"ரூ.1 கோடி தரணும்".. திமுக பரந்தாமனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய ஆதவ் அர்ஜுனா! பின்னணி
சென்னை: திமுகவின் சட்டப்பிரிவு இணை செயலாளர் பரந்தாமன் தனது பேச்சுக்கு பொதுவெளியில் மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால் ரூ.1 கோடி கோரி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடருவேன் என்று தவெகவின் பொதுப்பணித்துறை அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
முதல்வர் விஜய் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் ஆதவ் அர்ஜுனா. தவெகவில் தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவின் பொதுச்செயலாளராக இருக்கிறார்.

இ்நிலையில் தான் ஆதவ் அர்ஜுனா, திமுகவின் சட்டப்பிரிவு இணை செயலாளர் ஐ பரந்தாமனுக்கு வககீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
கடந்த 17 ம் தேதி இந்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜுனா சார்பில் அவரது வழக்கறிஞர் கே நிஷ்வாக் இந்த நோட்டீசை அனுப்பி உள்ளார். அதில், ''கடந்த 9ம் தேதி தனியார் தொலைக்காட்சியில் இரவு 8.50 மணிமுதல் 9.10 மணி வரை ஒளிபரப்பான லைவ் இண்டர்வியூவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்பாக தனிப்பட்ட முறையில் அவதூறான கருத்துகளை பேசி உள்ளீர்கள்.
இந்த கருத்தை திரும்ப பெற்று பொதுவெளியில் மன்னிப்பு கோர வேண்டும். இதனை செய்ய புகழுக்கு களங்கம் விளைவித்ததாக கூறி ரூ.1 கோடி கோரி நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. திமுகவின் பரந்தாமன் தற்போது அடிக்கடி பத்திரிகையாளர்களை சந்தித்து தவெக மற்றும் தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வரும் நிலையில் அவருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் திமுகவின் பரந்தாமன் தனது கருத்தை திரும்ப பெறவும், மன்னிப்பு கோரவும் முடியாது என்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பரந்தாமன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''நோட்டீஸ் அனுப்பி வழக்கு போடுவேனு சொன்னா பயந்திடுவேன், பிரஸ் மீட் பண்ணமாட்டேன்னு நினைக்கிறீங்களா ஆதவ் அர்ஜுனா. வழக்கெல்லாம் வழக்கம்போல நாங்க நீதிமன்றத்துல சந்திப்போம்.
நோட்டீஸ் அனுப்பி வழக்கு போடுவேனு சொன்னா பயந்திடுவேன், பிரஸ் மீட் பண்ணமாட்டேன்னு நினைக்கிறீங்களா மாண்புமிகு @AadhavArjuna அவர்களே!வழக்கெல்லாம் வழக்கம்போல நாங்க நீதிமன்றத்துல சந்திப்போம்.பிரச்சனைக்கு பதில் சொல்லாம நோட்டீஸ் விடுரது கேஸ் போட்டுடு வேன்னு மிரட்ரது இப்படி பண்ணா எனக்கு உங்கள, உங்க கட்சியை, உங்க ஆட்சியை பார்த்தா சிரிப்பு தான் வருது. எனக்கு இந்த நேரத்துல ஒரு Dialogue தான் நினைவுக்கு வருது..என்ன நீங்க பயந்துட்டீங்களா குமாரு?@arivalayam @DMKITwing @dmk_youthwing @DMKWomensWing @DMKNRIWing
— I Paranthamen (@iparanthamen) November 19, 2026
பிரச்சனைக்கு பதில் சொல்லாம நோட்டீஸ் விடுரது கேஸ் போட்டுடுவேன்னு மிரட்ரது இப்படி பண்ணா எனக்கு உங்கள, உங்க கட்சியை, உங்க ஆட்சியை பார்த்தா சிரிப்பு தான் வருது. எனக்கு இந்த நேரத்துல ஒரு Dialogue தான் நினைவுக்கு வருது.. என்ன நீங்க பயந்துட்டீங்களா குமாரு?'' என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
