தனிஷ்க் நகைக்கடை கொள்ளை மூளையாக செயல்பட்டது யார்? நிஷாந்தை காவலில் விசாரிக்க போலீஸ்க்கு அனுமதி

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை தனிஷ்க் நகை கடை கொள்ளை வழக்கில், ரூ.40 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த நிஷாந்தை 1 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து மதுரை மாவட்ட முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதி ராஜபிரபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நகை கொள்ளை வழக்கில் உள்ள தொடர்புகள் குறித்து நிஷாந்த்திடம் விசாரணை நடத்த 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நீதிபதி1 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மட்டுமே அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

Madurai jewellery store robbery case

நிஷாந்தை துன்புறத்தக் கூடாது

மேலும், விசாரணையின் போது நிஷாந்த் எந்தவித துன்புறுத்தலுக்கும் ஆளாக்ககூடாது. சட்டத்திற்கு உட்பட்டு தான் விசாரணை நடத்தப்பட வேண்டும். நிஷாந்தை அவரது வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதி அளிக்கலாம் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, நிஷாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

கொள்ளை நடந்தது எப்படி?

மதுரை காளவாசல் பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் உள்ள பிரபல தனிஷ்க் ஜூவல்லரியில் கடந்த 12 ஆம் தேதி ரூ.40 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளை போனது. இந்த துணிகர கொள்ளை சம்பவம் தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 9 தனிப்படைகள் அமைத்து சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்த தேடிய போது, மதுரை பழங்காநத்தம் அருட்பெரும்ஜோதி தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ் என்பவரது மகன் நிஷாந்த் (வயது 25) தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவரது வீட்டில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்திய நிலையில், நிஷாந்தின் தந்தை சுரேஷ், இன்ஸ்டா பிரபலமுமான மீனாட்சி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். நிஷாந்த் அடிக்கடி இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்ததால் அவரை பிடிக்க தாமதம் ஆனது. ஆனால் ஆம்னி பஸ் டிரைவர் நிஷாந்த் பற்றி தகவல் கொடுத்ததையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.

நிஷாந்த் சிக்கியது எப்படி?

அதாவது கடந்த 16 ஆம் தேதி தர்மபுரியில் ஆம்னி பஸ்சில் பயணித்த அவர் மீது பஸ் டிரைவருக்கு சந்தேகம் எழுந்ததால் அவர் அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்படி அங்கு வந்த போலீசார் பஸ்சின் ஜன்னல் வழியாக வெளியே குதித்து தப்ப முயன்ற நிஷாந்தை கைது செய்து மதுரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து இன்று நிஷாந்தை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் நீதிமன்றம் ஒரு நாள் மட்டுமே போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.

மூளையாக செயல்பட்டது யார்?

தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் நிஷாந்த், நிஷாந்தின் தந்தை சுரேஷ், இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொள்ளையில் மூளையாக செயல்பட்டது யார்? மேலும் யாருக்கும் இந்த கொள்ளையில் தொடர்ப்பு இருக்கிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் குறித்து நிஷாந்திடம் போலீசார் விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. எனவே விசாரணைக்கு பிறகு மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+