நடிகர் அஸ்வினுக்கு கல்யாணம் முடிந்தது.. இனி ரஜினி, கமல் பட இயக்குனர் வீட்டு மருமகன்! வெளியான போட்டோஸ்
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அஸ்வின் குமாருக்கு இன்று கோவையில் பிரமாண்டமாக திருமணம் முடிந்திருக்கிறது. பெற்றோர் சம்மதத்துடன் காதல் மனைவி புவனேஸ்வரியை கரம் பிடித்திருக்கிறார். தற்போது இவர்களுடைய திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அடிபொளி, குட்டி பட்டாஸ், யாத்தி யாத்தி, என்ன சொல்ல போகிறாய் போன்ற பாடல்கள் வெளியான சமயத்தில் அஸ்வினுக்கு ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் உருவாகிவிட்டனர். அதிலும் அடிபொளி பாட்டு எல்லாம் அந்த நேரத்தில் சோசியல் மீடியாவை கதற விட்டது. அதற்கு பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் அஸ்வினுக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டன. அந்த நிகழ்ச்சியில் சிவாங்கியுடன் அஸ்வினை இணைத்து பலரும் பேசி வந்த நிலையில் இப்போது அவர் திருமணம் செய்து இருக்கும் செய்தி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து இருக்கிறது.
இயக்குனர் வீட்டு மருமகள்
அஸ்வின் குமாரின் மனைவி புவனேஸ்வரி ஒரு சினிமா குடும்பத்தை சேர்ந்தவர். மறைந்த இயக்குனர் ராஜசேகரின் பேத்திதான் புவனேஸ்வரி. ரஜினிகாந்த் நடித்த தம்பிக்கு எந்த ஊரு, படிக்காதவன், மாப்பிள்ளை, மாவீரன் போன்ற படங்களையும் நடிகர் கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை, விக்ரம் போன்ற படங்களையும் இயக்கியவர் ராஜசேகர். அவர் இயக்கிய படங்கள் எல்லாமே குடும்ப செண்டிமெண்ட் படமாக தான் இருக்கும். ரஜினிகாந்த் கமல்ஹாசனுக்கு அந்த சமயத்தில் குடும்ப ரசிகர்களை உருவாக்கிக் கொடுத்ததும் ராஜசேகரின் படங்கள்தான்.

அஸ்வின் ஆரம்ப காலம்
ஆனால் இயக்குனர் ராஜசேகர் 43 வயதிலேயே மறந்துவிட்டார். இப்போது அவருடைய குடும்பத்துக்கு தான் அஸ்வின் மருமகனாகி இருக்கிறார். அஸ்வினை பொறுத்தவரையில் சினிமாவில் ஆரம்பத்தில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஓ காதல் கண்மணி, ஆதித்ய வர்மா உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்தார். அதேபோல விஜய் டிவியில் சில சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருந்தார்.
குக் வித் கோமாளி பிரபலம்
அந்த சமயத்தில் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலமாக அவருடைய ஸ்டைல், சமையல் செய்யும் விதம், கோமாளிகளுடன் அவர் பேசுவது, சிவாங்கியிடம் கலாட்டா செய்வது என இவருடைய இன்னொரு முகமும் ரசிகர்களுக்கு பிடித்து போய்விட்டது. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அஸ்வின் என்ன சொல்லப் போகிறார் என்ற படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து செம்பி, ஹாட்ஸ்பாட் 2 மச் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். செம்பி படத்தில் அவருடைய நடிப்புக்கு நல்ல பாராட்டு கிடைத்தது.

நடிகர் அஸ்வின் குமார் திருமணம்
சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்று முயற்சி செய்து வரும் அஸ்வின் இப்போது திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இதுவரைக்கும் அவருடைய திருமண விஷயமே ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று மாலை தான் இன்று (நவம்பர் 20ஆம் தேதி) திருமண நடக்கும் விஷயமே பலருக்கும் தெரிய வந்தது.
அதற்கு பிறகு அனைவரும் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி வந்தனர். ஆனால் மணப்பெண் யார் என்ற போட்டோ மட்டும் வெளியாகாமல் ரகசியமாக இருந்த நிலையில், இப்போது இவர் தாலி கட்டும் வீடியோக்கள் மற்றும் திருமணத்திற்கு பிறகு மனைவியோடு எடுத்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. பெண் ரசிகைகள் கொஞ்சம் பீல் பண்ணினாலும், ஆண் ரசிகர்கள் சந்தோஷமாக அஸ்வினுக்கு லைக், கமெண்ட் போட்டு வாழ்த்துகிறார்கள்.


Click it and Unblock the Notifications
