‘ரத்தத்துல பெத்தெடுக்க விதி விடுமா..’ குடும்ப போட்டோக்களை வெளியிட்ட அனிருத்.. நெகிழ்ச்சி பதிவு
சென்னை: அனிருத் தொடர்ந்து வெளியிட்டு வரும் திருமண போட்டோக்கள் ரசிகர்களை குஷியாக்கி வருகிறது. நேற்று திருமணத்தின் அழகான சில தருணங்களை பகிர்ந்து இருந்தார். தற்போது மனைவி காவியா மாறனுடன் இணைந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதோடு ரஜினிகாந்த், முக ஸ்டாலின், தனது அப்பா, மாமனார் என குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரபலங்களுடன் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார்.
திருமண போட்டோக்கள்
மேலும், அனிருத் வெளியிட்ட பதிவில், "எங்கள் மனம் நிறைந்து இருக்கிறது. நீங்கள் எங்களுக்கு கொடுத்த அன்பும், வாழ்த்துக்களும் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு முக்கியமானது. எங்களுடைய இந்த புதிய தொடக்கத்தை இன்னும் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி. உங்கள் அன்பை எல்லாம் எங்களுடன் எடுத்துச் செல்கிறோம்" என்று அனிருத் மற்றும் காவியா இணைந்து பதிவிட்டுள்ளனர்.

இந்த பதிவில் ரசிகர்களை கவனிக்க வைத்த இன்னொரு விஷயம் அனிருத் பயன்படுத்திருக்கும் "தீமா தீமா" பாடல் தான். விக்னேஷ் சிவனின் வரிகளில் அனிருத் இசையமைத்து பாடிய "தீமா தீமா" பாடலை இந்த திருமண புகைப்படங்களுக்கு பின்னணியில் பயன்படுத்தி இருக்கிறார். அதில் வரும் "உன் பக்கத்துல பல நான் படுக்க வழி சொல்லம்மா... உன் ரத்தத்துல பெத்தெடுக்க விதி விடுமா..." என்ற வரிகளையும் அவருடைய புகைப்படங்களுக்கு வைத்திருக்கிறார்.
அனிருத் பதிவு
காதல், திருமண வாழ்க்கை, ஒன்றாக எதிர்காலத்தை அமைத்துக் கொள்வது என அந்த பாடலின் வரிகள் இருக்கும் நிலையில் புதுமண தம்பதிகளின் புகைப்படங்களுக்கு இந்த பாடல் நல்ல பொருத்தமாகவே அமைந்திருக்கிறது. ஏற்கனவே தனது திருமண வீடியோவில் "அவளுக்கென" பாடலை பயன்படுத்துகின்றார் அனிருத். இப்போது "தீமா தீமா" பாடலை தேர்ந்தெடுப்பதும் ரசிகர்களுக்கு ஒரு அழகான சர்ப்ரைஸ். இசையமைப்பாளராக தனது வாழ்க்கையில் முக்கியமான தருணங்களையும் இசையோடு சேர்த்து ரசிகர்களிடம் பகிர்ந்து வருவது ரசிக்கும்படி இருக்கிறது.

திருமண போட்டோக்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலுடன் புதுமண தம்பதிகள் எடுத்திருக்கும் புகைப்படங்களும் இருக்கின்றது. அனிருத் தனது மாமா ரஜினியுடன் இருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் எப்போதும் ரசிப்பார்கள், இப்போது திருமண நிகழ்வில் அவருடன் எடுத்த புகைப்படங்கள் மேலும் கவனம் பெற்று வருகிறது. அதுபோல காவியாவின் தந்தை கலாநிதி மாறன் தோளில் அனிருத் கைப்போட்டு நெருக்கமாக நிற்கும் புகைப்படங்களும், திருமணத்தில் இரண்டு குடும்பங்களும் ஒன்றாக கலந்து கொண்ட சந்தோஷமான தருணங்களையும் அனிருத் ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.
அனிருத் ஸ்பெஷல் போஸ்ட்
ஏற்கனவே அனிருத் திருமணம் ரகசியமாக நடந்தது. அதில் நடந்த ஒவ்வொரு ஸ்பெஷல் தருணத்தை இப்போ அவரே ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார். இன்று காலையில் உதயநிதி ஸ்டாலின் அனிருத் மற்றும் காவியா கல்யாணத்தில் எடுத்த குடும்ப புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து, இருவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து அந்த நிகழ்வில் எடுத்த மேலும் சில புகைப்படங்களை அனிருத்த் பகிர்ந்து இருக்கிறார்.

அனிருத், காவியா கல்யாணம் கடந்த நவம்பர் 11ஆம் தேதி கிரீஸில் நடைபெற்றது. நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் சினிமா, அரசியல், தொழில் துறையை சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் தனது திருமணத்தின் முதல் புகைப்படத்தை வெளியிட்ட போது, "My once in a lifetime.. for real lifetime" என்று கொடுத்த கேப்ஷன் கூட வைரல் ஆனது.
Our hearts are full. Your love and blessings mean more to us than words can express. Thank you for making this new beginning even more special 🙏🏻 We carry all your love with us 🫶– Kaviya and Anirudh https://t.co/9veMfMMezK
— Anirudh Ravichander (@anirudhofficial) November 20, 2026
அனிருத் ரிசப்ஷன்
அதுபோல இன்று நவம்பர் 20ஆம் தேதி சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோலா ஹோட்டலில் அனிருத் காவியா திருமண வரவேற்பு நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சென்னையில் நண்பர்கள், உறவினர்கள், திரையுலகினார்கள், விளையாட்டு துறையினர், அரசியல் பிரபலங்கள் என முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருமண புகைப்படங்களை ஒவ்வொன்றாக வெளியீட்டு ரசிகர்களையும் இந்த கொண்டாட்டத்தில் இணைத்து கொண்ட அனிருத் இப்போது இருவரும் இணைந்து நன்றி தெரிவித்து இருப்பதுடன் அதற்கு தீமா தீமா பாடலையும் சேர்த்து இருப்பது ரசிகர்களுக்கு இன்னும் நெருக்கமான தருணமாக அமைந்திருக்கிறது. இன்றைய ரிசப்ஷனில் இருந்து இன்னும் பல புகைப்படங்கள் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உருவாகி இருக்கிறது.



Click it and Unblock the Notifications
