போதை பொருள் பிடிபட்டதை திசை திருப்பவே பி.மூர்த்தி வீட்டில் ரெய்டு! ஸ்டாலின் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப் பொருள் கடத்தல்கள் மத்திய அரசின் அமைப்புகளால் தமிழகத்தில் பிடிக்கப்படும் நிலையில் அதிலிருந்து திசை திருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் ரெய்டு நடத்தப்படுகிறது என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப் பொருள் கடத்தல்கள் ஒன்றிய அரசின் அமைப்புகளால் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தி அவர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது.

mk stalin madurai

கையாலாகாத த.வெ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடும், த.வெ.க.வினரின் குற்றச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கீனமும் சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது வாடிக்கையாகி விட்டது.

அரசியல் காரணங்களுக்காகத் த.வெ.க. அரசு தொடரும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு கழகம் வெல்லும்.

ஆறு மாத ஆட்சியில் சொல்லிக் கொள்ள எந்தச் சாதனையும் இன்றி, மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் 'தி.மு.க., தி.மு.க.,' என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரையை சேர்ந்த முன்னாள் திமுக அமைச்சர் பி.மூர்த்தியின் வீட்டில் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மதுரை மாவட்டம் பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கிரஷர் நிறுவனங்கள், செம்மண், கல்குவாரிகளில் அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக கனிமள வளத் துறையினர் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி பகுதிகளில் குவாரி குத்தகைதாரர் ஒருவர், அனுமதி பெறாத நிலத்தில் இருந்து சட்டவிரோதமாகவும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகவும் சரளைக் கற்கள வெட்டி எடுத்துள்ளதாகக் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் அரசுக்கு முறையே ரூ 2.32 கோடி மற்றும் ரூ 3.07 கோடி என மொத்தம் ரூ 5.39 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கனிமவளத்துறை ஆய்வின் அடிப்படையில் வருவாய்த் துறை அதிகாரிகள் தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் மதுரை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தனித்தனியாக இரு வழக்குகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில்தான் மதுரை ஐயர் பங்களாவில் உள்ள மூர்த்தியின் வீட்டில் காலை முதலே ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+