பிரமோஷனில் மிஸ்கின் தவறாக தொட்டாரா? அப்போது என்ன நடந்தது? நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சத்தியவான் சாவித்திரி திரைப்படத்தின் பிரமோஷனில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்ட போது, பக்கத்தில் உட்கார்ந்து இருந்த மிஷ்கின் அவரது தொடையில் கைவைத்து பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் கீர்த்தி சுரேஷ் மிஸ்கின் கை பக்கத்தில் தனது கையை கொண்டு போகும் நேரத்தில் மிஸ்கின் தொடையில் இருந்த கையை சட்டென எடுத்திருப்பார். இதை பார்த்த நெட்டிசன்கள் ஒரு பெண்ணின் தொடையில் கை வைப்பது சரியா? என்று பலரும் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் அப்போது என்ன நடந்தது என்று கீர்த்தி சுரேஷ் பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

நாளை சத்தியவான் சாவித்திரி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே தனுஷ் நடித்திருக்கும் ஓம் படமும் வெளியாகிறது. இதனால் இந்த படத்திற்கான ப்ரமோஷன் பெரிதாகவே போய்க் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மிஸ்கின், பிரகிடா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அதேபோல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கீர்த்தி சுரேஷ் இப்போ பிஸியான நடிகையாக இருக்கிறார்.

Mysskin

டோரதி கேரக்டர்

சமீபத்தில் அவர் நடிப்பில் டோரதி, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்கள் வந்தது. அதிலும் டோரதியில் கொஞ்சம் காட்சியில் வந்திருந்தாலும் அது கூட அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது. அந்த படத்தின் முக்கிய ஆலமரமே கீர்த்தி சுரேஷ் என்று சொல்லும் அளவிற்கு அந்த படத்தின் கதை இவருக்கு அமைந்துவிட்டது. அதற்காகவே பலரும் அவரை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க சத்தியவான் சாவித்திரி படத்தின் பிரமோஷனுக்காக பட குழுவினர்கள் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து இருந்தனர்.

கீர்த்தி சுரேஷுக்கு மோதிரம்

அப்போது மிஸ்கினும், கீர்த்தி சுரேஷும் பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்திருந்தனர். அப்போது டோரதி படத்தில் நடித்ததற்காக கீர்த்திக்கு தங்க மோதிரத்தை மிஸ்கின் பரிசாக வழங்கினார். ஏற்கனவே டோரதி படத்தின் வெற்றி விழாவில் அந்த படத்தில் நடித்த சனந்த் மற்றும் ரிஷிகாந்துக்கு மிஸ்கின் மோதிரத்தை கொடுத்திருந்தார். ஆனால் அப்போது கீர்த்தி சுரேஷ் இல்லாததால் நான் இப்போ இவருக்கு கொடுக்கிறேன் என்று சொல்லி இருந்தார்.

Mysskin

கலாய்த்த நெட்டிசன்கள்

மேலும் அந்த நிகழ்ச்சியில் மிஸ்கின் பேசும்போது, "கீர்த்தி சுரேஷ்க்கு இனிவரும் காலங்களில் நடிகைகள் திலகம் என்று போடுங்கள். அவர் அந்த பட்டத்துக்கு தகுதியானவர். நான் அவர் தலையில் நடிகையர் திலகம் என்ற வைரம் வைத்திருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார். அப்படி பேசிக் கொண்டிருக்கும்பது கீர்த்தி சுரேஷின் தொடையில் கைபட்டது இருக்கிறது, கீர்த்தியும் அதை கவனித்து அவர் கை பக்கத்தில் தன்னுடைய கையை கொண்டு வந்தார். அதற்குள் மிஷ்கின் கையை எடுத்து விட்டார். இதை பார்த்த ரசிகர்களில் சிலர் மிஷ்கின் தொடையில் கை வைத்ததை கீர்த்தி விரும்பவில்லை, இது பேட் டச். அதனால்தான் கீர்த்தி சுரேஷ் தடுக்க வந்தார் என்று சோசியல் மீடியாவில் காலையிலிருந்து வீடியோக்கள் ட்ரோல் ஆகி கொண்டு இருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் விளக்கம்

இந்த நிலையில் இது குறித்து கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "முதலில் எனது முகத்தில் உங்களுக்கு எங்கே அசௌகரியம் தெரிந்தது? நாங்கள் ரெண்டு பேரும் தந்தை மகள் போன்ற உறவை பகிர்ந்து கொள்கிறோம் என்று அவரும், நானும் சொன்னது உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா? இரண்டாவதாக ஒரு வேலை நான் அசௌகரிகமாக உணர்ந்ததாகவே வைத்துக் கொள்ளுங்கள், படங்களில் நாங்கள் ஒருவரை ஒருவர் தொட்டுக்கொண்டு நடிக்கிறோம் என்பதால் பொது இடங்களில் அப்படி செய்யும் போது எனக்கு எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாது என்று சொல்கிறீர்களா? நீங்கள் சில விஷயங்களை சரியாக புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது" என்று அந்த பதிவில் கீர்த்தி சுரேஷ் சொல்லி இருக்கிறார்.

ஒரு வழியாக காலையில் இருந்து மிஸ்கினை நெட்டிசன்கள் அடித்துக் கொண்டிருந்த சமயத்தில் இப்போ கீர்த்தி சுரேஷ் வந்து அவரை காப்பாற்றி விட்டிருக்கிறார். தெரியாமல் நடந்த சம்பவத்தை சூம் போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வந்த நிலையில், இப்ப அதற்கு சம்பந்தப்பட்ட கீர்த்தி சுரேஷ் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். சர்ச்சைக்கு பெயர் போன மிஸ்கின் பல நிகழ்ச்சிகளில் பேசுவது தான் சர்ச்சை ஆகும், ஆனால் இப்போ அவர் கை தெரியாமல் பட்டது கூட சர்ச்சையாகி இருக்கிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+