அப்பா கை பிடித்து சென்ற திருப்பூர் தண்டவாளம்.. 6 மாதம் கழித்து அதே இடத்தில் நின்ற மகள்! ஏன் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: காலையில் மகளை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிய தந்தை, வழியில் நடந்த ரெயில் விபத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்... இந்த சம்பவம் நடந்து 6 மாதங்களாகி விட்டது. ஆனால் இந்த 6 மாதங்களும் தந்தையின் இழப்பிலிருந்து மகள் மீளவில்லை.. ஆறு மாதங்களுக்குப் பிறகு, அதே இடத்தில் நேற்று சென்றுள்ளார் அந்த 16 வயது மகள்.. என்ன நடந்தது திருப்பூரில்?

திருப்பூர் செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ஜானகி. மங்கலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களது ஒரே மகள் சாதனா (16). ஜானகி வேலை பார்த்த அதே பள்ளியில் சாதனா பிளஸ்-2 படித்து வந்தார்.

Tiruppur Railway Track

திருப்பூர் தந்தை - மகள்

திருமணமாகி நீண்ட காலத்துக்குப் பிறகு பிறந்த குழந்தை என்பதால் சாதனா மீது பெற்றோர் 2 பேருமே அளவில்லாத அன்பை பொழிந்துள்ளனர்.. அதிலும் கார்த்திக்குக்கு மகள் என்றால் கொள்ளை பிரியமாம்.. அதனால் மகளை மிகவும் செல்லமாக வளர்த்தார். சாதனா ஆசைப்பட்டு எதைக் கேட்டாலும் வாங்கிக் கொடுத்து விடுவாராம்.. மகளுக்கு எந்தக் குறையும் தெரியாமல் பார்த்துக் கொண்டார்.

சாதனா படிக்கும் பள்ளி, வீட்டிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. வழியில் ரெயில்வே தண்டவாளம் இருந்ததால் தினமும் அந்தப் பகுதியை கடந்து செல்ல வேண்டியிருந்தது. மகளின் பாதுகாப்பில் அதிக அக்கறை கொண்ட கார்த்திக், தினமும் காலையில் அவரை பள்ளிக்கு அழைத்து செல்வாராம்.. தண்டவாளத்தை பாதுகாப்பாக கடக்க உதவி செய்து, பள்ளியில் விட்டுவிட்டு அதற்கு பிறகே வீடு திரும்புவார்..

ரயில்வே தண்டவாளம்

அப்படித்தான் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, மகளை பள்ளியில் விட்டுவிட்டு திரும்பியிருக்கிறார் கார்த்திக்.. ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது வேகமாக வந்த ரெயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தந்தையின் மரணம் சாதனாவை மிகவும் பாதித்து விட்டது..

தன்னிடம் அளவில்லாத பாசம் காட்டிய அப்பா இனி இல்லை என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கு முன்பு எப்போதும் கலகலப்பாக இருந்தவர், அப்பாவின் மறைவுக்குப் பிறகு அமைதியாக மாறினார். பள்ளியிலும் தனது தோழிகளிடம் அப்பாவைப் பற்றியும், அவருடன் இருந்த நினைவுகள் பற்றியும் அடிக்கடி பேசி வந்தார். அப்பா இல்லாமல் தன்னால் இருக்க முடியவில்லை என்று சொல்லி அடிக்கடி கண் கலங்குவாராம்..

சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்

அவருடன் படிக்கும் மாணவிகளும், ஆசிரியைகளும் பலமுறை ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் அப்பாவை இழந்த வேதனையில் இருந்து சாதனாவால் மீள முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு கிளம்பிய சாதனா, வீட்டின் அருகே இருந்த ரெயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு தனது அப்பாவின் உயிரிழந்த அதே இடத்தில் நின்றிருந்தார். அப்போது டெல்லியிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த வழியாக வந்தது. அந்த ரெயில் முன் பாய்ந்த சாதனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஒரே மகளையும் இழந்து

இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருப்பூர் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மாணவியின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவர் இறந்த 6 மாதங்களிலேயே தனது ஒரே மகளையும் இழந்த ஜானகியின் நிலை, மிகவும் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.. மகளின் உடலை பார்த்து அவர் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களையும் கண்கலங்க வைத்தது. தந்தையை ரெயில் விபத்தில் பறிகொடுத்த அதே இடத்தில் மகளும் உயிரிழந்த சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது....!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+