வங்கதேசத்தில் பயங்கர வன்முறை.. முகமது யூனுஸ் வீடு - வங்கிகளை தீவைத்து எரித்த ஷேக் ஹசீனா ஆதரவாளர்கள்
Subscribe to Oneindia Tamil
டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நம் நாட்டில் இருந்து வங்கதேசத்துக்கு செல்வதாக அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பையொட்டி வங்கதேசத்தில் வன்முறையை வெடித்துள்ளது. இந்நிலையில் தான் முன்னாள் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் வீடு, வங்கிகள் மற்றும் ஆளும் கட்யியான பிஎன்பி-யின் அலுவலகத்தை ஷேக் ஹசீனா ஆதரவாளர்கள் தீவைத்து எரித்து வருகின்றனர். இது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் பூர்வீக இ்லம் சட்டோகிராம் நகரில் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்கள் நேற்று இரவு அந்த வீட்டை தீவைத்து எரித்தனர்.


Click it and Unblock the Notifications
