அழகிரி மகள் கயல்விழிக்கு இப்படியும் சிக்கல்.. சென்னை பேங்க் விவகாரம் பெரிதாகுது போலயே

Subscribe to Oneindia Tamil

சென்னை: மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீதான வழக்கில் போலீசார் இப்போது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். எஸ்பிஐ வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்ததாக எழுந்த புகாரில், கைது, ஜாமீன், உயர்நீதிமன்றத்தில் வழக்கு என அடுத்தடுத்து பல சம்பவங்கள் நடந்தன. இப்போது இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு வந்துள்ளது. அடுத்த விசாரணை டிசம்பர் 22-ம் தேதி நடைபெற உள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழிக்கு சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் சொந்தமாக வணிகக் கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடத்தில் எஸ்பிஐ வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் இருந்த லிஃப்ட் அடிக்கடி ரிப்பேர் ஆகி வந்ததாக கூறப்படுகிறது.

Alagiri Kayalvizhi Chennai Bank Case

இதனால் வங்கிக்கு வந்த முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் படிக்கட்டுகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்துடன் அவர்கள் நிறைய சிரமப்பட்டுள்ளனர்.

அழகிரி மகளுக்கு சொந்தமான கட்டிடம்

இதுதொடர்பாக வங்கிக் கிளை மேலாளர் ஹர்ஷின் சிங், கட்டிட பராமரிப்பு பணிகளை கவனித்து வந்த கயல்விழியின் உதவியாளரிடம் புகார் தெரிவித்துள்ளார். லிஃப்டை உடனடியாக சரிசெய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் பிரச்சினை சரியாகவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் வங்கி மேலாளர் நேரடியாக கயல்விழியை செல்போனில் தொடர்புகொண்டு புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த ஜூலை 20-ம் தேதி கயல்விழி வங்கிக் கிளைக்கு நேரில் சென்றுள்ளார்.

அப்போது அவருக்கும் மேனேஜர் ஹர்ஷின் சிங்குக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கயல்விழி பேசும்போது மேனேஜர் கன்னத்தில் கை வைத்திருந்தாராம்.. இதனால் ஆத்திரமடைந்த கயல்விழி மேலாளரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டதாக புகார் கூறப்பட்டது. மேலும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் வங்கி மேலாளர் ரூமிலிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

மேனேஜர் கன்னத்தில் அறைந்து..

இந்த சம்பவம் தொடர்பாக எஸ்பிஐ வங்கியின் சென்னை மண்டல வணிக அலுவலக மேலாளர் நமச்சிவாயம், ஜூலை 21-ம் தேதி போலீசில் புகார் அளித்தார். இதனடிப்படையில் சாஸ்திரி நகர் போலீசார் கயல்விழி மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, போலீசார் கயல்விழிக்கு சம்மன் அனுப்பவும், அவர் சாஸ்திரி நகர் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, சம்பவம் தொடர்பாக கயல்விழி விளக்கங்கள் அளித்துள்ளார். அவைகளை எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவாகவும் போலீசார் பதிவு செய்து கொண்டனர். இந்த விசாரணையின் முடிவில் கயல்விழியை போலீசார் கைது செய்தனர். எனினும், அவர் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

இதனிடையே, தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கயல்விழி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், வழக்கின் இறுதி அறிக்கையை 4 வாரங்களுக்குள் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சாஸ்திரி நகர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்த உத்தரவை தொடர்ந்து சாஸ்திரி நகர் போலீசார் வழக்கின் இறுதி அறிக்கையை நேற்று சைதாப்பேட்டை 9-வது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி கவிதா, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் எஸ்பிஐ வங்கி மேலாளரை தாக்கியதாக கயல்விழி மீது தொடரப்பட்ட வழக்கில் அடுத்தகட்ட நீதிமன்ற நடவடிக்கை தொடங்கியுள்ளது. இனி டிசம்பர் 22-ம் தேதி நடைபெறும் விசாரணையில் இந்த வழக்கு எந்த கட்டத்தை எட்டும் என்பது கவனிக்கப்படுகிறது.,.!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+