அன்பு மட்டும் போதும்.. ’லட்டு’களை இறக்காத எடப்பாடி! ஆர்வமில்லாமல் அசால்ட்டாக அதிமுக ர.ர.க்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் பரபரப்பாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், அதிமுகவில் குழப்பம் வெடித்துள்ளது. திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை உள்ளிட்ட தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதிமுகவில் போட்டியிட நிர்வாகிகள் அவ்வளவாக ஆர்வம் காட்ட வில்லையாம். தேர்தலுக்கான 'லட்டு'க்களை ஒதுக்கவும் தலைமை தயங்குவதால், கைக் காசை செலவழிக்க ரத்தத்தின் ரத்தங்கள் விரும்பவில்லை என்கின்றனர்.

2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு மற்றும் ஒரு தேர்தலை சந்திக்க தமிழகம் தயாராகி வருகிறது. சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வென்ற தமிழக வெற்றிக் கழகம் தனி பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை.

AIADMK

இதை அடுத்து விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கிறது தவெக. இடையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர் கொடி தூக்கிய எம்எல்ஏக்கள் சிலர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

இடைத் தேர்தல்

ஏற்கனவே இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தனது திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதை அடுத்து தமிழகத்தில் மொத்தம் 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதில் மதுராந்தகம், தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இரண்டு தொகுதிகளையும் தமிழக வெற்றிக் கழகமே கைப்பற்றியது.

தேர்தல் ஆணையம்

தற்போது திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை, பெருந்துறை ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி டிசம்பரில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிக்கைக்குள் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

தமிழக வெற்றிக் கழகம்

இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளனர். கரூரில் எம் ஆர் விஜயபாஸ்கர், விராலிமலையில் சி விஜயபாஸ்கர், பெருந்துறையில் ஜெயக்குமார், அம்பாசமுத்திரத்தில் இசக்கி சுப்பையா ஆகியோரே போட்டியிட இருக்கின்றனர் திருச்சி கிழக்கு தொகுதிக்கான வேட்பாளர் தேர்வில் விஜய் மிக கவனமாக இருக்கிறார். தான் வென்ற அந்த தொகுதியில் வென்றாக வேண்டும். தொகுதி முழுவதும் மட்டுமல்லாது தமிழகம் அறிந்த முகமாக இருந்தால் வெற்றி எளிதாக வசப்படும் என்பதால் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

சீமான்

மறுபுறம் சீமான் வழக்கம்போல் தனித்து தான் களமிறங்க வேண்டிய சூழல் உள்ளது. பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை என அதிமுக தெரிவித்து விட்ட நிலையில், நாதகவில் பெயருக்கு வேட்பாளர்கள் களமிறங்குவார்கள் என்கின்றனர் தம்பிகள். அம்பாசமுத்திரத்தில் சீமான் போட்யிடுகிறார்.

திமுக

திமுகவிலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தேர்தல் வேலைகளை தொடங்காவிட்டாலும், கிட்டத்தட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது. வேட்பாளரை அறிவிப்பது மட்டும்தான் மிச்சம் என்கின்றனர் உடன்பிறப்புகள். இது ஒரு புறம் இருக்க அதிமுக சார்பில் யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அதிமுக வேட்பாளர்கள்

ஏற்கனவே அந்த தொகுதிகளில் கோலோச்சி வந்தவர்கள் தான் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து மீண்டும் போட்டியிட இருக்கின்றனர். அவர்களை தாண்டி இரண்டாம் கட்ட தலைவர்கள் தங்களுக்கு பதவி கிடைத்தால் போதும் என நினைத்திருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை என்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி

சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் தருவதில்லை. பூத் கமிட்டி பிரச்சார செலவுகளுக்கு கூட கைக் காசைப் போட்டு தான் செலவு செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. தலைமையும் கடந்த தேர்தலில் பெரிய அளவில் உதவவில்லை. இதனால் ரத்தத்தின் ரத்தங்கள் இடைத்தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்ட வில்லையாம். அதே நேரத்தில் வேட்பாளரை களம் இறக்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தால் தனக்கு நெருக்கமானவர்களை தேர்தலை நிற்கவைக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு வருகிறார் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+