அன்பில் மகேஷுக்கு அடுத்த நான் தானா? ஒரே மன உளைச்சலா இருக்கு! ஓபனாகப் பேசிய மாஜி எவ வேலு! என்னவாம்?
திருவண்ணாமலை: பொதுப் பணித்துறையில் 2000 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியிருந்த நிலையில், துறையில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். மேலும், அன்பில் மகேஷுக்கு அடுத்து நான் தான் கைதாகப் போவதாக வந்துள்ள செய்திகளால் மன உளைச்சலில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை திமுக சட்டமன்ற உறுப்பினரும், தமிழக முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ. வேலு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர்," 13.11.26 அன்று ஒரு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனன் குற்றச்சாட்டு முன் வைத்தார்.
அதற்கு நான் முழு விளக்கம் அளித்து விட்டேன். அரசு அதிகாரிகளுக்கு தான் அந்த குற்றச்சாட்டுக்கான விளக்கம் தெரியும். அரசாங்கத்திற்கோ அமைச்சருக்கோ தெரியாது. 2000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தார்.

எ.வ. வேலு
சாலை, பொழுதுபோக்கு, செடி வெட்டுதல், மரத்திற்கு வர்ணம் பூசி எண் எழுதுதல், பாலங்கள் சீர் செய்வது, சிறுபாலங்கள், கல்வெட்டு, நீர் பாதையை சுத்தம் செய்யவும், பணி நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்பு அகற்றுவது போன்ற பணிகள் ஆண்டு முழுவதும் நடைபெறுகிறது. அரசின் சார்பாக ஒதுக்கப்படும் பாலத்தை 80% பணம் எதற்காக செலவு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 20% பணம் அவசர காலத்தில் மழை வெள்ளம் வரும்போது பயன்படுத்துவார்கள்.
நெடுஞ்சாலைத்துறை
நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றும் கோட்டக் பொறியாளர் கண்காணிப்பு பொறியாளர்கள் தலைமையில்தான் இந்த பணிகள் நடைபெறும் . ஒப்பந்தம் செய்யப்படாமல் நான் பதவியில் இருந்த காலத்தில் எந்த பணிகளும் நடைபெறவில்லை உரிய பதிவேடுகளில் பார்த்தால் தெரியவரும். கோட்ட பொறியாளர் தலைமையில் டெண்டர் முறையாக விடப்பட்டிருக்கிறதா? பணிகள் வழியாக செய்யப்படுகிறதா? கணக்கு வழக்குகள் முறையை சரி பார்க்கும் பணிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் ஒவ்வொரு ஆண்டும் இன்டர்னல் ஆடிட்டிங் நடைபெற்று இருக்கிறது.
ஆதவ் அர்ஜுனா
அமைச்சர் பதவி வகித்த தனக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொல்லும் குற்றச்சாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விளக்கம் அளித்து வருகிறார். அன்பில் மகேஷுக்கு அடுத்து நான் தான் என ஒரு செய்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் என்னைப் பற்றி தவறாக நினைக்கும் வகையில் ஒரு சதவீதம் கூட உண்மையில்லாத செய்தியை அட்டை படத்தில் போட்டுள்ளது. ஒரு பத்திரிகை இதனால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன்.
மன உளைச்சல்
உணவுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் உச்சநீதிமன்றத்தில் எனது துறையினை பாராட்டினார்கள். பெரிய நாளிதழ்கள் கதை எழுதும் அளவிற்கு எனது பணிகள் இருந்தது. பொது வாழ்வில் இருக்கும் தனக்கு மன உளைச்சல் ஏற்படும் அளவிற்கு அந்த தனியார் பத்திரிக்கை அட்டைப் படத்தில் வெளியிட்டுள்ளது. படித்தவர்களுக்கும் படிக்காதவருக்கு மத்தியில் மன உளைச்சல் ஏற்படும் வகையில் தன்னை பற்றி அவதூறு பரப்பி இருக்கின்றனர்.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு
அதன் காரணமாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறேன். மான நஷ்ட ஈடு வழக்கு முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் வழக்கு போட்டிருக்கிறேன். பொது வழியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வழக்கை தொடர்ந்துள்ளேன். நீதிமன்றத்தின் மீது தனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறேன். பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள தன் மீது இட்டுக்கட்டி பேசும் சம்பவங்களை எடுத்துக்காட்டி வழக்கு தொடர்ந்திருக்கிறேம்ன்.
பொறுப்பு அமைச்சர்
சட்டமன்றத்தில் நம்முடைய மாவட்டம் மற்றும் தொகுதியை பற்றி சட்டமன்றத்தில் பேசி வருகிறேன். இப்போது பொறுப்பு மந்திரியாக இருக்கக்கூடியவர் பொறுப்பாக பார்க்க வேண்டும். அவர் சரியாக பார்க்கவில்லை. அவர் என்றாவது ஒருநாள் அமைச்சர் திருவண்ணாமலைக்கு வருகிறாரா? வீடியோ எடுத்து சென்று ரீல்ஸ் போடுவதில் தான் கவனமாக இருக்கிறார்" என்றார்.




Click it and Unblock the Notifications
