மீண்டும் பவர் சென்டராக வந்த புதின்! முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு வெளியான முக்கிய அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் தங்களின் வரலாற்று சிறப்புமிக்க முத்தரப்பு உச்சி மாநாட்டுக்கு பிறகு, கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இதில் ரஷ்யாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதை போல தெரிகிறது.

மூன்று மிகப் பெரிய வல்லரசு தலைவர்கள் ஒன்றிணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் 4 முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

Russia

1. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும், உலகளாவிய சவால்களை திறம்பட எதிர்கொள்வதாகவும், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை நிலை நாட்டவும், ஐநா சபையின் திருத்தங்களை கொண்டு வரவும் உறுதியளித்துள்ளன. தற்போது இருக்கும் ஐநா அமைப்பு பலவீனம் அடைந்துள்ளதாக கருதப்படும் நிலையில், பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் கொண்ட இந்த 3 நாடுகளும் இணைந்து ஐநாவை மாற்றி அமைக்க முன்வந்திருப்பது சர்வதேச அரசியலில் பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

2. அதேபோல அனைத்து நாடுகளின் நலனுக்காகவும், தடையற்ற எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்ய.. சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிக்க 3 நாடுகளும் திட்டமிட்டுள்ளன. ரஷ்யா எண்ணெய் விற்பனைக்கு எதிராக மேற்கத்திய நாடுகளின் சர்வதேச தடைகள் அமலில் இருக்கும் போதிலும், அமெரிக்காவும், சீனாவும், ரஷ்யாவுடன் இணைந்து எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க ஒப்புக்கொண்டிருப்பது.. ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்படுவதற்கான சிக்னலாக பார்க்கப்படுகிறது.

3. மூன்றாவது விஷயமாக சர்வதேச நீதிமன்ற விவகாரத்தை குறிப்பிட்டிருக்கின்றனர். ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் சட்டபூர்வ பாதுகாப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் அது போன்ற அமைப்புகள், தங்களது அதிகார வரம்பை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும் எச்சரித்துள்ளனர். உக்ரைன் போர் விஷயத்தில், போர் குற்றங்களுக்காக ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக.. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த சூழலில் புதினுக்கு ஆதரவாகவும், நீதிமன்றத்திற்கு எதிராகவும் அமெரிக்காவும், சீனாவும் குரல் கொடுத்திருப்பது புதினுக்கு கிடைத்த மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாக பார்க்கப்படுகிறது.

4. நான்காவது விஷயம் அணு ஆயுதத்தை பற்றியதாகும். அணு ஆயுத போரில் யாரும் வெல்ல முடியாது! அது ஒருபோதும் நடத்தப்படக்கூடாது! என்பதை மூன்று தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளனர். அணு ஆயுதங்களை குறைக்கவும், அணு ஆயுத பரவலை தடுக்கவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும் ஒப்புக்கொண்டுள்ளனர். மாநாட்டிற்கு முன்பு, அதிபர் ட்ரம்ப் அணு ஆயுத குறைப்பு குறித்து வலியுறுத்திய நிலையில்.. 'நியூ ஸ்டார்ட்' ஒப்பந்தம் காலாவதியான பிறகு, சீனாவை உள்ளடக்கிய ஒரு புதிய அணு ஆயுத கட்டுப்பாட்டு பேச்சுவார்த்தைக்கு இந்த அறிக்கை அடித்தளம் போட்டிருக்கிறது.

இப்படியாக 4 முக்கியமான பாயிண்டுகள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 4 பாயிண்ட்களில் 2 ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளது. இதன் மூலம் புதின் மீண்டும் பவர் சென்டராக உருவெடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+