"நான் திமுககாரன்" திருமணம் செய்வதாக பணம் பறிப்பு! டம்மி டாடியே இப்ப வாய் திறங்க! தவெக விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சியில் திருமணம் செய்வதாக பெண்ணை ஏமாற்றி பணம் பறிப்பில் ஈடுபட்ட திமுக நிர்வாகி குறித்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்டோர் வாயை திறப்பார்களா என தவெக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: சித்தரஞ்சன் சாலை அரசியல் மூர்த்தி டம்மி டாடி அவர்களே, எங்கே இருக்கிறீர்கள்?. உங்கள் தீயசக்தியின் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகி ஒருவர், திருமணம் செய்வதாய் கூறி ஏமாற்றியதோடு பணத்தையும் கறந்துள்ளார்.

TVK

தீயசக்தி திமுகவின் தலைமை முதல் கீழ்மட்ட நிர்வாகி வரை ஆணவத்துடன் சொல்லும் 'நான் திமுககாரன்' என்ற அதே வசனத்தை தான் ஏமாற்றிய பெண்ணை மிரட்டும்போதும் உங்கள் இளைஞரணி நிர்வாகி கூறி உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

டம்மி டாடி

டம்மி டாடியே இப்போது வாயைத் திறப்பீர்களா?. ரீபோஸ்ட்நிதியே இப்போது வந்து உளறவாவது செய்வீர்களா?. கனிமொழி அக்கா இதற்காகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவீர்களா?.

தீ நாக்கு

தீயசக்தியின் தீநாக்குகளாக ஊடகங்களில் உலவும் வாடகை வாய்கள் எங்கே?.பெண்ணியம் பேசும் தீயசக்தியின் பித்தலாட்டக் கூட்டம் எங்கே?. பாலியல் சுரண்டல் கழகம் என்று டம்மி டாடி சொன்னது தன் கட்சியைப் பார்த்துதான் என்பதை அவரது அடிவருடி நிர்வாகி ஒருவரே நிரூபித்துள்ளார். இனியாவது அடுத்தவர் மீது அடிப்படையற்ற அவதூறுகள் பரப்புவதை நிறுத்தினால் நல்லது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேரு சகோதரர் இல்லத் திருமணம்

திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் இல்லத் திருமண விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய ஸ்டாலின், 6 மாதமாக தமிழகத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மன்னிக்கவும், ஆட்சி என்று சொல்லக் கூடாது. அது ஒரு காட்சியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. அது சும்மா வெத்து வேட்டாகத்தான் ஒரு சீன் காட்டி கொண்டிருப்பதை போல ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

மாற்றம் ஏமாற்றம்

மாற்றம் மாற்றம் என சொன்னார்கள். அது தமிழக மக்களை பொருத்த அளவில் மிகப் பெரிய அளவில் ஏமாற்றம்தான் உருவாகி இருக்கிறது. திரையில் கதாநாயகமாக நடித்து நிஜத்தில் ஒரு வில்லனாக உலா வந்து கொண்டிருப்பவர்தான் தமிழகத்தின்முதல்வராக இருப்பவர்.

பாலியல் கொடுமைகள்

எங்கு பார்த்தாலும் பாலியல் கொடுமைகள், வன்கொடுமைகள்தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அந்த வன்கொடுமைகளுக்கு ஆளாக கூடியவர்கள் எல்லாம் எப்படிப்பட்ட மக்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த பாலியல் கொடுமைகளுக்கு எல்லாம் காரணமாக இருப்பவர்கள் யார் என்பதை பற்றியும் உங்களுக்கு தெரியும்.

காரமடை ஒன்றிய செயலாளர் தலைமறைவு

காரமடை பகுதியில் ஒன்றியச் செயலாளர் தலைமறைவாகிவிட்டார். இன்று இருக்கம் தவெக கட்சியின் பெயரை மாற்றி கூட அவர்களுக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னால், "பாலியல் சுரண்டல் கழகம்" என்றுதான் பெயர் வைக்க வேண்டும் என்ற சூழல் உருவாகும்.

தூய சக்தி

தூய சக்தி, தூயசக்தி என சொல்லி ஒரு கொடுமையான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. ஒரு மனு கொடுக்க வந்த தோழரையே மக்கள் பிரதிநிதியையே துணை சபாநாயகர் தாக்கி இருக்கிறார் எந வீடியோ காட்சிகள் எல்லாம் பார்த்தீர்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஆட்சியருக்கே என்ன நிலை ஏற்பட்டிருக்கிறது என சொன்னால் இங்கு அமர்ந்திருக்கும் நமது கனிமொழிதான் அந்த செய்தியை முதன்முதலில் வெளிப்படுத்தி மக்களிடம் எடுத்துச் சொன்னார். இதுகுறித்து கூட முதல்வர் வாய்த் திறக்க மறுக்கிறார். இவ்வாறு ஸ்டாலின் விமர்சித்திருந்தார். அதற்கு இன்று தவெக ஐடி விங் திமுக நிர்வாகி மீதான புகாருடன் பதில் அளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+