையில் என்ன நடந்தது என்று தெரியாது, ஆனால் தனது தங்கை அஞ்சனாவின் கல்யாணத்தில் ஐஸ்வர்யா மட்டும் தனியாக கலந்து கொண்டதும் இதை வைத்து சில யூடியூப் பிரபலங்கள் விமர்சிக்க தொடங்கி விட்டார்கள்.

தவறான வீடியோக்கள்
அர்ஜுன் மீதும், அவருடைய மகள் மீதும் பல குற்றச்சாட்டுகளை வைத்து தொடர்ச்சியாக வீடியோக்கள் வெளியிட்டு வந்தனர். ஆனால் நாங்கள் பிரிந்து விட்டோம் என்றோ அல்லது எங்களுக்குள் பிரச்சனை என்றோ உமா பதியோ அல்லது ஐஸ்வர்யாவோ எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அப்படி இருந்தும் இது பற்றிய விவாதம் சோசியல் மீடியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல அர்ஜுன் தனது மகளுக்கு சப்போர்ட்டாக பதிவு வெளியிட்டிருக்கிறார். இதுதான் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications
