சென்னையில் இன்று கனமழை பெய்ய வேண்டிய நாள்.. ஆனால் அடிக்கும் வெயிலைப் பாருங்கள்.. என்ன ஆனது புயல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'என் வழி தனி வழி' என்று தமிழகத்துக்கு வரவேண்டிய அக்வான் புயல் ஒடிசா பக்கம் 'டாட்டா' காட்டிப் போய்விட்டது. இதனால் சென்னையில் கனமழை பெய்யும், ஏரிகள் எல்லாம் நிறையும், தண்ணீர் பஞ்சம் வராது என்று எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகி உள்ளன. உண்மையில் வானிலை கணிப்புகளின்படி, இன்று சென்னையில் மிக கனமழை பெய்ய வேண்டும். ஆனால் ஆந்திரா-ஒடிசா இடையே நாளை கரையைக் கடக்க உள்ளதால், சென்னையில் வெயில் சுட்டெரிக்கிறது.

வங்கக்கடலில் உருவான 'அக்வான்' புயல் எந்தப் பாதையில் பயணிக்கப் போகிறது, எப்படி வரப்போகிறது என்பதில் தெளிவு இல்லாமல் இருந்தது. சிலர் புயல் நெல்லூர்-சென்னை இடையே கரையைக் கடக்கும் என்றார்கள். சிலர் ஏனாம்-விசாகப்பட்டினம் பக்கம் கரையைக் கடக்கும் என்றார்கள். ஆனால் இரண்டு பக்கமும் இல்லை. புயல் மெதுவாக வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையையொட்டி நரசாபூர்-பூரிக்கு இடையே கரையைக் கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

cyclone

பொய்த்து போன கணிப்புகள்

இதனால் அக்வான் புயல், வட தமிழகப் பகுதிகளை நோக்கி வந்து நல்ல மழையைக் கொடுக்கும் என்ற கணிப்பு பொய்த்துப் போயிருக்கிறது. இன்றும், நாளையும் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், வடகிழக்கு பருவமழைக் காலத்தில் தமிழகத்துக்கு அக்வான் நல்ல மழையைக் கொடுக்கும் என்றும் சில வானிலை ஆய்வாளர்கள் கணித்தனர். ஆனால் கடல் சார்ந்த அலைவுகள் அடியோடு மாறியதால், எல்லாமே ஏமாற்றமாகி உள்ளது. வறண்ட காற்று, காற்று முறிவு போன்ற காரணிகளால் புயல் ஒரு அமைப்பே சென்னை பக்கமே இல்லாமல் போய்விட்டது.

மேகங்கள் உருவாக முடியாத நிலை

அதேபோல் தமிழ்நாட்டில் காற்று முறிவு காரணமாக மழைக்கான மேகங்களை உருவாக்க முடியாத நிலை உள்ளது. மேற்கத்திய தாழ்வுநிலை, புயலில் இருக்கக்கூடிய ஈரப்பதத்தைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டது. இதனால் புயல் தமிழகம் நோக்கி வர முடியாத சூழல் வந்துள்ளது. இதனால்தான் அக்வான் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகராமல், தற்போது வடக்கு-வடமேற்கு திசையில் நகரத் தொடங்கியிருக்கிறது. வட தமிழகப் பகுதிகளில் முதலில் புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அக்வான், தற்போது ஒடிசா அருகில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என் வழி தனி வழி

என் வழி தனி வழி என அக்வான் புயல், அக்கட தேசத்தைக் கடந்து ஒடிசா பக்கம் ஓடிப்போனதால், சென்னைக்கு ஏமாற்றமாகி உள்ளது. சென்னையில் கனமழைக்குப் பதில் கடுமையான வெயில் அடிக்கிறது. சென்னை மட்டுமல்ல, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை இல்லை. அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே இருக்குமாம்.

அடுத்த மழை எப்போது

இந்த அக்வான் புயல் முழுவதுமாக விலகிச் சென்ற பின்னரே அடுத்தகட்டமாக தமிழ்நாட்டிற்கு மழை கிடைக்கும். அதாவது கிழக்குத் திசைக் காற்றின் காரணமாக மழைப்பொழிவைக் கொடுக்கும் சாதகமான சூழல் வருகிற 23-ஆம் தேதியில் இருந்து இருக்குமாம். அதன்படி, 23-ஆம் தேதி (திங்கட்கிழமை) கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், சென்னை உள்ளிட்ட சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய அதிக வாய்ப்பு இருக்கும் என்கிறார்கள்.

ஏமாற்றத்தை சந்தித்த சென்னை

ஒட்டுமொத்தமாக சென்னை ஏமாற்றத்தையே சந்தித்துள்ளது. டிசம்பரில் ஏதாவது புயல் வந்தால்தான் மழை கிடைக்கும். அப்போது பெய்யும் மழை சென்னைக்கு மிகவும் முக்கியமாகும். ஒருவேளை மழை பெய்யாமல் ஏமாற்றினால், அடுத்த ஆண்டு கோடையில் சென்னை மிக மோசமான தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். போர்களில் கூட தண்ணீர் வற்றிப்போகும் வாய்ப்பு ஏற்படும் என்று சூழலியல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+