ஆசையாக பிரியாணி வாங்கி சாப்பிட்ட குடும்பம்.. அடுத்த சில நிமிடங்களில் விபரீதம்! 9 பேர் பாதிப்பு!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆசையாக பிரியாணி சாப்பிட்ட குடும்பத்தினர் மொத்தமாக மருத்துவமனையில் அனுமதி ஆகியுள்ளனர். பிரியாணி சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்ட நிலையில், அவர்கள் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 5 பேர் குழந்தைகள் என்பதும் அதிர்ச்சி தரும் செய்தியாகவே உள்ளது.

ஹைதராபாத் என்றாலே இங்கு பலருக்கும் நினைவுக்கு வருவது அதன் பிரியாணி தான். ரோட்டிற்கு 4 கடை என்ற ரேஞ்சுக்கு ஹைதராபாத்தில் பிரியாணி கடைகள் கிடக்கும். இருப்பினும், அனைத்து ஹோட்டல்களிலும் முறையாகவும் சுகாதாரமாகவும் உணவை ரெடி செய்கிறார்கள் என சொல்லி விட முடியாது.

Hyderabad Biryani Food Poisoning Hyderabad Biryani Food Poisoning

ஹைதராபாத்

ஹைதராபாத் நகரில் உணவு பாதுகாப்பு துறை நடத்தும் ரெய்டுகளில் பல முக்கிய உணவகங்கள் கூட சிக்குகிறது. விளக்கம் கேட்டு நோட்டீஸ், லைசன்ஸ் சஸ்பெண்ட் செய்யப்படுவது என நடவடிக்கையும் பாய்கிறது. இதுவே அங்கு என்ன மாதிரியான ஒரு சூழல் இருக்கிறது என்பதை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்த சூழலில் தான் அங்கு மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது

பிரியாணி

அதாவது அங்குள்ள அம்பர் பேட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் வாங்கிய மண்டி பிரியாணியை சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் குழந்தைகள் ஆவர். பிரியாணி சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அம்பர் பேட்டில் காந்தி சிலை அருகே உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து இந்த குடும்பத்தினர் பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே உடல்நிலை பாதிக்க ஆரம்பித்துள்ளது. முதலில் வாந்தி பிறகு, வயிற்று போக்கு ஏற்படவே 9 பேரும் முதலில் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், ஒரு பெண்ணின் உடல்நிலை மோசமடைந்ததாகவும், அவருக்கு நரம்பியல் தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிகிச்சை

இதையடுத்து குடும்பத்தினர் நள்ளகுண்டாவில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகியுள்ளனர். ஆனால், 7 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி அங்கு இல்லாததால், சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் 9 பேரையும் மேல் சிகிச்சைக்காக உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இப்போது வரை அவர்களுக்கு மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உணவு பாதுகாப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர், குடும்பத்தினர் சாப்பிட்ட மண்டி பிரியாணியின் மாதிரியை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய உடல்நிலை, ஹோட்டலில் வழங்கப்பட்ட உணவின் தரம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+