அர்ஜுன் இளைய மகள் கல்யாண போட்டோவால் வந்த பஞ்சாயத்து! வெளிநாட்டில் திருமணம் காரணம் இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அர்ஜுன் வீட்டில் இப்போது ஒரே கொண்டாட்டம் தான். இளைய மகள் அஞ்சனா அர்ஜுனின் கல்யாணம் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. 14 வருடங்களாக காதலித்தவரை அஞ்சனா கல்யாணம் செய்து இருக்கிறார். அவருடைய திருமணம் கிறிஸ்தவ முறைப்படியும், இந்து முறைப்படியும் 2 விதமாக நடந்து இருக்கிறது. ஆனால் இந்த திருமண புகைப்படங்களை அவர் சோஷியல் மீடியாவில் வெளியிட்டதும் தான் இப்போ இந்த குடும்பத்தை பற்றி இணையத்தில் பலரும் பேசி வருகின்றனர்.

Arjun

அர்ஜுன் இளைய மகள் கல்யாணம்

அதாவது அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா ஐசையா நட்டார் என்பவரை காதலித்து வந்தார். பல வருஷங்களாக தொடர்ந்து வந்த காதல் இப்போது இரண்டு குடும்பத்தினரின் சம்பந்தத்துடன் திருமணத்தில் முடிந்திருக்கிறது. சில மாதங்களுக்கும் முன்பே இவர்களுடைய எங்கேஜ்மென்ட் விட்டது. அதற்கு பிறகு தங்களுடைய திருமணத்தை இத்தாலியில் டஸ்கனி பகுதியில் இரண்டு குடும்பத்தினரும் விமர்சனமாக நடத்தி இருக்கிறார்கள். மூத்த மகள் கல்யாணத்தை தான் கட்டிய கோவிலில் வைத்து அர்ஜுன் நடத்தி இருந்தார். ஆனால் 2வது மகள் கல்யாணத்தை மட்டும் வெளிநாட்டில் வைத்து விட்டார். இது எதற்காக என்று பலரும் கேள்வி எழுப்பு வருகின்றனர்.

மூத்த மருமகளை காணவில்லை

அதுபோல முதலில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்று இருக்கிறது. அப்போது இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு கேக் வெட்டி தங்களுடைய மகிழ்ச்சியை கொண்டாடி இருக்கிறார்கள். அதற்கு பிறகு மீண்டும் இந்து முறையில் தாலி கட்டி திருமணம் நடைபெற்று வருகிறது. அப்போது எடுத்த புகைப்படங்களில் அர்ஜுன் அவருடைய மனைவி மற்றும் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆகியோர் மணமக்களுடன் இருக்கிறார்கள். ஆனால் அந்த போட்டோக்களில் எதிலும் அர்ஜுனின் மூத்த மருமகனான உமாவதியை காணவில்லை.

Arjun

மகள்களின் ஹீரோ

ஆக்சன் கிங் அர்ஜுனை பொறுத்தவரையில் சினிமாவில் எவ்வளவு ஆக்சன் காட்டினாலும் வீட்டில் குழந்தைகளுக்கு நிஜ வாழ்க்கையில் மகள்களுக்கு ஹீரோவாகத்தான் இருக்கிறார். மூத்த மகள் காதல் விஷயம் தெரிந்ததும் அதற்கு சம்மதித்து பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி வைத்திருந்தார். அதேபோல இரண்டாவது மகள் காதலிக்கும் விஷயத்திற்கும் அர்ஜுன் சம்மதித்து திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார். ஆனால் இந்த திருமண போட்டோக்களில் உமாபதி கலந்து கொள்ளாத காரணம் தான் இப்போ இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சர்ச்சைகள்

ஒருவேளை இந்த புகைப்படங்கள் எடுக்கும் சமூகத்தில் அவர் திருமண ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தாரா? அதனால்தான் அந்த புகைப்படங்களில் அவர் இல்லையா? அல்லது சூட்டிங் போன்ற வேறு ஏதாவது பிரச்சனையால் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லையா? இல்லன்னா குடும்பத்திற்குள் பிரச்சனையா? என்றெல்லாம் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதில் உண்மை என்ன நிலவரம் என்பது பற்றி அர்ஜுன் குடும்பத்தினர்கள் சொன்னால்தான் வெளியே தெரியும். அதற்கு முன்பு அதுவாக இருக்குமோ! எதுவாக இருக்குமோ? என்று சோசியல் மீடியாவில் பல கதைகள் சுற்றி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+