தூத்துக்குடியில் பைக்கில் அதிவேகம்.. கண்டித்த 2 பேரை வெட்டிய 5 சிறுவர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் நகரில் இரு சக்கர வாகனத்தில் அதிவேகத்தில் சென்ற சிறார்களை அங்கு இருந்தவர்கள் கண்டித்துள்ளனர்.. காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முடிந்த இரண்டு பேரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் என்ற சைமன். இவர் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த 30ஆம் தேதி, தெப்பக்குளம் பகுதியில் ஜெயக்குமார் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, 17 வயது சிறுவன் ஒருவன் பைக்கில் வேகமாகச் சென்றுள்ளார். இதனை ஜெயக்குமார் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

Thoothukudi bike crime

இந்த நிலையில், இன்று ஜெயக்குமார் மற்றும் எலக்ட்ரிக்கல் சர்வீஸ் கடை நடத்தி வரும் அவரது உறவினரான கதிரேசன் ஆகிய இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, பைக்கை வேகமாக ஓட்டிச் சென்ற 17 வயது சிறுவன் உள்பட 5 சிறுவர்கள் அங்கு வந்துள்ளனர்.

அவர்கள், தன்னைப் பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தது யார் எனக் கேட்டு ஜெயக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தான் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என ஜெயக்குமார் கூறியபோதும், அதனை ஏற்க மறுத்த சிறுவர்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்துள்ளனர்.

ஒருகட்டத்தில், தாங்கள் வைத்திருந்த அரிவாளால் ஜெயக்குமாரின் தலையில் வெட்டியுள்ளனர். இதனைத் தடுக்க முயன்ற கதிரேசனுக்கும் கையில் வெட்டு விழுந்துள்ளது. இதையடுத்து, 5 சிறுவர்களும் அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவலறிந்து விரைந்து வந்த எட்டயபுரம் போலீசார், காயமடைந்த இருவரையும் மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், 5 சிறுவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் எட்டயபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+