அவளுக்கென புதிதாய் மாறினேன்.. கல்யாணத்துக்கு பிறகு மனைவியோடு அனிருத் வெளியிட்ட பதிவு
சென்னை: அனிருத் கல்யாணம் முடிந்த பிறகு அவருடைய திருமண போட்டோக்கள், வீடியோக்கள் என ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களை ரசிக்க வைத்து வருகிறது. தற்போது தனது மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். மனைவியை கட்டி அணைத்தபடி இருக்கும் அந்த போட்டோக்களுடன், "அவளுக்கான புதிதாய் மாறினேன்" பாடலையும் சேர்த்து அனிருத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்ததும் ரசிகர்களிடம் கவனம் ஈர்ந்து வருகிறது.
அனிருத் திருமணம் எங்கே நடைபெறும்? எப்போ நடைபெறும் என்பதையே அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தார். ஆனால் கல்யாணத்திற்கு பிறகு மாலை வேளையில் தனது திருமண போட்டோக்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதற்குப் பிறகு சில நாட்கள் கழித்ததும் இப்போ இந்த ரொமான்டிக் புகைப்படங்களை அவர் பகிர்ந்திருக்கிறார். பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

கிரீஸில் கல்யாணம்
எப்போதும் மேடையில் உற்சாகமாகவும், நண்பர்களுடன் ஜாலியாகவும், இசை நிகழ்ச்சிகளில் ஃபுல் எனர்ஜியாகவும் பார்க்கும் ரசிகர்கள் அவருடைய இந்த காதல் பக்கத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். அனிருத் காவ்யா மாறன் திருமணம் கடந்த நவம்பர் 11ஆம தேதி கிரீஸில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருமண போட்டோக்களை அனிருத் சோசியல் மீடியாவில் பகிர்ந்து, "My once in a lifetime, for a lifetime" என்று குறிப்பிட்டிருந்தது ரசிகர்களுடைய அதிகம் பேசப்பட்டது.
அந்த வார்த்தைகளிலே தனது வாழ்க்கையில் காவியா எவ்வளவு முக்கியமானவர் என்பதை அவர் வெளிப்படுத்தி இருந்தார். அதுபோல கல்யாணத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவருடைய குடும்பத்தினர், மு க ஸ்டாலின் மற்றும் அவருடைய குடும்பத்தினர், இன்னும் சில முக்கிய பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமண போட்டோக்களில் இருவரும் அழகான உடை அணிந்து, மலர் அலங்காரங்களுக்கு நடுவே ஜோடியாக நிற்கும் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
செயின் மாற்றி திருமணம்
அதுபோல திருமணமும் தாலி கட்டி நடைபெறவில்லை. ரஜினிகாந்த் அனிருத் கையில் கொடுத்த செயினை காவியா மாறன் கழுத்தில் அனிருத் அணிய, உதயநிதி ஸ்டாலின் கொடுத்த செயினை காவியா அனிருத் கலுத்தில் போட்டு இருந்தார். இருவரும் மாலை மற்றுவதுபோல செயினை மாற்றி திருமணத்தை முடித்து இருந்தனர். அந்த செயின் உடன் தான் இருவருமே சென்னை ஏர்போர்ட்டுக்கும் வந்திருந்தனர். இதுவும் இணையத்தில் அதிகமாக கவனிக்கப்பட்டது.

அனிருத் ரிசப்ஷன்
அனிருத் இசையமைத்த காதல் பாடல்களை இத்தனை வருஷங்களாக ரசித்து வந்த ரசிகர்கள் இப்போது அவருடைய சொந்த வாழ்க்கையில் இப்படி ஒரு காதல் தருணத்தை பார்த்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அனிருத் ரிசப்ஷன் இன்னும் சில நாட்களில் நடக்க இருக்கும் நிலையில் அதற்கு முன்பு இந்த புகைப்படங்களை அவர் பகிர்ந்து இருக்கிறார். அதேபோல திருமணத்தில் ஒரு சிலர் மட்டும் கலந்து கொண்டதால் ரிசப்ஷனில் சினிமா, அரசியல், விளையாட்டு என எல்லா துறைகளிலிருந்தும் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பெஷல் சந்திப்பு
அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்யும், முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலினும் நேருக்கு நேராக சந்தித்துக் கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது. ஏற்கனவே நடிகர் விஜய் முதல்வரான பிறகு ரஜினியை இன்னும் சந்திக்கவில்லை. அப்படி இருக்கும்போது இந்த நிகழ்ச்சியில் ரஜினியையும் முதல்வர் விஜய் சந்திப்பாரா? என்ற கேள்விகளும் இருக்கிறது. எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் இன்னும் சில நாட்களில் பதில் தெரிந்து விடும்.




Click it and Unblock the Notifications
