அதிருப்தி எம்எல்ஏக்களை இழுக்க.. திமுக, அதிமுக சதி.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் விஜய் ஷாக்!
சென்னை: முதல்வர் விஜய்யை சந்திக்க முடியாததாலும், சந்திக்க சிலர் தடை போடுவதாலும், தொகுதி பிரச்னைகள் குறித்து பேச முடியாததாலும் தவெக எம்.ஏல்.ஏ.க்கள் பலர் அதிருப்தியில் இருப்பதை அறிந்து அவர்களை தங்கள் பக்கம் இழுக்க திமுக, அதிமுக கட்சிகள் ரகசிய பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக உளவுத்துறை கொடுத்த அறிக்கையால் முதல்வர் தரப்பில் அதிர்ச்சி ஏற்பட்டது.
இதனை அடுத்து, அதிருப்தி எம்.எல்.ஏ. க்களை சரி கட்டவும், தவெக எம்.எல்.ஏ. க்கள் அனைவரையும் சந்தித்து நீங்கள் பேசினால் எம். எல். ஏ. க்கள் அனைவரும் திருப்தியாவார்கள் என அலோசகர்கள் சொன்ன யோசனையை ஏற்று கொண்டார் விஜய்.

மாமல்லபுரத்தில் தவெக எம்.எல்.ஏ. க்கள் கூட்டம்
அதனாடிப்படையில் தால் தான், மாமல்லபுரத்தில் தவெக எம்.எல்.ஏ. க்கள் அனைவரையும் சந்தித்து பேசினார் விஜய். இதன் பிறகு, தவெக எம்.எல்.ஏ. க்களிடம் அதிர்ப்திகள் மறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. முதல்வரும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சொல்கின்றனர்.
இந்த மாமல்லபுரம் கூட்டத்தை எந்தவித சலசலப்பும் இல்லாமல் மிக நேர்த்தியாக ஒருங்கிணைத்து நடத்தியவர் கட்சியின் பொதுச்செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த். கூட்டத்தின் வெற்றிக்குப் பிறகு, மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசியல் ஆலோசகர்கள் முன்னிலையில் புஸ்ஸி ஆனந்தை முதல்வர் விஜய் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
அத்துடன், "இனி கட்சியின் முழு பொறுப்பையும் நீங்கள் தான் கவனிக்க வேண்டும். யாரின் தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக செயல்படுங்கள் எனும் அதிகாரத்தை புஸ்ஸி ஆனந்திற்கு கொடுத்துள்ளார் விஜய் " என்கிறார்கள் தவெகவினர்.
விஜய் சொன்னது என்ன?
மாமல்லபுரம் மீட்டிங் முடிந்ததும் சீனியர் அமைச்சர்கள், ஆலோசகர்கள் முன்னிலையில் புஸ்ஸியிடம் இதனை தெரிவித்திருக்கிறார் விஜய்.
தவெக எம்.எல்.ஏ. க்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனை மாதிரி, தவெக வின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ஆகியோரை அழைத்து ஒரு ஆலோசனை கூட்டம் நடத்த முதல்வரிடம் உளவுத்துறை ஒரு ரிப்போர்ட் தந்துள்ளதாம். இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்த புஸ்ஸியிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து, எம்.எல்.ஏ-க்களை அழைத்துப் பேசியது போல, விரைவில் அனைத்து மாவட்ட மற்றும் ஒன்றியச் செயலாளர்களையும் அழைத்து ஒரு பிரம்மாண்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட உள்ளது.
நிர்வாகிகளின் அட்ராசிட்டி அதிகம்
அதாவது, மேற்கண்ட நிர்வாகிகளின் அட்ராசிட்டி அதிகமாக இருப்பது, சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் அரசு கெட்டப் பெயர் ஏற்படுவதாகவும், அவர்களை எச்சரிக்கை செய்ய ஒரு மீட்டிங் போட்டு அறிவுறுத்தலாம் என்கிற யோசனை சொல்லப்பட்டதன் அடிப்படையில் புஸ்ஸியிடம் சொல்லப்பட்டுள்ளது.
கட்சியை இனி முழுமையாக கவனிக்க சொல்லி கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதால், மா. செ. க்கள் மற்றும் ஓ. செ. க்களின் கூட்டத்தைக் கூட்டவிருக்கிறார் புஸ்ஸி ஆனந்த்!
தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ள புஸ்ஸி, சென்னை திரும்பியதும், நிர்வாகிகளுடனான கூட்டத்தை எப்போது நடத்தட்டும் என்று முதல்வர் விஜய்யிடம் கலந்து பேசி ஒரு முடிவு எடுக்க தீர்மானித்துள்ளாராம் புஸ்ஸி ஆனந்த்!
- சிறப்பு நிருபர் எழில்



Click it and Unblock the Notifications
